August

இயேசுவுடன் வாசம் செய்தல்

August 22

“Touch me not; for I am not yet ascended to my Father.” (John 20:17)

One of the much-loved hymns for children says, “I think when I read that sweet story of old,/ When Jesus was here among men,/ How He called little children as lambs to His fold,/ I should like to have been with Him then.” Probably most of us have shared that sentimental desire at one time or another. We think how nice it would have been to enjoy the personal companionship of the Son of God during His earthly ministry.

But what we should realize is that it is better to know Him today, as He is revealed by the Spirit through the Word. Instead of being at a disadvantage, we are actually more privileged than the disciples. Look at it this way: Matthew saw Jesus through Matthew’s eyes, Mark through Mark’s eyes, Luke through Luke’s eyes, and John through John’s eyes. But we see Him through the eyes of all four Evangelists. And, to carry the thought a step farther, we have a fuller revelation of the Lord Jesus in the entire New Testament than any of the disciples had when they were on earth.

There is an additional sense in which we are more privileged than the contemporaries of Jesus. When He was mingling with the crowd in Nazareth or Capernaum, He was necessarily closer to some than to others. In the upper room, John leaned on His bosom, whereas the other disciples reclined at varying distances. But all that is changed now. The Savior is equally close to all believers. He is not only with us; He is in us.

When Mary met the resurrected Lord, she wanted to cling to Him in the same way she had previously known Him. She did not want to lose His physical, bodily presence. But Jesus said to her, “Touch me not; for I am not yet ascended to my Father…” (John 20:17). He was saying, in effect, “Mary, don’t cling to me in an earthly, physical sense. When I ascend to my Father, the Holy Spirit will be sent to the earth. Through His ministry you will know me in a fuller, clearer, more intimate way than you have ever known me before.”

So the conclusion is this: Instead of wishing we had been with Jesus when He was on earth, we should realize, rejoicingly, that it is better to be with Him now.

ஆகஸ்டு 22

என்னைத் தொடாதே, நான் இன்னும் பிதாவிடத்திற்கு ஏறிப்போகவில்லை. யோவான் 20:17.

இயேசுவுடன் வாசம் செய்தல்

உள்ளத்தில் இனிமைதனை வழங்கிட்ட பழைய கதை:
தள்ளிவிடாமல் குழந்தைகளை இன்மொழியால் அழைத்தகதை,
பண்பாளர் பரமன் இயேசு அரவணைத்தார் அன்புடனே,
என்றென்றும் அவர்சமுகம் இருந்திருக்க வேண்டுமல்லோ!

குழந்தைகள் இனிதுபாடும் இப்பாடலில் சொல்லியிருக்கிறபடி அவருடன் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்று அவ்வப்போது நாம் விரும்புகிறோம். தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து இப்புவியில் தமது ஊழியத்தை நிறைவேற்றியபோது அவரோடு நேரடியாக உறவு கொண்டிருந்தால் அது எவ்வளவு மகிழ்ச்சிக்குரியதாக இருந்திருக்கும் என்று நாம் நினைக்கிறோம்.

ஆனாலும், தமது திருவெழுத்துக்களின் மூலமாக, பரிசுத்த ஆவியானவரால் அவர் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதே அதனினும் சிறந்தது என்று நாம் அறியக்கடவோம். உண்மையில் நாம், இயேசு கிறிஸ்துவின் சீடர்களைக் காட்டிலும் அனுகூலமான நிலையில் இருக்கிறோம். இவ்விதமாகச் சிந்தித்துப் பாருங்கள். இயேசு கிறிஸ்துவை மத்தேயு மத்தேயுவின் கண்களாலும், மாற்கு மாற்குவின் கண்களாலும், லூக்கா லூக்காவின் கண்களாலும், யோவான் யோவானின் கண்களாலும், கண்டனர். நாமோ அவரை நான்கு நற்செய்தியாளர்களின் கண்களால் காண்கிறோம். இச்சிந்தனையில் இன்னும் ஒருபடி மேலே செல்லுவோம். இவ்வுலகில் அவருடைய சீடர்கள் இருந்தபோது அவரை அறிந்ததைக் காட்டிலும், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நிறைவான வெளிப்பாட்டை புதிய ஏற்பாட்டின் அனைத்துப் பகுதிகளின் வாயிலாகவும் நாம் பெற்றிருக்கிறோம்.

இயேசு கிறிஸ்து இப்புவியில் வாழ்ந்த நாட்களில் உடன் வாழ்ந்தோரைக் காட்டிலும் வேறு ஒரு வகையிலும் நாம் சிலாக்கியம் பெற்றவர்களாக இருக்கிறோம். கப்பர்நகூமிலோ, நாசரேத்திலோ திரளான மக்களோடு சேர்ந்திருந்தபோது ஒரு சிலரிடம் கட்டாயமாக அவர் நெருங்கியிருந்திருக்கக் கூடும். மேலறையில் யோவான் அவருடைய மார்பில் சாய்ந்திருந்தான். மற்ற சீடர்கள் வெவ்வேறு தூரத்தில் சாய்ந்திருந்தனர். அந்நிலை இப்பொழுது முழுவதும் மாறிவிட்டது. நம்முடைய இரட்சகர் ஒவ்வொரு விசுவாசியுடனும் ஒரேவித நெருக்கம் உடையவராக இருக்கிறார். அவர் நம்மோடு மட்டுமின்றி, நமக்குள்ளாகவும் இருக்கிறார்.

