December

வீணாகும் மனித வாழ்வு

December 14

“I have created him for my glory, I have formed him; yea, I have made him.” (Isa. 43:7)

One of the great tragedies of our existence is to see men and women living wasted lives. Man, after all, was made in the image and likeness of God. He was destined for a throne, not for a bar stool. He was created to be a representative of God, not a slave of sin. In answer to the question, “What is the chief end of man?,” the Shorter Catechism reminds us that “The chief end of man is to glorify God and to enjoy him forever.” If we miss that, we miss everything.

J. H. Jowett weeps as he realizes that the course of many people through the years is “not so much the transit of a man as the passage of an amoeba.” He grieves to see men who have drivelled down to be nothing more than “minor officials in transient enterprises.” He notes with pathos the epitaph of one who was “born a man and died a grocer.”

F. W. H. Myers gazes out over humanity and writes:

Only like souls I see the folk there under,
Bound who should conquer, slaves who should be kings,
Hearing their one hope with an empty wonder,
Sadly contented in a show of things.

When Watchman Nee was a young man, he was moved to see “human creative gift squandered for an avaricious employer… In one of the shops of the old city’s lacquer street an anonymous craftsman had already spent six years on three hardwood leaves of a four-leaf screen, carving reliefs of flowers in the natural wood, white against the black lacquered surface. For this he was paid eighty cents a day, ‘rain, shine, holidays, or revolution,’ as the shop owner put it, plus his rice and vegetables and a plank to sleep on. Having once acquired skill for this work, he might make only two such screens before eyes and nerves failed and he was flung out with the beggars.”

The tragedy of life today is that men fail to appreciate their high calling. They go through life hugging the subordinate. They creep instead of fly. As someone has said, they rake around in a muck heap, not noticing the angel above them who is offering them a crown. Their time is spent making a living instead of making a life.

Many today are concerned over the spoiling of natural resources but they never think of the greater loss of human resources. Many campaign to save endangered species of birds, animals and fishes, but they can look on people wasting their lives and not be moved. One human life is worth more than the whole world. To fritter away that life is the unutterable tragedy. One woman said, “I am seventy, and I have done nothing with my life.” What could be more tragic?

டிசம்பர் 14

நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்தேன். ஏசாயா 43:7

வீணாகும் மனித வாழ்வு

ஆண்களும் பெண்களும் தங்களுடைய வாழ்க்கையை வீணாக்குகின்றனர் என்பதைக் காண்பது மிகப்பெரிய சோகக் கதைகளில் ஒன்றாகும். தேவன் தம்மைப்போல, தமது சாயலின்படி மனிதனைப் படைத்தார். அவன் அரியணையில் அமர்வதற்கென உருவாக்கப்பட்டவன். மதுக்கடை இருக்கையில் அமர்வதற்கென உருவாக்கப்படவில்லை. தேவனுடைய பிரதிநிதியாக அவன் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறான். பாவத்திற்கு அடிமையாகும்படி உண்டாக்கப்படவில்லை. ‘மனித வாழ்வின் சிறந்த நோக்கம் யாது?” என்னும் கேள்விக்கு சார்டர் கேட்டசிம் என்பார், ‘மனித வாழ்வின் சிறந்த நோக்கம் யாதெனில் தேவனை மகிமைப்படுத்துவதும், அவரை என்றென்றும் அனுபவித்துக் களிகூருவதுமேயாகும்” என்று விடைபகர்ந்து இவ்வுண்மையை நமக்கு வெளிப்படுத்தி இருக்கிறார். அதனை நாம் தவற விடுவோமென்றால் எல்லாவற்றையும் தவறவிட்டவர்களாவோம்.

