April

திருமறையின் மேன்மை

April 16

“…as dying, and, behold, we live.” (2 Cor. 6:9)

The Bible is full of paradoxes, that is, truths that seem contrary to what we would normally suppose or truths that seem to contradict one another. G. K. Chesterton maintained that paradox is truth standing on its head to attract attention. Here are a few of the paradoxes trying to attract our attention.

We save our lives by losing them; we lose our lives by loving them (Mark 8:35).

We are strong when we are weak (2 Cor. 12:10), and powerless in our own strength (John 15:5).

We find perfect freedom in being Christ’s slave, and bondage when we are free from His yoke (Rom. 6:17-20).

We find more joy in sharing what we have than we do in getting more. Or, in the words of our Lord, ‘It is more blessed to give than to receive” (Acts 20:35).

We increase what we have through scattering it, and experience poverty through hoarding it (Prov. 11:24).

We have a new nature that cannot sin (1 John 3:9), yet everything we do is stained by sin (1 John 1:8).

We conquer by yielding (Gen. 32:24-28) and experience defeat by fighting (1 Pet. 5:5c).

We are abased when we exalt ourselves, but He exalts us when we abase ourselves (Lu. 14:11).

We are enlarged by pressure (Psa. 4:1 JND) and shrunk by prosperity (Jer. 48:11).

We can possess all things, yet have nothing; we can be poor, yet make many rich (2 Cor. 6:10).

When we are wise (in man’s view) then we are fools (in God’s sight), but when we are fools for Christ’s sake, then we are truly wise (1 Cor. 1:20, 21).

The life of faith brings freedom from care and anxiety; the life of sight brings fear of loss through moths, rust and thieves (Matt. 6:19).

The poet sees the Christian life as paradox from start to finish:

How strange is the course that a person must steer,
How perplexed is the path he must tread;
The hope of his happiness rises from fear,
And his life he receives from the dead.
His fairest pretensions must wholly be waived,
And his best resolutions be crossed;
Nor can he expect to be perfectly saved
Till he finds himself utterly lost.
When all this is done, and his heart is assured
Of the total remission of sins;
When his pardon is signed and his peace is procured,
From that moment his conflict begins. (Selected).

ஏப்ரல்16

சாகிறவர்கள் என்னப்பட்டாலும், உயிரோடுடிருக்கிறவர்களாகவும்.. 2.கொரிந்தியர் 6:9

திருமறையின் மேன்மை

முரண்பாடுகள் போன்று தோற்றமளிக்கும் கூற்றுக்களால் திருமறை நிறைந்திருக்கிறது. சாதாரணமாக நாம் நினைக்கிறதற்கு மாறானவைகளும், ஒன்றுக்கொன்று மாறாகத் தோன்றுகிற உண்மைகளையும் ஆங்கு காண்கிறோம். தலைகீழாக நிற்பவனுக்கு ஒப்பாக, மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் தன்மை வாய்ந்தவை இக்கூற்;றுகள் என்று ப.ம.செஸ்டர்டன் என்பார் உறுதியுடன் கூறுகிறார். இவ்விதமான ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றுகிற, நம்மைக் கவர்ந்திழுக்கும் வசனங்களைக் காண்போம்.

ஜீவனை இழந்துபோவதால் அதனை இரட்சிக்கிறோம். அதன்மீது நேசம் கொள்வதினால் அதை இழந்துபோகிறோம். (மாற்கு 8:35).

நாம் பலவீனமாயிருக்கும் போதே பலமுள்ளவராயிருக்கிறோம். (2.கொரி.12:10). நம்முடைய சொந்த பலத்தில் பலமற்றவர்களாயிருக்கிறோம். (யோவான் 15:5).

கிறிஸ்துவின் அடிமைகளாயிருக்கும் போது, நாம் பூரண விடுதலையைப் பெற்றிருக்கிறோம். அவருடைய நுகத்தினின்று நீங்கியிருக்கும் போது, அடிமைகளாயிருக்கிறோம். (ரோமர் 6:17-20).

அதிகமாக பெற்றுக்கொள்வதைக் காட்டிலும், நமக்குரியதைப் பகர்ந்து கொடுப்பதிலே அதிக மகிழ்ச்சியடைகிறோம். இதனைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சொற்களில், ‘வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்” என்று காண்கிறோம்.(அப்.20:35).

வாரி இறைத்து நாம் பெருகுகிறோம், சேர்த்து வைப்பதினால் வறுமையை அனுபவிக்கிறோம் (நீதி.11:24).

நாம் பாவம் செய்யாதபடி புதிய இயல்பைப் பெற்றிருக்கிறோம். (1.யோவான் 3:9). என்றாலும் நாம் செய்கிறவை யாவும் பாவத்தினால் கறைபட்டுள்ளன. (1.யோவான் 1:8).

ஒப்புவிப்பதால் ஜெயம் கொள்கிறோம். (ஆதி. 32:24-28). போரிடுவதினால் தோல்வியடைகிறோம்; (1.பேது.5:5).

நம்மை நாம் உயர்த்தும்போது தாழ்வடைகிறோம். நம்மை நாம் தாழ்த்தும்போது அவர் நம்மை உயர்த்துகிறார்.(லூக்.14:11).

நெருக்கத்தினால் விலாசம் அடைகிறோம் (சங்.4:1). நாம் செழித்து ஓங்குவதினால் ஒடுங்கிப்போகிறோம். (எரேமி.48:11).

