August

போதுமென்ற மனது

August 16

“And having food and raiment, let us be therewith content.” (1 Tim. 6:8)

Few Christians take these words seriously, yet they are as truly the Word of God as John 3:16. They tell us to be satisfied with food and covering. That word “covering” includes a roof over our heads as well as the clothes we wear. In other words, we should be content with the minimum essentials and put everything above that into the work of the Lord.

The man who has contentment has something that money cannot buy. E. Stanley Jones said, “Everything belongs to the man who wants nothing. Having nothing, he possesses all things in life, including life itself… He is rich in the fewness of his wants rather than in the abundance of his possessions.”

Years ago when Rudyard Kipling spoke to a graduating class at McGill University, he warned the students against putting a great premium on material wealth. He said, “Some day you’ll meet a man who cares for none of these things and then you’ll realize how poor you are.”

“The happiest state of a Christian on earth seems to be that he should have few wants. If a man has Christ in his heart, heaven before his eyes, and only as much of temporal blessings as is just needful to carry him safely through life, then pain and sorrow have little to shoot at; such a man has little to lose” (William C. Burns).

This spirit of contentment seems to have characterized many of God’s giants. David Livingston said, “I am determined not to look upon anything that I possess except as in relation to the Kingdom of God.” Watchman Nee wrote, “I want nothing for myself; I want everything for the Lord.” And Hudson Taylor said that he enjoyed “the luxury of having few things to care for.”

To some, the idea of contentment means the lack of drive and ambition. They picture the contented person as a drone or a freeloader. But that is not godly contentment. The contented Christian has plenty of drive and ambition, but they are directed toward the spiritual, not the material. Rather than being a freeloader, he works so that he can give to those who are in need. In Jim Elliot’s words, the contented person is the one for whom God has “loosed the tension of the grasping hand.”

ஆகஸ்டு 16

உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம். 1.தீமோ.6:8.

போதுமென்ற மனது

இந்தச்சொற்களை பொரும்பாலான கிறிஸ்தவர்கள் மனப்பூர்வமாகக் கருதுவதில்லை. இருந்த போதிலும், யோவான் 3:16ம் வசனம் எவ்வளவு உண்மையுள்ள இறைமொழியாக இருக்கிறதோ. அதே அளவிற்கு இந்த வசனமும் உண்மையுள்ள இறைமொழியாக இருக்கிறது. நமக்கு உண்ணவும் உடுக்கவும் உண்டாயிருந்தால், அதில் நாம் மனநிறைவு அடைய வேண்டும் என்று இது போதிக்கிறது. ‘உடுக்கவும்” என்னும் சொல் நாம் அணியும் ஆடையையும், நாம் தங்கும் உறைவிடத்தையும் குறிக்கிறது. அதாவது, குறைந்தபட்ச தேவைகளில் நாம் போதுமென்ற மனநிறைவு கொண்டு, அதற்கு மேல் உள்ளவற்றை கர்த்தருடைய பணிக்காக கொடுத்துவிட வேண்டும்.

போதுமென்ற மனநிறைவை ஒரு மனிதன் பணம் கொடுத்து வாங்கமுடியாது. ‘எதையும் விரும்பாத மனிதன் எல்லாவற்றையும் உடையவனாயிருக்கிறான். ஒன்றும் இல்லாத நிலையில், வாழ்வில் அவன் எல்லாவற்றையும் பெற்றிருக்கிறான். தன் வாழ்வை மட்டுமே அவன் உடையவனாயிருக்கிறான். அவனுடைய தேவைகள் மிகக்குறைவே, ஆகவே அவன் செல்வந்தனாயிருக்கிறான். பொருளுடமை மிகுதியாக இருப்பவனைக் காட்டிலும் குறைவான தேவைகளை உடையவனே மிகுந்த செல்வந்தன்” என்று E.ஸ்டேன்லி ஜோன்ஸ் என்பார் கூறியுள்ளார்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் மேக்கில் பல்கலைக்கழக மாணவர்களிடம் திருவாளர் ருட்யார்டு கிப்லிங் என்பார் உரையாற்றிய வேளையில், பொருட்செல்வத்திற்கு முதலிடம் கொடுக்கலாகாது என்று எச்சரித்தார். ‘இவ்வுலக பொருட்செல்வத்தைக் குறித்து அக்கறையற்ற ஒரு மனிதரை நீங்கள் ஒரு நாளில் சந்திக்கப் போகிறீர்கள். அப்பொழுது நீங்கள் எவ்வளவு ஏழைகளாக இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்வீர்கள்” என்று கூறினார்.

‘மிகவும் கொஞ்சமான தேவையுள்ள நிலையே, உலகத்தில் வாழ்கிற கிறிஸ்தவனுக்கு மகிழ்ச்சியுள்ள காலமாகும். இருதயத்தில் கிறிஸ்துவைக் கொண்டிருக்கும் ஒருவனுடைய கண்களுக்கு முன்னர் விண்ணுலகம் காட்சியளிக்கிறது. வாழ்க்கையைப் பாதுகாப்பாக நடத்திச்செல்லும் அளவுக்கு போதுமான ஆசீர்வாதங்களை அவன் பெற்றிருக்கிறான். அந்நிலையில் அவனுக்கு வேதனையும், வருத்தமும் உண்டாவதில்லை. அப்படிப்பட்ட மனிதனிடத்தில் இழந்து போகிறதற்கு ஒன்றுமில்லை”. (வில்லியம் C.பர்ன்ஸ்).

