August

தேவனால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள்

August 19

“Thou shalt not revile the gods, nor curse the ruler of thy people.” (Ex.22:28)

When God gave the Law to Moses, He included a specific prohibition against speaking reproachfully or disrespectfully of those who hold positions of authority. The reason for this is clear. These rulers and leaders are representatives of God. “There is no power but of God: the powers that be are ordained of God” (Rom. 13:1). The ruler is a “minister of God to thee for good” (Rom. 13:4). Even though the leader may not know the Lord personally, still he is the Lord’s man officially.

The link between God and human rulers is so close that He sometimes refers to them as gods. Thus in today’s verse we read, “Thou shalt not revile the gods,” which may mean governmental authorities. And in Psalm 82:1, 6 the Lord refers to judges as gods—not meaning that they are deities but simply that they are agents of God.

In spite of King Saul’s murderous attacks on David, the latter would not allow his men to harm the king in any way because he was the Lord’s anointed (1 Sam. 24:6).

When the Apostle Paul unknowingly reproached the high priest, he quickly repented and apologized, saying, “I wist not, brethren, that he was the high priest: for it is written, Thou shalt not speak evil of the ruler of thy people” (Acts 23:5).

Respect for authorities applies even in the spirit realm. This explains why Michael, the archangel, did not dare to bring a railing accusation against Satan, but simply said, “The Lord rebuke thee” (Jude 9).

One of the marks of latter-day apostates is that they despise governments and are not afraid to speak evil of dignities (2 Pet. 2:10).

The lesson for us is clear. We are to respect our rulers as official servants of God even though we might not agree with their policies or approve of their personal character. Under no circumstances should we ever say what one Christian said in the heat of a political campaign, “The president is a lowdown scoundrel.”

Further we are to pray “for kings, and for all that are in authority; that we may lead a quiet and peaceable life in all godliness and honesty” (1 Tim. 2:2).

ஆகஸ்டு 19

நியாயாதிபதிகளைத் தூஷியாமலும், உன் ஜனத்தின் அதிபதிகளை சபியாமலும் இருப்பாயாக. யாத்.22:28

தேவனால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள்

மோசேயிடத்தில் நியாயப்பிரமாணத்தை தேவன் கொடுத்தபோது, ஆளுகை செய்வோருக்கு எதிராக இழிவாகவோ, அவமரியாதையாகவோ பேசுவதைத் தடுக்கும் ஒரு குறிப்பிட்ட கட்டளையைக் கொடுத்துள்ளார். இதற்குரிய காரணம் மிகத் தெளிவாயிருக்கிறது. ஆளுகை செய்வோரும், தலைவர்களும் தேவனுடைய பிரதிநிதிகளாவர். ‘தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை,. உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறன. நமக்கு நன்மை உண்டாகும் பொருட்டு, ஆளுகிறவன் தேவனுடைய ஊழியக்காரனாய் இருக்கிறான்.” (ரோ.13:14). ஆளுகிறவன் தனிப்பட்ட முறையில் கர்த்தரை அறியாதவனாயிருபினும், அதிகாரபூர்வமாக அவன் கர்த்தருடைய மனிதனாயிருக்கிறான்.

தேவனுக்கும் ஆளுகை செய்வோருக்கும் இடையே உள்ள இணைப்பு, ஆளுகை செய்வோரை தேவர்கள் என்று அவர் குறிப்பிடத்தக்க அளவிற்கு நெருக்கமாயிருக்கிறது. (ஆங்கில வேதாகமத்தில் இன்றைய வசனத்தில் ‘நியாயாதிபதிகள்” என்ற சொல் ‘தேவர்கள்” என்னும் பொருளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.) சங்கீதம் 82:1,6 ஆகிய வசனத்தில் நியாயாதிபதிகளை தேவர்கள் என்று கர்த்தர் அழைக்கிறார். ஆகவே தேவர்கள் என்னும் சொல் ‘கடவுளர்கள்” என்ற பொருளில் அல்ல, தேவனுடைய பிரதிநிதிகள் என்னும் பொருளிலே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அரசனாகிய சவுல் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவனாகையால், தாவீதை அவன் கொலைசெய்ய எத்தனித்தபோது, தாவீது தன் மனிதர்கள் சவுலுக்கு எவ்வகையிலும் ஊறுவிளைவிக்க அனுமதிக்கவில்லை. (1.சாமு.24:6).

பிரதான ஆசாரியன் என்று அறியாமல் பவுல் அவனைத் திட்டினான். அவனை யாரென்று அறிந்தவுடன், ‘இவர் பிரதான ஆசாரியரென்று எனக்குத் தெரியாது. உன் ஜனத்தின் அதிபதியை தீது சொல்லாயாக என்று எழுதியிருக்கிறதே” என்று கூறி மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டான். (அப்.23:5.)

