அகாயா (Achaia)
(அகாயுக்கு என்பவனுடைய தேசம்)

இது ரோமருடைய ஆளுகைக்கு கீழிருந்த கிரேக்க தேசத்தின் ஒரு பகுதி. கிரேக்க தேசம்
என்பது அகாயாவையும், மக்கெதொனியாவையும் அடக்கியுள்ளது (அப்.19:21, ரோம.15:26,
1.தெச.1:8).
கல்லியோன் இந்த நாட்டிற்குஅதிபதியாயிருந்த காலத்தில் யூதர்கள் பவுலுக்கு
விரோதமாய்க் குற்றஞ்சாட்டினபோது, அவன் அவர்களைத் துரத்தி விட்டான்
(அப்.18:12-16)
பவுல் மக்கெதோனியா அகாயா நாடுகளில் சுற்றித் திரிந்து, உபதேசம்பண்ணினான்
(அப்.19:21). இத் தேசத்தார், எருசலேமிலிருந்த தரித்திர விசுவாசிகளுக்குச்
சகாயம் செய்தார்கள் (ரோ.15:26).
அகாயாவிலிருந்த சபைக்கு எப்பனெத்து என்பவனுக்கும், பவுல் வாழ்த்துதல்
சொல்லுகிறான் (ரோ.16:5).