April

பகட்டான பட்டங்கள்

April 17

“…you are not to be called rabbi, for you have one teacher, and you are all brethren. And call no man your father on earth, for you have one Father, who is in heaven. Neither be called masters, for you have one master, the Christ.” (Matt. 23:8-10 RSV)

The Lord Jesus warned His disciples against high-sounding titles that cater to the ego and put self in the place of the Trinity. God is our Father, Christ is our Master, the Holy Spirit is our Teacher. We should not arrogate these titles to ourselves in the assembly. In the world, of course, we have an earthly father, in our work we have a master or employer, and in school we have teachers. But in the spiritual realm, the members of the Godhead fill these roles and should be honored exclusively as such.

God is our Father in the sense that He is the Giver of life. Christ is our Master because we belong to Him and are subject to His direction. The Holy Spirit is our Teacher because He is the Author and Interpreter of Scripture; all our teaching must be guided by Him.

How strange, then, that churches perpetuate honorific titles just as if Christ had never warned against them. Priests and ministers are still called Father and Padre and are sometimes referred to as Dominie, meaning Lord. Clergymen regularly use the title “Reverend,” a word that is used in the Bible only of God (see Psa. 111:9, “…reverend and holy is his name.”) The title “Doctor” comes from the Latin docere, to teach. So doctor means teacher. The degree, whether earned or honorary, may come from an institution that is a pesthouse of infidelity rather than a bulwark of the Christian faith. Yet when a man is introduced as “Doctor” in the assembly, the implication is that his words have added authority because of his degree. This, of course, is completely unfounded. A hunchbacked garbage collector, filled with the Holy Spirit, may speak more truly as an oracle of God.

There is a place for titles in the so-called secular world. The principle that applies in that sphere is “Render therefore to all their dues: …honour to whom honour” (Rom. 13:7). But the principle that applies in the assembly is laid down by the Lord in the words, “…you are all brethren” (Matt. 23:8 RSV).

ஏப்ரல் 17

நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள், கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார். நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். பூமியிலே ஒருவரையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள். பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். நீங்கள் குருக்கள் என்று அழைக்கப்படாதிருங்கள், கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார். (மத்.23:8-10).

பகட்டான பட்டங்கள்

முழக்கமிடும் பட்டங்களைத் தமது சீடர்கள் நாடலாகாது என கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எச்சரித்துள்ளார். அது ஒருவர் பெருமைகொள்வதற்குத் துணைசெய்து, அவர் தன்னையே திரியேகருடைய ஸ்தானத்தில் வைத்துக் காணச்செய்கிறது. தேவன் நமது பிதா, கிறிஸ்து நமது எஜமானன், தூய ஆவியானவர் நமது போதகர், இந்தப் பதவிகளை நாம் சபையில் உரிமை கொண்டாடுவது பொருத்தமற்ற செயலாகும். இப்புவியினில் நாம் ஒவ்வொருவரும் தகப்பனை உடையவராயிருக்கிறோம். நமது அலுவல்களில் எஜமானன் இருக்கிறார். பள்ளியிலும் பல ஆசிரியர் உள்ளனர். ஆனால் ஆவிக்குரிய அரசாட்சியில், தேவத்துவத்தின் அங்கங்களாயிருப்போரே இப்பதவிகளை நிறைவு செய்கின்றனர். அதன்படி இந்த மேன்மைகளை அவர்கட்கே செலுத்த வேண்டும்.

வாழ்வினைத் தருகிறவர் என்னும் தேவன், நமது பிதாவாயிருக்கிறார். கர்த்தருக்குரியவர்களாக நாம் இருக்கிற காரணத்தால், கிறிஸ்து நமக்கு எஜமானராக இருக்கிறார். வேதத்தை எழுதினவரும் அதை விளக்குகிறவருமாக இருக்கிற காரணத்தினால், தூய ஆவியானவர் நமது போதகராயிருக்கிறார். நமது போதனைகள் அனைத்தும் அவரால் அறிவுறுத்தப்படவேண்டும்.

இயேசு கிறிஸ்து அவர்களை ஒருபோதும் எச்சரிக்காததுபோல, கனத்துக்குரிய இப்பட்டங்களை கிறிஸ்தவ சபைகள் மறந்து விடாமல் பேணிப் பாதுகாப்பது எத்தனை விநோதமாயிருக்கிறது. குருக்களும், ஊழியர்களும், இன்னும் ‘ பாதர்” என்றும் ‘பாதிரி” என்றும் அழைக்கப்படுகின்றனர். கர்த்தர் என்னும் பொருளுடைய டோமினி என்ற பதவியையும் அவர்கள் கொடுத்துவருகின்றனர். மதகுருக்கள் ‘பரிசுத்த” என்று பட்டத்தையும் பயன்படுத்துகின்றனர். வேதத்தில் இச்சொல் தேவன் ஒருவரையே குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. (அவருடைய நாமம் பரிசுத்தமும் பயங்கரமுமானது, சங்.111:9). ‘டாக்டர்” என்னும் சொல் லத்தீன் மொழியில், ஆசிரியர் என்னும் பொருளுடைய ‘டோசிரே,” என்ற சொல்லிருந்து பிறந்தது. ஆகவே டாக்டர் என்னும் சொல்லிற்கு போதகர் என்பது பொருளாகும். இந்தப் பட்டத்தைச் சிலர் கற்றுப் பெறுகிறார்கள். சிலருக்கு மரியாதையாக இது அளிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இப்பட்டத்தைக் கொடுக்கிற சமயக் கல்வி ஸ்தாபனங்கள், கிறிஸ்தவ விசுவாசத்திற்கு அரணாக இருப்பதற்குப் பதிலாக, விசுவாசமற்ற கொள்கைநோய்க் கூடங்களாக இருக்கின்றன.

