August

நிலைத்து நிற்கும் கிரியைகள்

August 26

“Establish thou the work of our hands upon us.” (Psa. 90:17)

The margin of the New American Standard Bible reads “…give permanence to the work of our hands.” Now that is a thought worth pondering and a request worth praying! We should make it our ambition to spend our lives doing that which will last.

This finds an echo in the New Testament when the Lord Jesus said, “I have chosen you, and ordained you, that ye should go and bring forth fruit, and that your fruit should remain” (John 15:16).

F. W. Boreham said that each of us should provide himself with some honorable occupation that he can do while his body is lying in the grave. But we should advance the thought beyond the grave and say that each of us should be building for eternity.

So much of modern activity is of transient importance and of fleeting value. The other day I heard of a man who was devoting his life to a chemical analysis of fifty volatile chemicals in the skin of a Bartlett pear. Even Christians can fall into the trap of building castles in the sand, of chasing bubbles, and of becoming experts in trivia. As someone has said, we can be guilty of spending our lives straightening pictures in a burning house.

There are many types of work that are of eternal significance, and we should concentrate on these. First is the development of Christian character. Our character is one of the few things we will take to heaven. It needs cultivating now.

Souls won to Christ are of abiding importance. They will be worshipers of the Lamb of God forever and ever.

Those who teach the Word of Truth, who disciple young believers, who feed the sheep of Christ are making a deposit in lives that will last indefinitely.

Parents who raise their sons and daughters for the service of the Kingdom are assured that their work will endure.

Faithful stewards who invest their money for Christ and His cause are engaged in a ministry that cannot fail.

Those who devote themselves to the work of prayer will see some day how every prayer was answered in God’s own time and way.

Anyone who serves God’s people is engaged in a work for eternity. The humblest servant of Christ has superior vision to the wisest men of the world. His work will last while theirs will go up in a mushroom cloud.

ஆகஸ்டு 26

எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும். சங்.90:17

நிலைத்து நிற்கும் கிரியைகள்

‘எங்கள் கைகளின் கிரியைக்கு நிலைத்த தன்மையைத் தாரும்” என்றும் இவ்வசனம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நாம் ஆழ்ந்து சிந்திப்பதற்கும், நமது மன்றாட்டின் பொருளாக விளங்குவதற்கும் இந்த எண்ணம் தகுதி படைத்ததாக இருக்கிறது! நிலையாக இருக்கக்கூடிய சிலவற்றை செய்யும்படியாக நமது வாழ்க்கை செலவிடப்பட வேண்டும் என்பதை நமது நோக்கமாகக் கொள்வோம்.

‘நான் உங்களைத் தெரிந்து கொண்டேன், நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்” என்று கர்த்தர் உரைத்த போது, புதிய ஏற்பாட்டில் இக்கருத்து எதிரொலித்ததாகக் காண்கிறோம்.

‘தன்னுடைய சரீரம் புதைகுழியில் கிடக்கும் நேரத்தில், கனமிக்க ஊழியத்தை அவன் நிறைவேற்றத்தக்கவனாக நம்மில் ஒவ்வொருவனும் தனக்கென்று ஒரு முன்னேற்பாட்டைச் செய்து கொள்ள வேண்டும்” என்று ஒருவர் கூறியுள்ளார். ஆயின், கல்லறைக்கு அப்பாலும் இந்த எண்ணத்தை நாம் விரிவுபடுத்தி, நாம் ஒவ்வொருவரும் நித்தியத்திற்காகக் கட்டுகிறவர்களாக இருக்கிறோம் என்று சொல்லக்கடவோம்.

தற்காலத்தின் செயல்பாடுகள் பல குறுகியகால முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக இருக்கின்றன. அவற்றின் சிறப்பு விரைவில் மறைந்து போகிறது. ஐம்பது வகையான இரசாயனப் பொருட்கள் ஒருவகைப் பேரிக்காயின் தோலில் எவ்வாறு கிரியை நடப்பிக்கிறது என்பதைக் கண்டறிய தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்ட ஒரு மனிதனைக் குறித்து சமீபத்தில் கேள்விப்பட்டேன். கிறிஸ்தவர்களுங்கூட மணலில் அரண்மனை கட்டுகிறவர்களாகவும், நீர்குமுழிகளைப் பின்தொடர்ந்து ஓடுகிறவர்களாகவும், முக்கியமற்றவற்றில் திறமை வாய்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். எரிகிற வீட்டில் மடங்கிப்போன சித்திரங்களை ஒழுங்குபடுத்துகிறவர்களாக நம்முடைய வாழ்க்கையைச் செலவிடுகிற குற்றத்திற்குள் உள்ளாகியிருக்கிறோம் என்று ஒருவர் கூறியுள்ளார்.

நித்தியத்திற்கென்று தனிச்சிறப்பு வாய்ந்த பலவகையான செயல்கள் உள்ளன. இவற்றில் நாம் கவனம் செலுத்துகிறவர்களாக விளங்க வேண்டும். முதலாவதாக, கிறிஸ்தவ நற்குணத்தில் வளருவதாகும். நாம் பரலோகத்திற்கு எடுத்துச் செல்பவைகளில் நமது நற்குணம் ஒன்றாகும். இப்பொழுதிருந்தே அதைப் பராமரித்து வளர்க்க வேண்டும்.