தூதர்களின் உலகிலும் அதிகாரமுடையோருக்கு மரியாதை கொடுக்கப்பட்டது. பிரதான தூதனாகிய மீகாவேல், பிசாசைத் தூஷணமாய்க் குற்றப்படுத்த துணியாமல், ‘கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக” என்று கூறியதின் காரணத்தை இது விளக்குகிறது (யூதா 9). கள்ளப்போதகர்கள் அரசுகளை அவமதித்து, கர்த்தத்துவத்தை அசட்டை பண்ணுவார்கள். இது கடைசி நாட்களுக்கு அடையாளமாயிருக்கும் (2.பேதுரு 2:10).

இங்கு நமக்களிக்கப்பட்ட பாடம் மிகவும் தெளிவாயிருக்கிறது. நம்மை ஆளுகிறவர்கள் தேவனுடைய ஊழியக்காரர்கள் என்று எண்ணி அவர்களை மதிக்க வேண்டும். அவர்களுடைய கொள்கைகளுக்கு நாம் உடன்பட வேண்டியதில்லை. கிறிஸ்தவ அரசியல்வாதிகள், தங்களுடைய கோபத்திலே ஆளுகை செய்வோரைத் தகாத சொற்களாலே ஏசுகிறதுபோல நாம் ஒருக்காலும் பேசலாகாது.

“எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகம் செய்யாமல் அமைதலுள்ள ஜீவனம் பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும்” நாம் மன்றாட வேண்டும்.

19. August

»Die Richter (wörtl.: ›Götter‹) sollst du nicht lästern, und einem Fürsten deines Volkes sollst du nicht fluchen.« 2. Mose 22,28

Als Gott Mose das Gesetz gab, schloss Er das Verbot ein, negativ oder respektlos von denen zu reden, die Autoritätspositionen bekleideten. Der Grund dafür ist klar. Diese Herrscher und Führer sind Stellvertreter Gottes. »Denn es ist keine Obrigkeit außer von Gott, und diese, welche sind, sind von Gott verordnet« (Römer 13,1). Die Obrigkeit ist »Gottes Dienerin, dir zum Guten« (Römer 13,4). Wenn auch die betreffende Autoritätsperson den Herrn nicht persönlich kennt, ist sie doch offiziell von Gott verordnet.

Die Verbindung zwischen Gott und menschlichen Herrschern ist so eng, dass Er sie manchmal als Götter bezeichnet. So heißt es im heutigen Vers wörtlich: »Die Götter sollst du nicht lästern« (siehe Elberfelder Fußnote zu 2. Mose 21,6), was sich auf eine Stellung hoheitlicher Autorität bezieht, eben »Richter« oder andere hohe Beamte. Auch in Psalm 82,1.6 bezeichnet
der Herr die Richter als ›Götter‹ (siehe Fußnote Elberfelder) – was nicht heißen soll, dass sie Gottheiten sind, sondern einfach an Gottes Stelle Handelnde.

Trotz König Sauls heimtückischer Attentate und Angriffe gegen David ließ Letzterer nicht zu, dass seine Leute dem König auch nur das Geringste antaten, weil er der Gesalbte des Herrn war (siehe 1. Samuel 24,6).

Als der Apostel Paulus versehentlich den Hohenpriester beleidigte, tat er sofort Buße und entschuldigte sich: »Ich wusste nicht, Brüder, dass es der Hohepriester ist; denn es steht geschrieben: ›Von dem Obersten deines Volkes sollst du nicht übel reden.‹« (Apostelgeschichte 23,5).

Respekt vor Autoritäten gibt es sogar im geistlichen Bereich. Nur so ist es zu verstehen, dass Michael, der Erzengel, es nicht wagte, ein lästerndes Urteil über Satan zu fällen, sondern einfach sprach: »Der Herr schelte dich« (Judas 9).

Eines der Kennzeichen der Abgefallenen der letzten Tage ist es, dass sie Herrschaften verachten und keine Angst haben, Gewalten zu lästern (2. Petrus 2,10). Die Lektion für uns ist deutlich. Wir haben unsere Obrigkeit als offizielle Diener Gottes zu betrachten, auch wenn wir mit ihrer Politik nicht übereinstimmen oder ihren persönlichen Charakter nicht billigen können. Unter gar keinen Umständen sollten wir je sagen, was ein Christ in der Hitze einer politischen Kampagne sagte: »Der Präsident ist ein gemeiner Halunke.«

Außerdem sollen wir beten »für alle Menschen, für Könige und alle, die in Hoheit sind, auf dass wir ein ruhiges und stilles Leben führen mögen in aller Gottseligkeit und würdigem Ernst« (1. Timotheus 2,2).