August

பெருமை

August 18

“Let not him who girds on his armor boast like him who takes it off.” (1 Ki. 20:11 NASB)

Although these words were spoken by a wicked king, Ahab, they are words of truth. Even ungodly men sometimes lapse into truth.

The king of Syria had made insulting, degrading demands of Ahab, threatening military disaster if he did not obey. But in the battle that followed, the Syrians were forced to retreat and their king had to flee for his life. His performance didn’t match his boast.

Today’s text would have been good advice for Goliath also. When he saw David approaching, he said, “Come to me, and I will give thy flesh unto the fowls of the air, and to the beasts of the field” (1 Sam. 17:44). But David easily felled him with a single stone from his sling. The giant had boasted too soon.

When we are young Christians, it is easy for us to overestimate our own ability. We act as if we could take on the world, the flesh and the devil single-handed. We might even reproach older Christians for their failure to evangelize the world. We will show them how to do it! But our boasting is premature. The battle has only started and we are acting as if it were all over.

In an informal gathering of believers one evening, the spotlight was shining on a brilliant young preacher who was present. He found it quite satisfying to be the center of interest. Also in the group was a Sunday School teacher who had had a profound influence on his life. Someone said to this teacher, “You must be quite proud of your former student.” His reply was, “Yes, if he goes on well to the end.” At the time, the young preacher thought that that was a rather sour note to inject into an otherwise pleasurable evening. But later, given the perspective of years, he realized that his old teacher was right. It isn’t how you put on your armor that counts. It’s how you finish the battle.

Actually the battle is never over in this life. It will not be over until we stand before our great Captain in heaven. Then we will hear His appraisal of our service—the only appraisal that really counts. And no matter what His appraisal might be, we will have no grounds for boasting. We will say with heartfelt humility, “We are unprofitable servants: we have done that which was our duty to do” (Lu. 17:10).

ஆகஸ்டு 18

ஆயுதம் தரித்திருக்கிறவன், ஆயுதம் உரிந்து போடுகிறவனைப்போலப் பெருமை பாராட்டலாகாது. 1.இராஜா.20:11

பெருமை

கொடுங்கோல் மன்னன் ஆகாபினால் இச்சொற்கள் பேசப்பட்டிருந்தாலும், இச்சொற்களில் உண்மை பொதிந்திருக்கிறது. சில வேளைகளில், தேவனற்ற மனிதர்களும் சத்தியத்திற்குத் துணை நிற்கின்றனர்.

ஆகாபிற்கு அவகீர்த்தி உண்டு பண்ணும் வகையில், சீரியர்களின் வேந்தனாகிய பெனாதாத் சில கோரிக்கைகளை அவன் நிறைவேற்ற வேண்டுமென்று கட்டளையிட்டான். அவற்றை நிறைவேற்றவில்லை என்றால், போரினால் அழிவைச் சந்திக்க வேண்டுமென்று பெனாதாத் அச்சுறுத்தினான். ஆனால், தொடர்ந்து நடந்த போரில் சீரியர் தோல்வியைத் தழுவினது மட்டுமின்றி, அந்த அரசனும் உயிர்பிழைக்கத் தப்பி ஓடினான். அவன் பெருமை பாராட்டினதற்கு ஏற்ப அவனால் செயல்படமுடியவில்லை.

இன்றைய வசனம் கோலியாத்திற்கு நல்ல பாடமாக அமைந்திருக்க வேண்டும். தாவீது அவனை நோக்கி வந்ததைக் கண்ட கோலியாத் ‘என்னிடத்தில் வா, நான் உன் மாமிசத்தை ஆகாயத்துப் பறவைகளுக்கும், காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன்” என்றான். (1.சாமு.17:44) ஆனால், தாவீதோ ஒரே கவண் கல்லினால் அவனை எளிதாக கொன்றுவிட்டான். அந்த இராட்சதன் வெற்றி தனக்கே கிடைக்கும் என்று கருதி வெகு முன்னதாகவே பெருமை கொண்டான்.

நாம் இளம் கிறிஸ்தவர்களாக இருக்கும் வேளையில், நம்முடைய திறமையை அளவிற்கு அதிகமாக மதிப்பிடுகிறோம். தன்னந்தனியாக, உலகையும், பிசாசையும், மாமிசத்தையும், நம்மால் எதிர்த்து வெற்றிபெற முடியுமென்று நாம் நினைக்கிறோம். இவ்வுலகில் நற்செய்தியைப் பரப்புவதில் மூத்த கிறிஸ்தவர்கள் தோற்று விட்டனர் என்று குறைகூறவும் செய்வோம். அதை எவ்வாறு செய்வதென்று அவர்களுக்கு முன்னர் செய்தும் காட்டுவோம்! நாம் அவசரப்பட்டு பெருமை பாராட்டுகிறோம். போர் அப்பொழுது தான் தொடங்கியிருக்கும், ஆனால் எல்லாம் முடிந்து விட்டது போலச் செயல்படுவோம்.

