August

மனிதனுடைய கோபம்

August 5

“The wrath of man worketh not the righteousness of God.”

Games 1:20) The picture is not an unfamiliar one. A church business meeting is in progress. A decision must be made. It is not about some great doctrine of the faith, but perhaps about building an addition, or painting the kitchen, or distributing some funds. A disagreement develops, anger rises, tempers flare and shouting erupts. A few strongminded vocal individuals finally prevail, then leave with the delusion that they have forwarded the work of God. Whatever else they have forwarded, they have not advanced God’s work or accomplished His will. Man’s wrath does not work the righteousness of God.

The story is told that Emerson rushed out of some committee meeting where there had been a lot of argument and mental strife. While he was still seething with anger, he seemed to hear the stars say to him, “Why so hot, little man?” To which Leslie Weatherhead comments: “How wonderfully the silent stars in their majesty and remote beauty, hush our spirits, as if they were really saying, ‘God is great enough to take care of you’, and ‘Nothing troubling you is as important as it seems.’”

We know, of course, that there is a time for righteous anger. That time is when the honor of God is at stake. But James is not thinking of that when he speaks of the wrath of man. He is thinking of the man who insists on having his own way, and who, when blocked, explodes in anger. He is thinking of the proud person who considers his own judgment infallible and who is therefore intolerant of dissent.

To the man of this world, an explosive temper is a sign of strength. To him it is a badge of leadership, a means of commanding respect. He thinks that meekness is weakness.

But the Christian knows better. He knows that when he loses his temper, he loses respect. Every outburst of temper is a failure. It is the work of the flesh, not the fruit of the Spirit.

Christ has taught him a better way. It is the way of self-control, of giving place to God’s wrath, of showing all meekness to all men. It is the way of patiently enduring wrong, of turning the other cheek. The Christian knows that he hinders the work of God by displays of temper, he obscures any visible difference between himself and the unconverted, and he seals his lips as far as testimony is concerned.

ஆகஸ்டு 5

மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்க மாட்டாதே. யாக்கோபு1:20.

மனிதனுடைய கோபம்

இங்கு நாம் காணும் சித்திரம் நமக்கு நன்கு தெரிந்ததே. ஒரு எடுத்துக் காட்டைக் காணலாம். சில தீர்மானங்களை எடுப்பதற்காக சபை கூடியிருக்கிறது. அவை விசுவாச உபதேசத்தைக் குறித்த தீர்மானங்கள் அல்ல. சபைக் கட்டிடத்தில் ஒரு பகுதியைப் புதிப்பிப்பதோ, வர்ணம் பூசுவதோ, ஊழியங்களுக்குப் பணத்தைப் பகிர்ந்து அளிப்பதோ, இப்படிப்பட்ட ஒன்றைக் குறித்து முடிவெடுக்க வேண்டும். உரையாடலின்போது கருத்து வேறுபாடு தலைதூக்குகிறது. கோபம் பொங்குகிறது, சினத்தின் மிகுதியால் சீறி எழுகின்றனர், பெருஞ்சத்தம் எழுகின்றது. குடின உள்ளம் கொண்ட சிலருடைய பெருந்தொனி மேலோங்கி வெற்றியடைகின்றது. தேவனுடைய பணிக்காகப் பேரார்வத்துடன் செயல்பட்டதாக அவர்கள் தவறான எண்ணங்கொண்டு பெருமிதத்துடன் அங்கிருந்து செல்கின்றனர். தேவனுடைய பணியையோ, அவருடைய சித்தத்தையோ, அவர்கள் ஆர்வத்துடன் நிறைவேற்றாது அதற்கு முரணாகவே நடந்து கொண்டனர். மனிதர்களுடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.

