May

மே 24

மே 24

…… பரிபூரணமடையவும்…. போதிக்கப்பட்டேன் (பிலி.4:12).

இல்வாழ்விற்குத் தேவையான யாவற்றையும் சிலர் பெற்று அனுபவிக்கின்றனர். ஆனால் நாமமோ அவர்களுக்குச் செல்வம், புகழ், பக்தி, பதவி, நண்பர்கள், குடும்பம், அன்பு, அந்தஸ்து யாவும் உள்ளன என்று தவறாக எடைபோட்டு விடுகிறோம். இதேபோன்று தாவீது, அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாய் நடந்தேறுகிறது (சங்.73:7) எனக் கூறியுள்ளார். ஆனால் தேவனை நம்பும் ஆத்துமா இருப்பதைக்கொண்டு சிறப்புடன் திருப்தியுடன் வாழும்.

சிட்சையில் மகிழுகிற இருதயதம் தாழ்மையும், ஆவியில் இனிமையும், குழப்பமான வேளையில் அமைதியும், கர்வத்தை விட்டு மீறுதலில் சிட்சையையும் ஏற்றுக்கொள்ளும். அதிலே மகிழ்ச்சியைக் காணும். போதுமென்கிற மனமே இதற்கு சிறந்த மருந்து. நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல, எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது (2.கொரி.3:5) என்று பக்குவப்பட்ட இருதயமே கூறும்.

மோசேயின் வாழ்வில் அவன் எவ்விதம் நிலையான சந்தோஷத்திற்கென பாடுபட்டானென்று காண்கிறோம். பார்வோனின் அரண்மனையில் அவனுக்குத் தேவையான யாவும் கிட்டிற்று. ஆனால் நித்தியமான பரலோக பாக்கியத்திற்கென எல்லாவற்றையும் விட்டுவிட்டு தேவனுக்கென பாடுபடுவதை நலமெனத் தெரிந்துகொண்டான். தன் சாதனைகளைக் குறித்து மோசே பெருமை பாராட்டியிருக்கலாம். ஆயினும் அவன், மிகுந்த சாந்தமுள்ளவனாயிருந்தான். (எண்.12:3). மோசே தன் சகோதரருக்கென உதவி செய்வதே தன் பாக்கியமாகக் கருதி மகிழ்ந்தான் (அப்.7:23). அவன் தேவனுக்கென கீழ்ப்படிந்தான்.

பிறருக்கென துன்பம் சகிப்பதைத் தெரிந்துகொள்வது கிறிஸ்துவுக்கென ஊழியம் செய்வதற்கு ஒப்பாகும். கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு. அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள் செய்வார் (சங்.37:4).