August

இயல்பு திரிந்த மனிதர்

August 11

“Whether we be beside ourselves, it is to God.” (2 Cor. 5:13).

God has irregulars in His army, and very often these are the ones who win the greatest victories. In their zeal for the Lord they seem eccentric. They use original methods instead of sticking to the traditional ones. They are always saying and doing the unexpected. They can murder the English language and violate every known rule of preaching and teaching, yet see great gains for God’s kingdom. Often they are dramatic, even electrifying. People are shocked, but they never forget them.

These irregulars are a constant source of embarrassment to the staid and conventional, to those who shudder at the thought of violating cultural norms. Other Christians try to change them, to make them more normal, to put out the fire. But fortunately for the Church, their efforts are usually in vain.

It is hard for us to believe that our Lord seemed peculiar to His contemporaries. “So zealous was He in His work that often He had no time even to eat, and His mother and brothers wanted to take Him home because they thought He was going ‘off his head’. They said, ‘He is beside himself.’ But it was Jesus who was the sane man, not his brothers” (W. Mackintosh Mackay).

It is apparent that people accused the Apostle Paul of being strange. His answer to the charge was: “Whether we be beside ourselves, it is to God” (2 Cor. 5:13.)

We have all heard of one of God’s irregulars who wore a sandwich board with writing on the front and back. On the front it said, “I’m a fool for Christ’s sake.” Then on the back it read, “Whose fool are you?”

The trouble with most of us is that we are too much like the ordinary to create any stir for God in society. As someone has said, “We leave the average where it is. We are like Peter, standing outside the judgment hall where Christ was on trial, just ‘warming himself.’”

Rowland Hill, the great London preacher, was eccentric. So was C.T. Studd. And Billy Bray. And W.P. Nicholson, the Irish evangelist. Would we want them to have been any different? No, when we consider how God used them, we only wish we were more like them. “Better a thousand times effective peculiarity than ineffective ordinariness. First love may sometimes be peculiar, but, thank God, it is effective; and some of us have lost it” (Fred Mitchell).

ஆகஸ்டு 11

நாங்கள் பைத்தியங்கொண்டவர்களென்றால் தேவனுக்காக அப்படியிருக்கும். 2.கொரிந்தியர் 5:13.

இயல்பு திரிந்த மனிதர்

இயல்பு திரிந்தவர்களைத் தேவன் தமது சேனையில் போர் வீரர்களாகக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது மகத்துவமான வெற்றிகளை இப்படிப்பட்ட மனிதர்களே பெற்றுத் தருகின்றனர். கர்த்தருக்காக தாங்கள் கொண்டிருக்கும் கட்டுக்கடங்காத ஆர்வத்தினால்,அவர்கள் இயல்பு திரிந்தவர்களாக தோன்றுகின்றனர். வழிவழியாக பக்கத்திலிருக்கும் மரபுக்களையே பற்றிக்கொள்ளாமல், புதுமையான வழிகளை அப்படிப்பட்டவர்கள் கையாளுகின்றனர். அவர்கள் எப்பொழுதும் எதிர்பாராத வகையில் பேசுகிறார்கள், செயல்புரிகிறார்கள், பிரசங்கம் செய்வதற்கும், போதிப்பதற்கும், என்று வரையறுக்கப்பட்ட முறைகளை அவர்கள் மீறுகிறார்கள். மொழியைக் கொலை செய்கிறார்கள். இருந்தபோதிலும் இறையரசிற்கு மகத்தான ஆதாயத்தைப் பெற்றுத் தருகின்றனர். அவ்வப்போது அவர்கள் பரபரப்பூட்டுகின்றனர். திடுக்கிடச் செய்கின்றனர். அதனைக் காணும் மக்கள் அதிர்ச்சியடைகின்றனர். ஆயினும் அன்னாரை மக்கள் மறந்துபோவதில்லை.