சிறப்பு அங்கத்தினர்கள் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதிலிருந்து சட்டென வெளியே வந்தார் எமர்சன். அக்கூட்டத்தில் வாக்குவாதமும் மனப் போராட்டமுமே நிறைந்திருந்தது. வெளியே வந்த பின்னரும் அவருடைய கோபம் தணியவில்லை. அப்பொழுது விண்மீன்கள், ‘மனிதனே, ஏன் இவ்வளவு சூடாக இருக்கிறாய்?” என்று அவரிடம் வினவினது போல் தோன்றிற்று. லெஸ்லிவெதர்ஹெட் என்பார், ‘சில பிரச்சனைகள் உங்களுக்கு மிகவும் தொல்லை தருவதாகத் தோன்றிடினும், உண்மையாகவே, தேவன் உங்களைக் கவனித்துக்கொள்ளப் போதுமானவராக இருக்கிறார் என்று வியத்தகு வகையில் அமைதியுடனும், மாட்சிமையுடனும், பொலிவுடனும் தொலைதூரத்திலிருந்து விண்மீன்கள் நம்முடைய ஆவியை அமைதிப்படுத்தும்படி உரையாடுவதாகத் தோன்றிற்று” என்று இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

நீதியை நிலைநிறுத்த, கோபத்தைச் செலுத்த வேண்டிய தருணங்கள் நமது வாழ்க்கையில் ஏற்படுவது உண்மையே. தேவனுடைய புகழ்ச்சிக்கு ஆபத்து உண்டாகும் தருணங்கள் அப்படிப்பட்டவையாகும். மனிதர்களுடைய கோபத்தைப்பற்றி யாக்கோபு பேசுகிறபோது, இத்தகைய நீதிக்காகச் செலுத்த வேண்டிய கோபத்தை நினைக்கவில்லை. தனது வழியே சிறந்தது என்று வற்புறுத்துகிற ஒரு மனிதனைப் பற்றியே அவர் எழுதுகிறார். அந்த மனிதன் தன் வழியில் செல்லும்போது யாரேனும் தடை உண்டாக்கினால், அவன் சினத்தின் மிகுதியால் சீறி எழுகிறான். தனது சொந்தத் தீர்மானமே தவறற்றது என்று கருதுகிற பெருமைமிக்க மனுதனைப்பற்றி யாக்கோபு நினைக்கிறார். தனது தீர்மானத்திற்கு எவரேனும் வேறுபட்ட கருத்தைக் கூறினால் அந்த மனிதனால் அதைப் பொறுத்துக் கொள்ள முடிகிறதில்லை.

தனது கோபத்தைச் சீற்றத்துடன் வெளிப்படுத்துகிற உலகீய மனிதன், தான் வலிமை மிகுந்தவன் என்று கருதுகிறான். தலைமைத்துவத்திற்கு அடையாளமாக அதை அவன் கருதுகிறான். தனது மேன்மையை வெளிப்படுத்திக் காட்ட அதைப் பயன்படுத்துகிறான். சாந்தத்தைப் பலவீனம் என்றும் அவன் எண்ணுகிறான்.
ஆனால், கிறிஸ்தவனோ இதனினும் சிறப்பான அறிவைப் பெற்றவனாக இருக்கிறான். தனது சினத்தை அடக்க இயலாதவன் நன்மதிப்பை இழக்க நேரிடும் என்பதை அவன் அறிந்திருக்கிறான். தனது கோபத்தை வெளிப்படுத்துகிற ஒவ்வொரு முறையும் அது, தான் அடையும் தோல்வி என்பதையும் அவன் அறிந்திருக்கிறான். அது ஆவியின் கனியல்லவென்றும், மாமிசத்தின் கிரியையே என்றும் அவன் அறிந்திருக்கிறான்.