எல்லாவற்றையும் உடையவராயிருந்தும், ஒன்றும் இல்லாதவர்களாயிருப்போம். நாம் ஏழைகளாயிருப்பினும் பலரைச் செல்வந்தர்களாக்குவோம். (2.கொரி.6:10).

(மனிதர்களுடைய பார்வையில்) ஞானிகளாயிருப்பினும், (தேவனுடைய பார்வையில்) மதியீனராயிருப்போம். கிறிஸ்துவுக்குப் பயித்தியமானவர்களானால், உண்மையிலே ஞானிகளாயிருப்போம். (1.கொரி.1:20-21).

விசுவாச வாழ்கை நமது கவலையையும் பதற்றத்தையும் நீக்கும். தரிசித்து வாழும் வாழ்கை, பூச்சியினாலும், துருவினாலும், திருட்டினாலும், இழப்பை உண்டாக்கும் (மத்.6:19).

‘ஒருவர் பின்பற்றிச் செல்ல வேண்டிய வழி எத்தனை புதுமையாயிருக்கிறது. அவர் தன் பாதையில் தடுமாறுகிறார். அச்சத்திலிருந்து விடுதலை பெற்று மகிழ்ச்சியின் நம்பிக்கையை அடைகிறார். மரணத்திலிருந்து வாழ்வைப் பெறுகிறார். அவருடைய போலிக்கட்டுகள் எவ்வளவுதான் அழகாயிருந்தாலும் அவை, முற்றிலும் அகற்றப்பட வேண்டும். சிறந்த தீர்மானங்கள் நீங்க வேண்டும். அவருடைய சுயம் முற்றும் நீங்கும்வரை, அவர் இரட்சிப்படைவார் என எதிர் பார்க்கமுடியாது. இவையாவும் நடந்தபிறகு, பாவமன்னிப்பினால் அவருடைய இருதயம் நம்பிக்கை பெறுகிறது. பாவமன்னிப்பைப் பெற்றவருக்குச் சமாதானம் கிடைக்கிறது. இதுமுதல் முரண்பாடுகள் அவரிடத்தில் தொடங்குகிறன”. என்று கிறிஸ்தவ வாழ்வின் முரண்பாடுகளைக் குறித்து ஒருவர் எழுதியுள்ளார்.

16. April

»… als Sterbende, und siehe, wir leben.« 2. Korinther 6,9

Die Bibel ist voller Paradoxe, d.h. Wahrheiten, die dem entgegenzustehen scheinen, was wir normalerweise erwarten würden, oder Wahrheiten, die scheinbar einander widersprechen. G.K. Chesterton meinte, dass ein Paradox die Wahrheit ist, die einen Kopfstand macht, um Aufmerksamkeit zu erregen.

Wir retten unser Leben, indem wir es verlieren; wir verlieren unser Leben, indem wir es lieben (Markus 8,35).

Wir sind stark, wenn wir schwach sind (2. Korinther 12,10), und kraftlos in unserer eigenen Stärke (Johannes 15,5).

Wir finden vollkommene Freiheit als Sklaven Christi, aber Knechtschaft, wenn wir frei sind von Seinem Joch (Römer 6,17-20).

Wir erfahren mehr Freude, wenn wir mit anderen teilen, was wir haben, als wenn wir mehr bekommen. Oder, mit den Worten des Herrn: »Geben ist seliger als Nehmen « (Apostelgeschichte 20,35).

Wir vermehren, was wir haben, indem wir es ausstreuen, und werden arm, wenn wir es für uns selbst horten (Sprüche 11,24).

Wir haben eine neue Natur, die nicht sündigen kann (1. Johannes 3,9), und doch ist alles, was wir tun, von der Sünde befleckt (1. Johannes 1,8). Wir siegen durch Unterwerfung (1. Mose 32,24-28) und unterliegen durch Kämpfen (1. Petrus 5,5c).

Wir werden erniedrigt, wenn wir uns erhöhen, aber Er erhöht uns, wenn wir uns erniedrigen (Lukas 14,11).

Wir können alles besitzen und doch nichts haben; wir können arm sein und doch viele reich machen (2. Korinther 6,10).

Wenn wir weise sind, dann sind wir Toren, aber wenn wir Narren um Christi willen sind, dann sind wir wirklich weise (1. Korinther 1,20.21).

Das Leben des Glaubens bringt Freiheit von Angst und Sorge; das Leben im Schauen bringt Angst vor Verlust durch Motten, Rost und Diebe (Matthäus 6,19).

Der Dichter sieht das Leben des Christen als Paradox von Anfang bis Ende:

Wie seltsam ist der Kurs, den ein Mensch steuern muss,
Wie verwickelt der Pfad, den er zu gehen hat;
Seine Hoffnung auf Glück entsteht aus der Angst,
Und sein Leben empfängt er aus den Toten.
Seine höchsten Ambitionen müssen zunichte werden,
Seine besten Pläne durchkreuzt;
Auch kann er nicht vollkommen gerettet werden,
Bis er sich völlig verloren gibt.
Wenn all das getan ist und sein Herz gewiss ist
Der völligen Vergebung der Sünden;
Wenn sein Freispruch besiegelt, sein Friede gesichert ist,
Von diesem Augenblick an beginnt sein eigentlicher Kampf.