தேவனுக்கென்று வாழ்ந்த ஆற்றல்மிக்கோர் பலர் போதுமென்ற மனதுடைய ஆவிக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனர். டேவிட் லிவிங்ஸ்டன் என்பார், ‘இறையரசோடு சம்பந்தமற்ற ஏதோன்றையும் நோக்கிப் பார்க்காதிருக்க நான் தீர்மானித்தேன்” என்றுரைத்தார். ‘எனக்காக ஒன்றும் தேவையில்லை, எல்லாவற்றையும் கர்த்தருக்காக வேண்டுமென்று விரும்புகிறேன்” என்று வாட்ச்மேன் நீ அவர்கள் எழுதியுள்ளார். ‘என்னுடைய கவனத்தையெல்லாம் செலுத்த வேண்டியபடி தேவையற்ற வசதிகள் என்னிடத்தில் ஒன்றுமில்லாததால் அதில் நான் மகிழ்வடைகிறேன்.” என்று ஹட்சன் டெய்லர் என்பார் கூறியுள்ளார்.

போதுமென்ற மனதோடு ஒருவர் வாழ்வாரெனில், அவர் தன் வாழ்க்கையில் உற்சாகமற்றவராகவும், சிறந்து விளங்குவதற்கு எவ்வித விருப்பமும் அற்றவராக இருக்க நேரிடும் எனப் பலர் கருதுகின்றனர். போதுமென்ற மனதுடையோரை அவர்கள் சோம்பேறிகள் என்று வர்ணிக்கின்றனர். ஆயின் போதுமென்ற தெய்வீகமான மனது சோம்பேறித்தனமாக வாழ்வதன்று. போதுமென்ற மனதுடைய கிறிஸ்தவன் வாழ்வில் உச்சாகமுள்ளவனாகவும், சிறந்து விளங்க வேண்டுமென்ற பேரார்வமுடையவனாகவும் இருக்கிறான். அந்த நோக்கங்கள் உலகச் செல்வத்தைச் சாந்திராமல், ஆவிக்குரியவைகளையே சார்ந்திருக்கின்றன. அவன் சோம்பேறியாக இராமல், மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கு அயராது உழைக்கிறான். ‘எதையும் அடைந்தே தீரவேண்டும் என்ற மன பதற்றத்திலிருந்து விடுதலையை” போதுமென்ற மனதுடையவன் தேவனால் பெற்றிருக்கிறான் என்று ஜிம் எலியட் என்பார் கூறியுள்ளார்.

16. August

»Wenn wir aber Nahrung und Bedeckung haben, so wollen wir uns daran genügen lassen.« 1. Timotheus 6,8

Wenige Christen nehmen diese Worte ernst, aber sie sind ebenso wahrhaftig Gottes Wort wie Johannes 3,16. Sie sagen uns, dass uns Nahrung und Bedeckung genug sein sollen. Das Wort »Bedeckung« schließt ein Dach über unserem Kopf und Kleider zum Anziehen ein. Mit anderen Worten sollten wir mit den unbedingt lebensnotwendigen Dingen zufrieden sein und alles andere in das Werk des Herrn geben.

Jemand, der Zufriedenheit besitzt, hat etwas, was man für Geld nicht kaufen kann. E. Stanley Jones sagte: »Dem gehört alles, der nichts begehrt. Obwohl er nichts hat, besitzt er alle Dinge im Leben, das Leben selbst eingeschlossen … Er ist reicher durch die Geringfügigkeit seiner Bedürfnisse, als er durch einen Überfluss an Besitztümern je sein könnte.«

Als vor Jahrzehnten Rudyard Kipling vor einer Abgangsklasse von Studenten der McGill-Universität sprach, warnte er seine Zuhörer davor, zu sehr auf materiellen Reichtum zu setzen. »Eines Tages«, sagte er, »werdet ihr einem Mann in die Augen sehen müssen, für den alle diese Dinge bedeutungslos sind, und dann wird euch mit Schrecken bewusst werden, wie arm ihr seid.«

»Der glücklichste Zustand eines Christen auf der Erde ist, wenn er wenig Bedürfnisse hat. Wenn ein Mensch Christus in seinem Herzen, den Himmel vor Augen und gerade so viel zeitliche Segnungen hat, wie nötig sind, um ihn sicher durchs Leben zu bringen, dann haben Schmerz und Sorgen eine geringe Zielscheibe; so jemand hat wenig zu verlieren« (William C. Burns, 1815-1868, schottischer Chinamissionar, väterlicher Freund des jungen Hudson Taylor).

Diese Gesinnung der Genügsamkeit scheint der kennzeichnende Charakterzug vieler der Helden Gottes zu sein. David Livingstone sagte: »Ich bin entschlossen, alles, was ich besitze, ausschließlich in Bezug zum Reich Gottes zu sehen.« Watchman Nee schrieb: »Ich will nichts für mich selbst; ich will alles für den Herrn.« Und Hudson Taylor sagte, dass er »den Luxus
genoss, wenige Dinge zu besitzen, um die er sich sorgen musste«.

Für einige bedeutet der Gedanke an Genügsamkeit einen Mangel an geistlicher Triebkraft und gesundem Ehrgeiz. Sie schildern den genügsamen Menschen als Schmarotzer und Parasiten. Aber das ist keine gottgemäße Genügsamkeit. Der genügsame Christ hat genügend Energie und Ehrgeiz, aber sie richten sich auf geistliche, nicht auf materielle Dinge. Alles andere als ein Schmarotzer, arbeitet er hart, so dass er denen mitteilen kann, die in Not sind. Nach Jim Elliots Worten ist ein genügsamer Mensch der, für den Gott »die Verkrampfung der raffenden Hand gelöst hat«.