August

சொல்லும் செயலும்

August 30

“Take heed unto thyself, and unto the doctrine.” (1 Tim. 4:16)

One of the many noteworthy features of the Word of God is that it never isolates doctrine from duty. Take Philippians 2:1-13, for example. It is one of the classic passages in the New Testament on the doctrine of Christ. We learn there of His equality with God the Father, His self-emptying, His incarnation, His servanthood, His death and His subsequent glorification. But this is introduced, not as a doctrinal treatise, but as an appeal to the Philippians and to us to have the mind of Christ. If we live for others as He did, this will eliminate strife and vainglory. If we take the low place as He did, God will exalt us in due time. The passage is intensely practical.

I often think of this when I read books on systematic theology. In these books the authors seek to gather together all that the Bible teaches on the doctrines of the faith, whether of God, Christ, the Holy Spirit, angels, man, sin, redemption, etc. While this has definite value, it can be very cold when isolated from godly living. A person can be intellectually proficient in the great doctrines and yet be sadly deficient as to his Christian character. If we study the Bible as God has given it to us, we never get a dichotomy between doctrine and duty. The two are always beautifully balanced and woven together.

Perhaps the doctrinal subject that has been most divorced from our personal responsibility is prophecy. Too often it has been presented in such a way as to cater to curiosity. Sensational speculations concerning the identity of the Antichrist may draw the crowds but they don’t develop holiness. Prophecy was never intended to tickle itching ears but rather to shape Christian character. George Peters lists 65 ways in which the Second Advent is calculated to affect our doctrine, duty and character; and I don’t doubt that there are many more than that.

The lesson for us is that we should never divorce theology from practical godliness. In our own personal study and in teaching the Word to others, we should emphasize Paul’s exhortation to Timothy, “Take heed unto thyself, and unto the doctrine…”

ஆகஸ்டு 30

உன்னைக் குறித்தும் உபதேசத்தைக் குறித்தும் எச்சரிக்கையாயிரு. 1.தீமோத்தேயு 4:16

சொல்லும் செயலும்

இறைக்கோட்பாடுகளை இறைப்பணியிலிருந்து தனிமைப்படுத்தி, திருமறை பேசுகிறதில்லையென்பது அதனுடைய சிறப்புக்களில் ஒன்றாகும். எடுத்துக்காட்டாக, பிலிப்பியர் 2:1-13 வசனங்களைக் காண்க. கிறிஸ்துவைப் பற்றிய கோட்பாடுகள் அடங்கிய உன்னதமான வேதப்பகுதியாக அது இருக்கிறது. அங்கு, பிதாவாகிய தேவனோடு அவர் கொண்டுள்ள சமத்துவ நிலையையும், தம்மை அவர் வெறுமையாக்கிக் கொண்டதையும், அவருடைய மனித அவதாரத்தையும், தம்மை அவர் அடிமையாக்கிக் கொண்டதையும், அவரது மரணத்தையும், பின்னர் அவர் பெற்ற மகிமையையும், குறித்துக் கற்றுக் கொள்ளுகிறோம். ஆனால், இந்த வேதப்பகுதியை கிறிஸ்துவின் பண்புகளை இயம்புகிற கோட்பாடுகளின் ஆய்வுக் கட்டுரையாக இதன் எழுத்தாளர் அறிமுகப்படுத்தவில்லை. கிறிஸ்துவின் சிந்தையை பிலிப்பு நகர விசுவாசிகளும் நாமும் பெற்றிட வேண்டுமென்ற நோக்குடன் இது உரைக்கப்பட்டுள்ளது. அவர் வாழ்ந்த வண்ணம் நாமும் வாழ்ந்திடுவோமாகில் சச்சரவுகளுக்கும், வீண் தற்பெருமைக்கும், அங்கு இடமில்லை. அவரைப்போல நாமும் தாழ்வான இடத்தை எடுத்துக் கொள்ளுவோமெனில், ஏற்ற காலத்தில் தேவன் நம்மை உயர்த்துவார். இப்பகுதியில் நடைமுறைக் கிறிஸ்தவமானது மிக ஆழமாகப் போதிக்கப்பட்டிருக்கிறது.

தேவ சாஸ்திரத்தை முறையாகக் கற்பிக்கும் நூல்களை நான் படிக்குங்கால் இதனைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பதுண்டு. விசுவாசத்தைக் குறித்தும், தேவனைக் குறித்தும், கிறிஸ்துவைக் குறித்தும், பரிசுத்த ஆவியானவரைக் குறித்தும், தேவதூதர்கள், மனிதன், பாவம், மீட்பு, என்னும் பொருட்களைக் குறித்தும் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற அனைத்து உபதேசங்களையும் ஒன்று திரட்டி இந்த நூலாசிரியர்கள் தொகுத்துத் தருகிறார்கள். இவை யாவும் நல்லதொரு மேன்மை தாங்கிய ஆக்கங்களாக இருப்பினும், தெய்வீக வாழ்க்கையிலிருந்து இவற்றைக் பிரித்துப் பார்க்குங்கால் மிகவும் குளிர்ந்து போனதாகக் காணப்படும். வேத உபதேசங்களில் மிகவும் ஞானம் பெற்றவராக இருக்கக்கூடிய ஒருவர், கிறிஸ்தவ நடத்தையைப் பொருத்தமட்டில் வருத்தத்துக்குரிய வகையில் குறைவுடையவராக இருப்பார். தேவன் கொடுத்த பிரகாரமாக வேதத்தை நாம் படிப்போமென்றால் உபதேசத்தையும் கடமையையும் வேறுபடுத்தி பிரித்துப் பார்க்கமாட்டோம். இவ்விரண்டு நேர்த்தியாகப் பின்னப்பட்டு அழகிய விதத்தில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது.