ஒருநாள் மாலை சில விசுவாசிகள் கூடியிருந்தனர். அங்கு வருகை புரிந்திருந்த திறமைமிக்க இளம் பிரசங்கி ஒருவர் அனைவருடைய கவனத்தையும் கவாந்த வண்ணம் காணப்பட்டார். எல்லாருடைய ஆர்வத்திற்கும் தான் காரணமாக இருப்பது குறித்து அதிக மனநிறைவு உடையவராக இருந்தார். அந்தப் பிரசங்கியின் அறிவுக் கூர்மைக்குக் காரணமாக விளங்கிய ஞாயிறு வேத ஆசிரியரும் அக்கூட்டத்திற்கு வந்திருந்தார். அந்த ஆசிரியரிடம் ஒருவர், ‘உங்களுடைய முன்னாள் மாணாக்கனைக் குறித்து நீங்கள் நிச்சயமாகப் பெருமை கொள்வீர்கள்” என்று கூறினார். ‘ஆம், இறுதிவரை எல்லாம் நன்றாகச் சென்றால் நல்லது” என்று ஆசிரியர் பதிலுரைத்தார். இன்பமான மாலைப் பொழுதில், சற்றுக் கசப்பான சொற்களாக அந்த பதில் பிரசங்கிக்குக் காணப்பட்டது. ஆனால், காலங்கள் கடந்தபின், பல அனுபவங்களைப் பெற்ற அந்த பிரசங்கி, தனது வயது முதிர்ந்த ஆசிரியர் கூறியது சரியென்று உணர்ந்தார். நீங்கள் எவ்வாறு உங்கள் படைக்கலனை அணிகிறீர்கள் என்பது அல்ல. எவ்வாறு போரை முடிக்கிறீர்கள் என்பதே கணக்கில் எடுக்கப்படும்.

உண்மையில் அந்தப் போர் இவ்வுலக வாழ்வின்போது முடிவடைகிறதில்லை. விண்ணுலகில் நம்முடைய பிரதான தளபதிக்கு முன்னர் நிற்கும் நாள் வரை அது முடியாது. நம்முடைய பணியைப் பற்றிய மதிப்பீட்டை அப்பொழுது அவர் வழங்குவார். அந்த மதிப்பீடு ஒன்றுதான் இன்றியமையாதது. அந்த மதிப்பீடு எப்படியிருந்தாலும் நாம் பெருமை பாராட்டுவதற்கு ஒன்றுமில்லை. மனந்தாழ்ந்தவராக, ‘நாங்கள் அப்பிரயோஜமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையை மாத்திரம் செய்தோம்” என்றே நாம் கூறுவோம். (லூக்.17:10).

18. August

»Es rühme sich nicht der sich Gürtende wie der den Gürtel Lösende!« 1. Könige 20,11

Obwohl diese Worte von einem gottlosen König, nämlich Ahab, gesprochen wurden, sind sie doch Worte der Wahrheit. Auch gottlose Menschen sprechen manchmal die Wahrheit.

Der König von Syrien hatte Ahab beleidigende und demütigende Forderungen gestellt und im Fall einer Weigerung mit Krieg gedroht. Doch in der folgenden Schlacht waren die Syrer gezwungen, sich zurückzuziehen, und ihr König musste um sein Leben fliehen. Seine Leistung blieb weit hinter seiner Prahlerei zurück.

Der heutige Text wäre auch ein guter Rat für Goliath gewesen. Als er David auf sich zukommen sah, sagte er: »Komm her zu mir, dass ich dein Fleisch den Vögeln des Himmels und den Tieren des Feldes gebe« (1. Samuel 17,44). Aber David besiegte ihn problemlos mit einem einzigen Kieselstein aus seiner Schleuder. Der Riese hatte zu früh geprahlt.

Wenn wir junge Christen sind, überschätzen wir leicht unsere eigenen Fähigkeiten. Wir tun, als ob wir es »mit links« mit der Welt, dem Fleisch und dem Teufel aufnehmen könnten. Vielleicht machen wir sogar älteren Christen Vorwürfe, weil sie es nicht fertig gebracht haben, die Welt zu evangelisieren. Wir werden es ihnen zeigen, wie man das macht! Aber unser Rühmen kommt zu früh. Die Schlacht hat gerade erst begonnen, und wir tun, als ob sie schon vorbei und gewonnen wäre.

Bei einem lockeren Beisammensein von Gläubigen am Abend drehte sich alles um einen brillanten jungen Prediger, der anwesend war. Ihm tat es recht wohl, im Mittelpunkt des Interesses zu stehen. In der Gruppe saß auch ein Sonntagsschullehrer, der einen tiefen Einfluss auf sein Leben ausgeübt hatte. Jemand sagte zu diesem Lehrer: »Sie müssen eigentlich ziemlich stolz auf ihren ehemaligen Schüler sein.« Seine Antwort lautete: »Ja, wenn er bis zum Ende so gut weitermacht.« Zu diesem Zeitpunkt hielt der junge Prediger diese Bemerkung für einen ziemlichen
Wermutstropfen in einem ansonsten angenehmen Abend. Aber später, mit der erweiterten Perspektive jahrelanger Erfahrung, wurde er sich klar, dass sein Lehrer völlig Recht hatte. Es
zählt nicht, wie wir die Rüstung anlegen. Es kommt darauf an, wie wir die Schlacht beenden.

In Wirklichkeit ist die Schlacht im Leben nie zu Ende. Sie wird nicht zu Ende sein, bis wir vor unserem großen Feldherrn im Himmel stehen. Dann werden wir Seine Beurteilung unseres Dienstes zu hören bekommen, die einzige Beurteilung, die wirklich zählt. Und gleichgültig, wie Seine Beurteilung ausfällt, wir werden keinen Grund zum Rühmen haben. Mit demütiger Überzeugung werden wir bekennen: »Wir sind unnütze Knechte; wir haben getan, was wir zu tun schuldig waren« (Lukas 17,10).