பண்பாடு மீறப்படும் என்னும் எண்ணத்தினால் அதிர்ச்சியடையும் மனிதர்கள் எழுச்சியற்ற பாரம்பரியத்தில் மூழ்கிக்கிடக்கின்றனர். அவர்களுக்கு இந்த இயல்பு திரிந்தவர்கள் எப்பொழுதும் இக்கட்டை வருவிக்கின்றனர். மற்றக் கிறிஸ்தவர்கள் இவ்வகை இயல்பு திரிந்தவர்கனைச் சாதாரணமானவர்களைப் போல மாற்ற முயற்ச்சி செய்கின்றனர். மற்றவர்களுடைய முயற்ச்சி பெரும்பாலும் வீணாகிப்போகும். ஆகையால் திருச்சபைக்கு நன்மையே பயக்கும்.

நம்முடைய கர்த்தர் இப்புவியில் இருந்த காலத்தில் வாழ்ந்த மற்றவர்களுக்கு, அவர் விநோதமானவராகக் காட்சியளித்தார் என்னும் உண்மை, நாம் நம்புவதற்கு கடினமான ஒன்றாகும். ‘அவர் தமது அலுவலில் வைராக்கியம் உடையவராக இருந்த காரணத்தால் அவருக்கு உணவு உண்ணவும் நேரம் கிடைக்கவில்லை. அவர் ‘புத்தி தடுமாறிப் போகிறார்” என்று எண்ணிய அவருடைய தாயாரும் சகோதரர்களும், அவரை வீட்டிற்கு அழைத்து செல்ல விரும்பினர். ‘இவர் தன்னியல்பு திரிந்து பயித்தியமாகிவிட்டார்” என்று அவர்கள் கூறினார்கள். ஆனால் கிறிஸ்துவே ஞானத்தில் சிறந்தவர். அவருடைய சகோதரர்கள் அல்லர்” (W.மக்கின்டோஷ் மாகே).

அப்போஸ்தலனாகிய பவுல் விநோதமான மனிதராக இருந்ததாகச் சிலர் குற்றம் சுமத்தியது வெளிப்படை. அதற்கு அவர் பகிர்ந்த விடை: ‘நாங்கள் பைத்தியங் கொண்டவர்களென்றால், தேவனுக்காக அப்படியிருக்கும்”.

தேவனுக்காகப் பைத்தியமாக விளங்கிய ஒரு மனிதரைக் குறித்து நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். அவர் மார்பிலும் முதுகிலும் இரண்டு பெரிய அட்டைகளைத் தொங்க விட்டிருப்பார். முன்புற அட்டையில், ‘கிறிஸ்துவுக்காக நான் பைத்தியமாகியிருக்கிறேன்”; என்று எழுதியிருக்கும். பின்புற அட்டையில் ‘நீங்கள் யாருக்காகப் பைத்தியமாயிருக்கிறீங்கள்” என்ற கேள்வி காணப்படும்.

இறைவனுக்காக, சமுதாயத்தில் கிளர்ச்சி செய்யக் கூடாதபடி நம்மில் பலர் சாதாரணமானவர்களாக இருப்பதே பிரச்சனை. இதனையொருவர், ‘நீதிமன்றத்தில் கிறிஸ்து விசாரிக்கப்படுகிற வேளையில், வெளியில் நின்று குளிருக்கு இதமான சூட்டை அனுபவித்துக் கொண்டிருந்த பேதுருவைப் போல நாம் இருக்கிறோம்.” என்று பொழிந்துள்ளார்.

லண்டன் மாநகரில் இறை சொற்பொழிவாளராக விளங்கிய ரௌலண்ட்ஹில் ஒரு இயல்பு திரிந்த மனிதராவார். C.T. ஸ்டட்,பில்லி ப்ரே, W.P. நிக்கல்சன் அனைவரும் அப்படிப்பட்டவர்களே. அவர்கள் வேறுவிதமாக இருந்திருக்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களா?. அவர்களைத் தேவன் எவ்வாறு பயன்படுத்தினார் என்பதைப் பற்றி நாம் சிந்திப்போமாயின் அவர்களைப்போல நாமும் விளங்க வேண்டுமென்று விரும்புவோம். பயனற்ற சாதாரணமானவர்களாக இருப்பதைக்காட்டிலும், பயனுள்ள விநோத மனிதர்களாகத் திகழ்வதே ஆயிரமடங்கு சிறந்தது. ‘ஆதி அன்பு, சிலவேளைகளில் விநோதமாயிருக்கும், அதற்காக தேவனுக்கு நன்றி செலுத்துவோம். அது பயன்மிக்கது. நம்மில் சிலர் அவ்வன்பை இழந்துவிட்டோம்” (பிரட் மிட்செல்).