உயிர்த்தெழுந்த கர்த்தரை மரியாள் கண்டபோது, அவள் முன்னறிந்தபடி அவரைப் பற்றிக்கொள்ள நினைத்தாள். சரீரப்பிரகாரமாக அவர் தன்னோடு இருக்க வேண்டும், அந்நிலையை இழந்துவிடக் கூடாது என்று அவள் நினைத்தாள். ஆனால், இயேசு கிறிஸ்து, ‘என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போவில்லை” என்று கூறினார். ‘மரியாளே, உலகப்பிரகாரமாக, சரீரத்தின்படி என்னைப் பற்றிக்கொள்ள நினைக்காதே. நான் விண்ணுலகிற்கு ஏறிச்செல்வோனாயின், தூய ஆவியானவர் இவ்வுலகிற்கு அனுப்பப்படுவார். அவருடைய ஊழியத்தின் நிமித்தமாக, நிறைவாக, தெளிவாக, இதுவரை அறியாத வகையில் இன்னும் நெருக்கமாக என்னை நீ அறிவாய்” என்னும் பொருள்பட அவர் பேசினார்.

ஆகவே இதனுடைய முடிவு, இயேசு கிறிஸ்து இப்புவியில் இருந்தபோது நாமும் இருந்திருக்க வேண்டும் என்று விரும்புவதற்குப் பதிலாக, இப்பொழுது அவருடன் இருப்பது சிறந்தது என்னும் உண்மையை மகிழ்ச்சியுடன் அறிந்து கொள்வோம்.

22. August

»Rühre mich nicht an, denn ich bin noch nicht aufgefahren zu meinem Vater.« Johannes 20,17

Eines der beliebtesten Kinderlieder lautet: »Ich denke, wenn ich diese wunderbare alte Geschichte lese, wie Jesus hier unter den Menschen war, wie Er kleine Kinder als Lämmer in Seine Herde berief, dass ich damals gerne bei Ihm gewesen wäre.« Wahrscheinlich haben die meisten von uns zum einen oder anderen Zeitpunkt diesen sentimentalen Wunsch gehegt. Wir denken daran, wie schön es doch gewesen wäre, die persönliche Gemeinschaft des Sohnes Gottes während Seines irdischen Dienstes zu genießen.

Aber wir sollten uns klar machen, dass es besser ist, Ihn heute zu kennen, so wie Er durch den Heiligen Geist mittels des Wortes geoffenbart ist. Wir sind den Jüngern gegenüber nicht im Nachteil, im Gegenteil, wir haben größere Vorrechte als sie. Betrachten wir es einmal so! Matthäus sah Jesus durch Matthäus’ Augen, Markus durch Markus’ Augen, Lukas durch Lukas’ Augen und Johannes durch die Augen von Johannes. Aber wir sehen Ihn durch die Augen aller vier Evangelisten. Und, um noch einen Schritt weiterzugehen, wir haben im Neuen Testament eine vollkommenere Offenbarung des Herrn Jesus als sie irgendeinem der Jünger auf der Erde zuteil wurde.

In einem weiteren Sinn sind wir privilegierter als die Zeitgenossen des Herrn Jesus. Als Er in Nazareth unter den Volksmengen war, war Er notwendigerweise einigen näher als anderen. Im Obersaal lehnte Johannes an Seiner Brust, während die anderen Jünger in unterschiedlichem Abstand zu Tische lagen. Aber all das ist jetzt anders. Der Erlöser ist allen Gläubigen gleich nahe. Er ist nicht nur bei uns, Er ist sogar in uns.

Als Maria den auferstandenen Herrn traf, wollte sie sich so an Ihn hängen, wie sie Ihn früher gekannt hatte. Sie wollte Seine physische, leibliche Gegenwart nicht verlieren. Aber der Herr Jesus sagte zu ihr: »Rühre mich nicht an, denn ich bin noch nicht aufgefahren zu meinem Vater« (Johannes 20,17). Er sagte damit praktisch: »Maria, hänge dich nicht an mich in einer irdischen, physischen Weise. Wenn ich zu meinem Vater auffahre, wird der Heilige Geist auf die Erde kommen. Durch Seinen Dienst wirst du mich auf eine vollkommenere, deutlichere, vertrautere Weise kennen lernen, als du mich je zuvor gekannt hast.«

Die Schlussfolgerung ist also diese: Anstatt zu wünschen, dass wir mit Jesus während Seines Dienstes auf der Erde zusammen gewesen wären, sollten wir uns mit Freude klar machen, dass es weit besser ist, Ihm jetzt anzugehören und in Seiner Gegenwart leben zu dürfen.