பல மனிதர்களுடைய நடத்தையைப் பல்லாண்டுகள் காணும்போது ஒரு அமிபா என்னும் நுண்ணுயிரின் வாழ்க்கைப் பாதைக்குக்கூட அது ஒப்பாகக் காணப்படவில்லை என்று வருத்தமுற்றவராகக் கூறுகிறார் திருவாளர் J. H. ஜெவெட். ‘கணப்பொழுது இருந்து மறைகிற நிறுவனத்தில் தாழ்ந்த பதவி வகிக்கும் மனிதர்களைப் போல” அவர்கள் மதியீனமாய் நடந்து கொள்கின்றனர் என அவர் கூறுகிறார். ‘மனிதானாகப் பிறந்து மளிகைக்கடைக்காரனாக இறந்தார்.” என்று கல்லறையில் எழுதப்பட்ட மனிதர்களைக் குறித்து அவலத்தோடு எழுதுகிறார். ‘ஒரே வித மனப்பான்மையுடைய மக்கள் கூட்டத்தையே நான் காண்கிறேன். வெற்றிபெற வேண்டியவர்கள் கட்டுண்டு கிடக்கின்றனர். அரசர்களாக இருக்கவேண்டியவர்கள் அடிமைகளாக வாழ்கின்றனர். வெளியரங்கமாகப் பளிச்சிட்டுக் காணும் பொருட்களில் மனநிறைவு கொண்டவர்களாக, வெறுமையில் நம்பிக்கை உடையோராய் வாழ்கின்றனர். இது எவ்வளவு துக்கத்திற்குரியதாயிருக்கிறது” என்று F. W. H. மையர்ஸ் என்பார் மனுக்குலத்தைப் பற்றிய தமது கருத்தை எடுத்துரைக்கிறார்.

மனிதர்கள் தங்களுக்கு அருளப்பட்டிருக்கும் பரம அழைப்பை எண்ணி மனமகிழ்ச்சி அடையத் தவறிவிட்டனர். தாழ்வானதை அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பற்றிக்கொள்கின்றனர். பறக்கிறதற்குப் பதிலாக அவர்கள் ஊர்ந்து செல்கின்றனர். கிரீடத்தைத் தருகின்ற தேவதூதன் அவர்களுக்குச் சற்று மேலே இருக்கிறதை அறியாமல், குவியலாகக் கிடக்கும் சாணத்தின் மீது சாய்ந்து அமர்ந்திருக்கின்றனர். அவர்கள் தங்களுடைய பிழைப்பிற்காக நேரத்தைச் செலவிடுகிறார்களேயொழிய பெயர் பெற்ற வாழ்வை வாழ்வதற்காக நேரத்தைச் செலவிடுவதில்லை.

இயற்க்கை தரும் ஆற்றல் வீணாகிப் போகிறதை எண்ணிப் பலர் வருந்துகின்றனர். மனித ஆற்றல் வீணாகிப் போகிறதைக் குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை. எண்ணிக்கை குறைந்து அழிந்து போகிற பறவை இனங்கள், விலங்குகள், மீன்வகைகள், ஆகியவற்றைக் காப்பாற்றுவதற்குப் பலர் முனைந்து செயல்படுகின்றனர். ஆனால் மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையை வீணாக்குகிறதைக் கண்டு அவர்கள் மனம் வருந்துவதில்லை. இவ்வுலகம் முழுவதைக் காட்டிலும் ஒரு மனித வாழ்வு மேலானதாகும். அந்த வாழ்வை வீணாக்குதல் சொல்லக்கூடாத சோகக்கதையாகும். ஒரு பெண்மணி, ‘எனக்கு எழுபது வயதாகிவிட்டது, ஆனால் என் வாழ்வில் ஒன்றும் செய்யவில்லை” என்றார். இதைக்காட்டிலும் துக்ககரமானது வேறு உண்டோ?.