நமது தனிப்பட்ட பொறுப்புக்களிலிருந்து முற்றிலுமாக தனிமைப்படுத்திக் காண்கிற உபதேசம், தீர்க்கதரிசனத்தைப் பற்றிய உபதேசம். ஆர்வத்தை நிறைவு செய்யும் வகையில் அதைப் பற்றிய விளக்கங்கள் தரப்படுகின்றன. அந்திக் கிறிஸ்துவைப் பற்றிப் பரபரப்பூட்டும் உணர்ச்சிமிக்க ஊகங்கள் பெருந்திரளான மக்களைக் கவர்ந்திழுக்கும். ஆனால், அத்தகைய பிரசங்கங்கள் பரிசுத்தத்தை வளர்ப்பதில்லை. கேட்பதற்கு ஆவலுள்ள செவிகளுக்கு இதமான வார்த்தைகளை வழங்குவது தீர்க்கதரிசனத்தின் நோக்கமன்று. கிறிஸ்தவ குணநல நடத்தையைக் கிறிஸ்தவர்களிடத்தில் உருவாக்குவதே அதன் நோக்கமாகும். இறைகோட்பாடுகளையும் ஊழியத்தையும், குணநல நடத்தையையும் 65 வகைகளில் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை தாக்கம் செய்திருக்கிறது என்று ஜார்ஜ் பீட்டர்ஸ் என்பார் கூறியிருக்கிறார். அதைக் காட்டிலும் இன்னும் மிகுதியாகவே உண்மைகள் அங்கே காணப்படும் என்று நான் கருதுகிறேன்.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்வது யாதெனில் கிறிஸ்தவ கோட்பாடுகளையும், நடைமுறை வாழ்க்கையில் காணவேண்டிய தெய்வீக பக்தியையும் ஒருக்காலும் நாம் பிரித்துக் காணக்கூடாது. தனிப்பட்ட முறையில் நாம் வேதத்தைப் படிக்கும்போதும், மற்றவர்களுக்கு அதைக் கற்றுக் கொடுக்கும்போதும், ‘உன்னைக் குறித்தும், உபதேசத்தைக் குறித்தும் எச்சரிக்கையாயிரு” என்று பவுல் தீமோத்தேயுவுக்குக் கொடுத்த அறிவுரையை வலியுறுத்திக் கூறவேண்டும்.

30. August

»Habe Acht auf dich selbst und auf die Lehre.« 1. Timotheus 4,16

Eines der vielen bemerkenswerten Kennzeichen des Wortes Gottes ist, dass es Lehre nie von Verantwortung isoliert. Nehmen wir beispielsweise Philipper 2,1-13. Es ist eine der klassischen Stellen im Neuen Testament über die Lehre von Christus. Wir sehen dort Seine Gleichheit mit Gott dem Vater, Seine Selbsterniedrigung, Seine Fleischwerdung, Seine Knechtschaft, Seinen Tod und Seine darauf folgende Verherrlichung. Aber dies wird nicht als lehrmäßige Abhandlung vorgestellt, sondern als Appell an die Philipper und an uns, die Gesinnung Christi in uns zu haben. Wenn wir für andere leben, wie Er es tat, verhindern wir dadurch Streit und Neid. Wenn wir die demütige Stellung einnehmen, die Er einnahm, wird Gott uns erhöhen zu Seiner Zeit. Diese Stelle ist durch und durch praktisch.

Ich muss oft daran denken, wenn ich Bücher über systematische Theologie lese. In diesen Büchern versuchen die Autoren, sämtliche biblische Aussagen über die Lehren unseres Glaubens zusammenzutragen und zu ordnen, also die Lehren über Gott, Christus, den Heiligen Geist, die Engel, den Menschen, die Sünde, die Erlösung usw. Während das an sich zweifellos wertvoll und hilfreich ist, kann es sehr kalt wirken, wenn es nicht von einem gottesfürchtigen Leben begleitet wird. Jemand kann in den großen Lehren intellektuell sehr bewandert sein und traurigerweise gleichzeitig große Defizite in seinem christlichen Charakter aufweisen. Wenn wir die Bibel so studieren, wie Gott sie uns gegeben hat, erfahren wir nie den Zwiespalt zwischen Lehre
und Verantwortung, zwischen Theorie und Praxis. Die beiden sind immer wunderbar ausgewogen und miteinander verwoben.

Die von unserer Verantwortung vielleicht am meisten getrennte Lehre ist die Prophetie. Zu häufig wurde und wird sie auf eine Weise präsentiert, die lediglich Neugierde befriedigt. Sensationelle Spekulationen hinsichtlich der Identität des Antichristen können vielleicht Menschenmassen anziehen, aber sie fördern nicht die Heiligung. Es war nie die Absicht der Prophetie, juckende Ohren zu kitzeln, sondern christliche Charaktere zu formen. George Peters listet 65 Weisen auf, wie die Lehre von der Wiederkunft unsere Lehre, unsere Verantwortung und unseren Charakter
beeinflussen sollte; und ich zweifle nicht, dass es noch viel mehr gibt.

Die Lektion für uns ist, dass wir Theologie niemals von praktischer Gottesfurcht trennen sollten. In unserem persönlichen Studium und bei der Belehrung anderer sollten wir Paulus’ Ermahnung an Timotheus betonen: »Habe Acht auf dich selbst und auf die Lehre …«