May

மே 29

மே 29

உம்மிலே பெலன் கொள்ளுகிற மனுஷனும்… பாக்கியவான்கள் (சங்.84:5).

ஆண்டவர் இயேசு கிறிஸ்துதான் நமது பெலன். இதையே பவுல், தேவன் நமக்குப் பலமும் அன்பும் உள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார் என 2.தீமோ.1:7ல் கூறுகிறார். தொடர்ந்து அவர், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவேன். அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன் (2.கொரி.12:9-10) எனக் கூறியுள்ளார்.

நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன். இதுதான் தேவனிடமிருந்து கிடைக்கும் பலத்தின் ஆசீர்வாதம். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்? (சங்.27:1) என்ற சங்கீதக்காரனின் பாடலிலிருந்து நாமும் கற்றுக்கொள்ளவேண்டும். மார்ட்டின் லூத்தர் சங்கீதம் 46:1ல் தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும் ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர் எனக் கற்றுக்கொண்டதுபோலும், ஆசாப், என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது. தேவன் என்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார் (சங்.73:26) என்று கூறியதுபோன்றும் நாமும் தைரியங்கொண்டிருக்கலாமே!

சுய பெலத்தை நம்பாதே! இயேசுவைச் சார்ந்திரு. சந்தர்ப்பங்களைச் சார்ந்திராதே. ஆனால் சர்வ வல்லவரைப் பற்றிக் கொண்டிரு.