December

தேவனின் வெற்றிக் கொடி

December 5

“When the enemy shall come in like a flood, the Spirit of the Lord shall lift up a standard against him.” (Isa. 59:19b)

There are desperate crisis times in life when Satan launches all his heaviest artillery against the Lord’s people. The sky is dark, the earth trembles and there does not seem to be a single ray of hope. But God has promised to send reinforcements to His people in the moment of extremity. The Spirit of the Lord lifts up a standard against the Devil in the nick of time.

Enslaved by the Egyptian tyrant, the outlook for the people of Israel was bleak. They were cringing under the lashes of the taskmaster. But God was not indifferent to their groans. He raised up Moses to confront the Pharaoh and finally to lead His people out to freedom.

In the time of the Judges, foreign invaders held the tribes of Israel in servitude. Yet in the darkest hour the Lord raised up military deliverers to drive back the enemy and usher in a period of tranquility.

When Sennacherib led the Assyrian army against Jerusalem, the captivity of Judah seemed certain. Humanly speaking, there was no way of stopping the invading juggernaut. However, the angel of the Lord went throughout the camp of the Assyrians at night and slew 185,000 men.

When Esther was queen in Persia, the enemy came in like a flood, passing an unchangeable decree that all the Jews in the kingdom should be executed. Was God checkmated by this decree of the Medes and the Persians? No, He so arranged matters that another decree was passed, permitting the Jews to defend themselves on the fateful day. The Jews, of course, were overwhelmingly victorious.

When Savonarola saw poverty, oppression and injustice in Florence, he became a standard in the hands of the Spirit to bring reform.

When Martin Luther began to thunder out against the sale of indulgences and other sins of the church, it was as if a light went on in an age of darkness.

Queen Mary was making havoc of the true Christian faith in England and Scotland. But God raised up a man named John Knox in that time of desperate need. “Throwing himself on his face in the dust before God, Knox pled with God through the night to avenge His elect and give him Scotland or he would die. The Lord gave him Scotland and removed the Queen from her throne.”

It may be that you are facing one of the gravest crises of your life at the present time. Never fear. The Spirit of the Lord will send timely reinforcements and lead you out into a broad place. Only trust Him!

டிசம்பர் 5

வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார். ஏசாயா 59:19.

தேவனின் வெற்றிக் கொடி

சாத்தான், தனது வலிமையான பீரங்கிகளைக் கர்த்தருடைய மக்களுக்கு எதிராகத் திசைதிருப்பும்போது அவர்களுடைய வாழ்க்கையில் இக்கட்டானதும், மிகவும் நம்பிக்கையற்றதுமான நேரங்கள் உண்டாகின்றன. வானம் இருளடைகிறது. பூமி நடுங்குகிறது. நம்பிக்கையின் ஒளிக்கதிர் ஒன்றுகூட அங்கே காண்பதில்லை. மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் தேவன், தம் மக்களுக்கு தமது படையை அனுப்புவதாக வாக்களித்திருக்கிறார். குறிப்பிட்ட நேரத்தில் பிசாசுக்கு எதிராகத் தமது போர்க்கொடியை தேவ ஆவியானவர் எழுப்புவார்.

எகிப்தியக் கொடுங்கோல் ஆட்சியில், இஸ்ரவேல் மக்களுடைய புறத்தோற்றம்     நம்பிக்கையற்றதாகக் காட்சியளித்தது. அவர்கள் மீது நியமிக்கப்பட்ட விசாரணைக்காரரின் சாட்டையடியால் அஞ்சி நடுங்கினர். ஆனால், அவர்களது பெருமூச்சுக்களை தேவன் புறக்கணிக்கவில்லை. அவர் மோசேயை எழுப்பி, பார்வோனை எதிர்த்து நிற்கச் செய்தார். இறுதியில் தேவனுடைய மக்கள் விடுதலை பெற்றனர். மோசே அவர்களை வழிநடத்திச் சென்றான்.