11. August

»Denn sei es, dass wir außer uns sind, so sind wir es Gott.« 2. Korinther 5,13

Gott hat außergewöhnliche Soldaten in Seiner Armee, und häufig sind sie es, welche die größten Siege erringen. In ihrem Eifer für den Herrn sind sie oft exzentrisch. Sie verwenden originelle Methoden, statt sich an die traditionellen zu halten. Sie sagen und tun immer gerade das, was man am wenigsten von ihnen erwartet. Sie können der deutschen Sprache den Garaus machen und jede bekannte Regel des Predigens und Lehrens verletzen und doch große Gewinne für das Reich Gottes einbringen. Oft sind sie aufregend und elektrisierend. Die Menschen sind schockiert,
aber sie vergessen sie nie.

Diese Irregulären sind eine ständige Quelle der Peinlichkeit für die Wohlgesetzten und Traditionalisten, für die, welche bei dem Gedanken an die Verletzung kultureller Normen erschauern. Andere Christen versuchen sie zu verändern, sie ein wenig »normaler « zu machen, das Feuer auszulöschen. Aber zum Glück für die Gemeinde sind ihre Anstrengungen im Allgemeinen zum Scheitern verurteilt.

Es fällt uns schwer, uns klar zu machen, dass auch unser Herr Seinen Zeitgenossen absonderlich vorkam. »So hingegeben war Er in Seiner Arbeit, dass Er oft nicht einmal Zeit hatte zu essen, und Sein Vater und Seine Mutter wollten Ihn mit nach Hause nehmen, weil sie glaubten, Er würde langsam den Verstand verlieren. Sie sagten: ›Er ist außer sich‹. Aber Jesus war der Gesunde und Vernünftige, nicht Seine Brüder« (W. Mackintosh Mackay).

Es ist offensichtlich, dass manche Menschen Paulus vorwarfen, er wäre nicht ganz normal. Seine Antwort auf den Vorwurf war: »Sei es, dass wir außer uns sind, so sind wir es Gott« (2. Korinther 5,13).

Manche von uns haben von einem von Gottes Irregulären gehört, der als Sandwichmann ein doppeltes Plakat durch die Gegend trug. Auf dem vorderen Plakat stand zu lesen: »Ich bin ein Narr um Christi willen.« Auf dem rückwärtigen war geschrieben: »Wessen Narr bist du?«

Das Problem mit den meisten von uns ist, dass wir zu sehr wie die gewöhnlichen Leute sind, um in der Gesellschaft etwas für Gott bewegen zu können. Jemand hat es so ausgedrückt: »Wir lassen das Mittelmaß, wo es ist. Wir sind wie Petrus, der außerhalb des Gerichtsgebäudes steht, wo Christus verurteilt wird, und sich einfach ›wärmt‹.«

Rowland Hill (1744-1833), der große Londoner Prediger, war ein Original, ebenso C.T. Studd und Billy Bray (1794-1868, Methodistenprediger in Cornwall). Und auch W.P. Nicholson, der irische Evangelist. Hätten sie anders sein sollen? Nein, wenn wir bedenken, wie Gott sie gebraucht hat, wünschen wir nur, dass wir mehr wie sie würden. »Tausendmal lieber eine wirkungsvolle Originalität als wirkungslose Gewöhnlichkeit. Die erste Liebe drückt sich vielleicht manchmal eigenartig aus, aber Dank sei Gott, sie ist wirksam; und manche von uns haben sie leider verloren« (Fred Mitchell).