கிறிஸ்துவுக்காக வெற்றிகொண்ட ஆத்துமாக்கள் நிலைபேறான முக்கியத்துவம் வாய்ந்தவை. தேவ ஆட்டுக்குட்டியானவரை என்றென்றும் தொழுது கொள்ளுகிறவர்களாக அவர்கள் திகழ்வார்கள்.

சத்திய வசனத்தைக் கற்பிப்பவர்கள், இளம் விசுவாசிகளுக்கு சீடத்துவப் பயிற்சி அழிப்போர், கிறிஸ்துவின் மந்தையைப் பராமரிப்போர் யாவரும், நித்திய வாழ்வுடையோரிடத்தில் பொக்கிஷத்தைச் சேர்த்து வைக்கிறவர்களாக இருக்கின்றனர்.

தங்கள் குமாரர்களையும் குமாரத்திகளையும் இறையரசிற்கென பணிபுரிய ஒப்புவிப்பார்களாயின், அவர்களுடைய செயல் நிலைபேறானதாக விளங்கும். கிறிஸ்துவுக்காகவும், அவருடைய பணிக்காகவும் தங்களது செல்வத்தைத் தந்தருளும் உண்மையுள்ள உக்கிராணக்காரர்கள் அழிந்து போகாத ஊழியத்தில் ஈடுபட்டவர்களாவர். மன்றாட்டில் தங்களது நாட்களைக் கழித்தவர்கள், தங்களது ஜெபத்திற்குரிய பதிலை தேவனுடைய காலத்தின்படியும், அவருடைய வழியிலும் நிறைவேற்றியதைக் காண்பார்கள்.

இறைமக்களின் நலனுக்காகப் பாடுபட்டவர்கள், நித்திய ஊழியத்தில் பங்கு பெறுகிறவர்களாவர். இவ்வுலகில் ஞானிகளாக விளங்குகிறவர்களின் நோக்கத்தைக் காட்டிலும் கிறிஸ்துவிற்கு அடிமையாகப் பணிபுரியும் தாழ்மையுள்ள ஒரு மனிதனின் நோக்கம் சிறந்ததாக விளங்கும். அவனுடைய செயல்பாடு நிலைநிற்கும். ஆனால் உலக ஞானிகளின் செயல்பாடுகள் மேகங்களின் கூட்டத்துக்குள் மறைந்துபோம்.

26. August

»Und befestige über uns das Werk unserer Hände.« Psalm 90,17

In der Fußnote zur New American Standard Bible steht hier: »… und gib dem Werk unserer Hände Dauerhaftigkeit.« Dies ist ein Gedanke, über den nachzudenken sich lohnt, und ein Anliegen, für das zu beten wert ist! Wir sollten es zu unserem Ziel machen, unser Leben für das einzusetzen, was von Dauer ist.

Das finden wir im Neuen Testament widergespiegelt, wenn der Herr Jesus
sagt: »Ich habe euch auserwählt und euch gesetzt, auf dass ihr hingehet und Frucht bringet und eure Frucht bleibe« (Johannes 15,16).

F.W. Boreham sagte, dass wir alle für eine ehrbare Beschäftigung in diesem Leben sorgen sollten für die Zeit, in der unser Leib im Grab liegt. Doch sollten wir den Gedanken über das Grab hinaus weiterspannen und sagen, dass jeder von uns für die Ewigkeit bauen sollte.

So vieles von den heutigen Aktivitäten ist von vorübergehender Bedeutung und flüchtigem Wert. Kürzlich hörte ich von einem Mann, der sein Leben der chemischen Analyse von 50 ätherischen Elementen in der Schale der Bartlett-Birne widmet. Auch Christen können in die Falle geraten, Sandburgen zu bauen, Seifenblasen nachzujagen und Experten in Bagatellen zu werden. Jemand hat gesagt, dass wir unser Leben damit verbringen können, in einem in Flammen stehenden Haus die Bilder gerade zu hängen.

Es gibt viele Arten von Arbeit, die von ewiger Bedeutung sind, und wir sollten uns auf diese konzentrieren. Zuerst ist es die Formung eines christlichen Charakters. Unser Charakter ist eines der wenigen Dinge, die wir mit in den Himmel nehmen werden. Er muss geprägt und geformt werden.

Für Christus gewonnene Seelen sind von bleibender Bedeutung. Sie sind Anbeter des Lammes Gottes von Ewigkeit zu Ewigkeit.

Diejenigen, die das Wort der Wahrheit lehren, die junge Gläubige in der Jüngerschaft trainieren, welche die Schafe Christi weiden, machen eine Investition in Menschenleben, die für immer bleiben wird.

Eltern, die ihre Söhne und Töchter für den Dienst im Reich Gottes aufziehen, können gewiss sein, dass ihr Werk von Dauer sein wird.

Treue Verwalter, die ihr Geld für Christus und Seine Sache investieren, engagieren sich in einem Dienst, der nie fruchtlos bleiben wird.

Wer sich dem Werk des Gebets widmet, wird eines Tages sehen, dass jedes Gebet zu Gottes eigener Zeit und auf Seine eigene Weise erhört worden ist.

Jeder, der dem Volk Gottes dient, ist mit einer Arbeit von Ewigkeitswert beschäftigt. Der einfachste Diener Christi hat eine klarere Sicht als die weisesten Männer der Welt. Sein Werk wird bleiben, während sich ihres in einem Atompilz auflösen wird.