நியாயாதிபதிகளின் காலத்தில், வெளிநாட்டினர் இஸ்ரவேல் நாட்டின்மீது போர்தொடுத்து, அம்மக்களை அடிமைத்தனத்துக்குள் வைத்திருந்தனர். ஆயினும், இருண்ட நேரத்தில், வல்லமையாய்ப் போரிட்டு எதிரியைத் தோற்கடித்து அங்கிருந்து அவர்களை விரட்டியடித்து அமைதியான நிலையை நாட்டிற்குக் கொண்டுவரக்கூடிய போர்த் தலைவர்களை தேவன் எழுப்பினார்.

அசீரியப்படைகளோடு செனகரிப் எருசலேமுக்கு எதிராக வந்தபோது, யூதாவின் அடிமைத்தனம் நிச்சயம் என்று காணப்பட்டது. மனித முறையில் பேசுவோமாயின், பெரும் படையின் சீற்றத்தால் விளையும் பேரழிவை தடைசெய்ய இயலாது எனத் தோன்றிற்று. ஆனால், தேவதூதர் அசீரியப் படைக்குள்ளாக எங்கும் சென்று ஒரே இரவில் 185000 ஆட்களைக் கொன்றுபோட்டார்.

பெர்சியாவில் எஸ்தர் அரசியாக விளங்கியபோது, எதிரியானவன் வெள்ளம்போல் வந்தான். அந்நாட்டில் உள்ள அனைத்து யூதர்களும் ஒருங்கே கொலை செய்யப்பட வேண்டும் என்னும் மாறாத கட்டளையை எதிரி ஏந்தி வந்தான். மேதிய பெர்சிய நாட்டு ஆணையினால் தேவன் அசைவற்றுப் போனாரோ? இல்லை, வேறொரு ஆணை பிறப்பிக்கும்படி அவர் செய்தார். அந்தக் குறிப்பட்ட நாளிலே யூதர்கள் தங்களைக் காத்துக்கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டது. யூதர்கள் அன்றைய நாளில் பெரும்வெற்றியை அடைந்தனர் என்பதில் வியப்பேதுமில்லை.

பிளாரன்ஸ் மாநிலத்தில் வறுமையும், அடக்குதலும், அநீதியும், நடந்ததைக் கண்ட சாவோனரோலா, தேவ ஆவியானவருடைய கரத்தில் கொடியாக விளங்கினார். அங்கு சீர்திருத்தம் உண்டாயிற்று.

தேவ ஆலயங்களில் பாவமன்னிப்பு விலைக்கு விற்கப்பட்டது. வேறுபல கொடுமைகளும் அங்கு நிகழ்ந்தன. மார்டின் லூத்தர் இடிமுழக்கம் போன்று போர்க்கொடி தொடுத்தது, இருள்சூழ்ந்த நிலையில் ஒளியைத் தோற்றுவித்தது.

இங்கிலாந்து அரசி மேரி இங்கிலாந்திலும் ஸ்காட்லாந்திலும் உண்மையான கிறிஸ்தவர்களுக்கு எதிராக பெரும் கொடுமைகளை ஆற்றினாள். ஜான் நாக்ஸ் என்னும் பெயருடைய ஒரு மனிதனை தேவன் எழுப்பினார். எவ்வித நம்பிக்கையும் அற்ற அந்த வேளையில் அவர் தேவனுக்கு முன்பாகப் புழுதியில் முகம் புதைத்து இரவு முழுவதும் மன்றாடினார். தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டுவர்களுக்கு வெற்றியைத் தரும்படியாகவும், ஸ்காட்லாந்தைத் தனக்குத் தரவேண்டும் என்றும், இல்லையேல் தான் மரணமடைய ஆயத்தமாயிருப்பதாகவும் கூறினார். கர்த்தர் அவரிடம் ஸ்காட்லாந்தைக் கொடுத்தார். அரியணையிலிருந்து அரசி அகற்றப்பட்டாள்.