14. Dezember

»… jeden, der mit meinem Namen genannt ist und den ich zu meiner Ehre geschaffen, den ich gebildet, ja, gemacht habe!« Jesaja 43,7

Es ist etwas sehr Tragisches in unserem Leben, wenn wir mit ansehen müssen, wie Männer und Frauen ihr Leben vergeuden. Der Mensch wurde doch schließlich zum Bilde Gottes, Ihm ähnlich geschaffen. Er war für einen Thron gemacht und nicht für einen Barhocker. Er sollte ein Stellvertreter Gottes sein, nicht ein Sklave der Sünde. Die Antwort auf die Frage: »Was ist das eigentliche Ziel des Menschen?«, muss lauten: »Das eigentliche Ziel des Menschen ist, Gott zu verherrlichen und Ihn in Ewigkeit zu erfreuen.« Wenn wir das verfehlen, dann verfehlen wir alles.

J.H. Jowett weint, als er erkennt, dass der Lebenslauf so vieler Menschen im Laufe der Jahre »weniger der Weg eines Menschen als das Dahinvegetieren einer Amöbe ist«. Er ist besorgt darüber, dass Menschen so verkümmern können, dass sie schließlich nichts anderes mehr sind als »kleinere Angestellte in vergänglichen Unternehmen «. Und er stellte traurig fest, dass auf dem Grabstein eines Mannes nur stand, dass er »als Mensch geboren wurde und als Lebensmittelhändler starb«.

Als Watchman Nee noch ein junger Mann war, bekümmerte es ihn sehr, mit ansehen zu müssen, wie »die kreativen Gaben eines Menschen für einen habgierigen Arbeitgeber vergeudet wurden … In einem der kleinen Läden in der Altstadt, in der Straße, wo die Lackierergeschäfte waren, hatte ein namenloser Handwerker schon sechs Jahre lang an drei Hartholzflächen für einen vierteiligen Wandschirm gearbeitet. Er schnitzte Blumenreliefs in das Holz, die sich gegen die schwarz lackierte Oberfläche weiß abhoben. Für diese Arbeit wurde er mit 80 Cent am Tag bezahlt, ›bei Regen und Sonnenschein, an Feiertagen und auch bei Revolution‹, wie es der Geschäftsinhaber ausdrückte. Außerdem bekam er noch seinen Reis und sein Gemüse und ein Brett, auf dem er schlafen konnte. Nachdem er einmal alle Fertigkeiten für diese Arbeit erworben hatte, konnte er in seinem Leben höchstens zwei solcher Wandschirme herstellen, bevor seine Augen
und Nerven nachließen und er zu den Bettlern auf die Straße geschickt werden würde.«

Das Tragische am Leben heute ist, dass die Menschen ihre hohe Berufung gar nicht mehr erkennen. Sie gehen durchs Leben und ergreifen überall nur das Untergeordnete, Mittelmäßige. Sie kriechen, wo sie fliegen könnten. Es hat einmal jemand gesagt, dass die Menschen in einem Misthaufen herumkratzen und dabei gar nicht merken, dass über ihnen ein Engel schwebt, der ihnen eine Krone anbietet. Sie verbringen ihre Zeit damit, ihren Lebensunterhalt zu verdienen, anstatt sich ein wirkliches Leben aufzubauen. Viele Leute sind heutzutage besorgt über die Verschwendung unserer natürlichen Lebensquellen und die Verschmutzung unserer Umwelt, aber sie denken dabei gar nicht an den noch größeren Verlust der ungenutzten Hilfsquellen
der Menschen. Viele Leute führen Aktionen durch, um bedrohte Arten von Vögeln, Landtieren oder Fischen zu retten, aber sie könnten ihre Blicke auch auf die Menschen lenken, die ihr Leben verschwenden und zu nichts zu bewegen sind. Ein Menschenleben ist mehr wert als die ganze Welt. Dass man dieses Leben einfach vergeudet, ist eine unaussprechliche Tragödie. Eine alte Frau hat einmal gesagt: »Ich bin jetzt 70 Jahre alt, und ich habe mit meinem Leben eigentlich nichts angefangen.« Was könnte wohl schlimmer sein?