எல்லாம் அறிந்திருந்தும் உள்ளுர் சபையில் ஒருவர் ‘டாக்டர்” என்று அறிமுகப்படுத்துகிறபோது, அவருடைய பட்டத்தின் காரணமாக, அவருடைய வார்த்தைகள் கூடுதலான மதிப்பைப் பெறுகின்றன. ஆனால் இது உண்மைக்கு முற்றிலும் முரணானது. தூய ஆவியின் நிறைவைப் பெற்றவர், ஒருவேளை முதுகு குனியக் குப்பை மூட்டையைச் சுமந்து செல்பவராக இருப்பினும், அந்த டாக்டர் பட்டத்தைப் பெற்றவரைக் காட்டிலும் தேவ வாக்கு என்று சொல்லத்தக்க மேலான உண்மைகளைப் பேசுவார்.

மதச்சார்பற்றது என்றழைக்கப்படும் உலகில் பட்டங்களுக்கு இடமுண்டு. ‘ஆகையால் யாவரும் செலுத்த வேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்…. எவனைக் கனம் பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்” என்னும் கொள்கை அவ்வரசாங்கத்தில் பயன்படக்கூடியதாகும். (ரோமர் 13:7). ஆனால், சபையில் நடைமுறைப்படுத்த வேண்டிய கொள்கை யாதெனில், ‘நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்” என்பதேயாகும். (மத்.23:8).

17. April

»Ihr aber, lasst euch nicht Rabbi nennen: denn einer ist euer Lehrer, ihr alle aber seid Brüder. Ihr sollt auch nicht jemand auf der Erde euren Vater nennen; denn einer ist euer Vater, der in den Himmeln ist. Lasst euch auch nicht Meister nennen, denn einer ist euer Meister, der Christus. « Matthäus 25,8-10

Der Herr Jesus warnte Seine Jünger vor hochtrabenden Titeln, die dem Ego schmeicheln und unser Ich an die Stelle der Dreieinigkeit setzen. Gott ist unser Vater, Christus ist unser Meister, der Heilige Geist unser Lehrer. Wir sollten diese Titel in der Versammlung nicht beanspruchen. Natürlich haben wir in der Welt einen irdischen Vater, in unserer Arbeit haben wir einen Meister oder Chef, und in der Schule haben wir Lehrer. Aber im geistlichen Bereich erfüllen die Personen der Gottheit diese Rollen, und sie allein sollten auch mit diesen Titeln geehrt werden.

Gott ist unser Vater in dem Sinn, dass Er uns das Leben gibt. Christus ist unser Meister, weil wir Ihm gehören und Seiner Leitung unterworfen sind. Der Heilige Geist ist unser Lehrer, weil er der Verfasser und Ausleger der Heiligen Schrift ist; all unser Lehren muss von Ihm geleitet sein.

Wie seltsam ist es dann, dass die Kirchen bis zum heutigen Tag diese Ehrentitel vergeben, als ob Christus nie davor gewarnt hätte. Immer noch werden Priester »Pater «, d.h. »Vater« (bzw. »Father«, »Padre« usw.) genannt oder als »Herr« bezeichnet (besonders im süddeutschen katholischen Bereich; siehe auch engl. »Dominie«, span. »Dom«, ital. »Don«, »Monsignore
«). Geistliche lassen sich häufig mit »Hochwürden« (engl. »Reverend«) anreden, was in der Bibel eigentlich Gott vorbehalten ist (Offenbarung 4,11; 5,9.12). Der Titel »Doktor« kommt vom lateinischen »docere«, »lehren«. »Doktor« bedeutet also Lehrer. Dieser Titel, ob nun durch Studium oder ehrenhalber erlangt, kann von einer Institution kommen, die eher eine Brutstätte
des Unglaubens als ein Bollwerk des christlichen Glaubens ist. Und doch, wird jemand als »Dr.« in die Versammlung eingeführt, so meint man sofort, dass seine Worte zusätzliches Gewicht
aufgrund seines Titels haben. Das ist natürlich völlig grundlos. Ein buckeliger Sraßenkehrer, der vom Heiligen Geist erfüllt ist, kann unter Umständen eher ein Sprachrohr Gottes sein als ein ungeistlicher Mann mit Titel und Würden.

Natürlich sind diese Titel im so genannten weltlichen Bereich durchaus am Platz. In dieser Sphäre gilt der Grundsatz: »Gebet allen, was ihnen gebührt: … die Ehre, dem die Ehre gebührt« (Römer 13,7). Aber das Prinzip, das in der Versammlung Anwendung findet, wurde vom Herrn niedergelegt mit den Worten: »… ihr alle aber seid Brüder« (Matthäus 23,8).