தற்பொழுது நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் மிகவும் இக்கட்டான சூழ்நிலையைச் சந்தித்துக் கொண்டிருப்பீர்கள். கர்த்தருடைய ஆவியானவர் குறித்த நேரத்தில் தமது படையை அனுப்புவார். உங்களை விசாலமான இடத்திற்கு அழைத்து வருவார். அவரையே நம்புங்கள்.

5. Dezember

»Gesehen habe ich das Elend meines Volkes …, und sein Geschrei wegen seiner Antreiber habe ich gehört, ja, ich kenne seine Schmerzen.« 2. Mose 3,7

Es gibt verzweifelt ernste Krisensituationen im Leben, wenn der Satan seine schwerste Artillerie gegen das Volk Gottes auffährt. Dann ist der Himmel dunkel, die Erde bebt, und es scheint auch nicht den kleinsten Hoffnungsschimmer zu geben. Aber Gott hat zugesagt, dass Er in den Augenblicken der äußersten Not Seinem Volk Verstärkung schicken will. Der Geist des Herrn erhebt dann ein Banner gegen den Teufel, und zwar im richtigen Augenblick.

Die Aussichten für das Volk Gottes waren düster, als es in der Sklaverei unter dem ägyptischen Tyrannen lebte. Die Leute zuckten zusammen unter den Peitschenhieben der Aufseher. Aber Gott war es nicht gleichgültig, Er hörte sehr wohl ihr Stöhnen. Er berief Mose, der den Pharao zur Rede stellen und schließlich das Volk hinaus in die Freiheit führen sollte.

Zur Zeit der Richter hielten ausländische Eindringlinge die Stämme Israels geknechtet und gefangen. Doch in der dunkelsten Stunde berief der Herr militärische Befreier, die den Feind zurückschlugen und eine Zeit des Friedens einleiteten.

Als Sanherib, der König von Assur, sein Heer gegen Jerusalem ziehen ließ, da schien die Gefangenschaft von Juda sicher. Menschlich gesehen gab es keine Möglichkeit mehr, den eindringenden Giganten aufzuhalten. Doch der Engel des Herrn ging in der Nacht durchs Lager der Assyrer und erschlug 185000 Mann (siehe 2. Könige 19,32-37).

Als Esther Königin von Persien war, sorgte der Feind dafür, dass der unabänderliche Erlass herausgegeben wurde, dass alle Juden im Königreich hingerichtet werden sollten. Und wurde Gott durch diesen Beschluss der Meder und Perser matt gesetzt? Nein, Er wendete die Lage so, dass ein weiterer Erlass erging, der den Juden erlaubte, sich an dem schicksalhaften Tag zu verteidigen. Und sie trugen natürlich einen überwältigenden Sieg davon.

Als Savonarola in Florenz überall Armut, Unterdrückung und Ungerechtigkeit sah, wurde er zu einem Banner in der Hand des Heiligen Geistes und leitete grundlegende Reformen ein.

Als Martin Luther anfing, gegen den Verkauf von Ablassbriefen und andere Sünden der Kirche zu wettern, da war es, als ob ein Licht im Zeitalter der Dunkelheit aufging.

Die blutrünstige Königin Mary vernichtete den wahren christlichen Glauben in England und Schottland. Aber Gott berief einen Mann namens John Knox in dieser Zeit der verzweifelten Not. »Knox warf sich vor Gott auf sein Angesicht in den Staub und flehte ihn eine ganze Nacht lang an, die Erwählten des Herrn zu rächen und ihm Schottland zu geben; sonst wollte er sterben. Und der Herr gab ihm Schottland und stieß die Königin vom Thron.«

Vielleicht musst du gerade eine der schlimmsten Krisen in deinem Leben durchstehen. Hab keine Angst. Der Geist des Herrn wird dir zur rechten Zeit Verstärkung schicken und dich in die Freiheit führen, wo du aufatmen kannst. Vertraue nur auf Ihn!