சீரிய பாதையைக் கிறிஸ்து அவனுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். தன்னடக்கத்திற்கு ஏதுவாகவும், தேவ கோபத்திற்கு மட்டும் இடம் கொடுப்பதாகவும், எல்லா மனிதர்களிடமும் சாந்தத்தைக் காண்பிப்பதாகவும் அது அமைகிறது. நமக்கு எதிராக இழைக்கப்பட்ட தவறுகளைப் பொறுமையோடு சகிப்பதாகவும், மறு கன்னத்தைக் காட்டுவதாகவும் அது அமைகிறது. மாறாக, கோபத்தை வெளிப்படுத்துவதால் இறைப்பணிக்குத் தடையுண்டாகிறது என விசுவாசி அறிந்திருக்கிறான். தனக்கும் மனந்திரும்பாத மனிதனுக்கும் இடையே காணப்படும் வேறுபாடுகளைக் கோபம் மறைத்து விடுகிறது என்பதையும் அவன் அறிந்திருக்கிறான். ஆகவே, தனது சாட்சியைக் காத்துக்கொள்ள அமைதிகாக்கிறான்.

5. August

»Denn eines Mannes Zorn wirkt nicht Gottes Gerechtigkeit.« Jakobus 1,20

Die Szene ist nicht ungewöhnlich. Eine Sitzung über Gemeindeangelegenheiten findet statt. Eine Entscheidung muss getroffen werden. Es geht nicht um eine große Glaubenslehre, sondern vielleicht um einen Anbau oder das Streichen der Küche oder das Verteilen einiger Spenden. Unterschiedliche Meinungen entstehen, Zorn kommt auf, die Temperamente geraten außer Kontrolle, und die Stimmen überschlagen sich. Schließlich setzen sich einige dickköpfige Persönlichkeiten aufgrund ihrer Lautstärke durch und verlassen die Sitzung mit der Illusion, das Werk Gottes
gefördert zu haben. Was immer sie vielleicht gefördert haben, Gottes Werk gefördert oder Seinen Willen getan haben sie bestimmt nicht. Der Zorn eines Mannes wirkt nicht Gottes Gerechtigkeit.

Es wird eine Geschichte erzählt, dass Emerson aus der Sitzung irgendeines Komitees davonrannte, wo es eine Menge Streit und Wortgefechte gegeben hatte. Während er noch vor Wut kochte, war es ihm, als höre er die Sterne sagen: »Warum so hitzköpfig, kleiner Mann?« Leslie Weatherhead kommentiert dazu: »Wie wunderbar besänftigen doch die schweigenden Sterne in ihrer Majestät und fernen Schönheit unser Gemüt, als wollten sie uns sagen: ›Gott ist groß genug, sich um dich zu kümmern‹ und: ›Nichts, was dich ärgert, ist so wichtig, wie es dir vorkommt.« Wir wissen natürlich, dass es einen Zeitpunkt gibt, wo gerechter Zorn am Platz ist. Das ist dann, wenn die Ehre Gottes auf dem Spiel steht. Aber an dies denkt Jakobus nicht, wenn er vom Zorn des Mannes spricht. Er denkt an den Mann, der sich mit aller Gewalt durchsetzen will und vor Zorn explodiert, wenn sich ihm Hindernisse in den Weg stellen. Er denkt an die anmaßende Person, die ihr eigenes Urteil für unfehlbar hält und deshalb keine abweichende Meinung ertragen kann.

Für die Menschen dieser Welt ist ein explosives Temperament ein Zeichen von Stärke. Für sie ist es das Kennzeichen einer Führerpersönlichkeit, ein Mittel, sich Respekt zu verschaffen. Sie halten Sanftmut für Schwachheit.

Aber der Christ weiß es besser. Er weiß, dass er mit seiner Unbeherrschtheit auch den Respekt seiner Mitchristen verliert. Gefühlsausbrüche sind oft Werke des Fleisches, nicht des Geistes.

Christus hat einen besseren Weg gelehrt. Es ist der Weg der Selbstbeherrschung, dem Zorn Gottes Raum zu geben, allen Menschen alle Sanftmut zu erweisen. Es ist der Weg, geduldig alles Unrecht zu ertragen, die andere Wange hinzuhalten. Der Christ weiß, dass er das Werk Gottes durch Gefühlsausbrüche behindert, dass er dadurch jeden sichtbaren Unterschied zwischen ihm und den Unbekehrten verwischt und seine Lippen im Blick auf sein Zeugnis versiegelt.