May

மே 18

மே 18

…. இதோ, சிங்கத்தின் உடலுக்குள்ளே தேனீக்கூட்டமும் தேனும் இருந்தது (நியா.14:8)

சிம்சோனால் இதைப்பற்றி விளக்குவது சற்று கடினம். யாக்கோபும் இதையே, என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது… அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள் எனக் கூறுகிறார். கடினமான சோதனைகளில் சந்தோஷமடைவதா?

நமக்கு ஆலோசனையாகவே ஆவியானவரால் எவப்பட்டு இதை எழுதியுள்ளார். பலவிதமான சோதனைகளில் அகப்பட்டு வெளியேறின பின்புதான் ஒவ்வொரு சோதனையும் நமது நன்மைக்கென கொடுக்கப்பட்டவை என்று உணருகிறோம். சோதனைகள் வரும்போது நம் பலவீனங்களை அறியமுடிகிறது. இதனால் நம் திறமையின் எல்லையினையும் கண்டுகொள்ள முடிகிறது. அதோடு இது கைவிடாத தேவனின் அன்பினையும், பலத்தினையும் நமக்கு வெளிப்படுத்துகிறது. நாம் உதவியற்று, பலவீனமாயிருக்கிறோம் என்பதை உணருமட்டும் அவர் கிருபை போதுமானது என்பதை உணரமுடியாது. நாம் தனிமையாக இருக்கிறோம் என்பதை உணரும்போதுதான், அவரது நீங்காத பிரசன்னத்தை உணரமுடியும். தேவனுடைய ஆவியினால் வல்லமை பெற்ற சிம்சோன் சீற வந்த சிங்கத்தினை சிறு ஆட்டுக்குட்டியபை;போன்று கிழித்துப் போட்டுவிட்டான். தேனீக்கள் சிங்கத்தின் உடலைத் தங்கள் கூடு கட்டும் இடமாக தெரிந்தெடுத்துக்கொண்டன. அவன் அந்தச் சிங்கத்தின் உடலிலிருந்த தேனை எடுத்தான். நம் எதிராளியானவன், கெர்ச்சிக்கிற சிங்கம் என்று 1.பேதரு 5:8ல் கூறப்பட்டுள்ளது. அவனுக்குப் பயப்படும் பயம் நம்மைப் பார்த்து கெர்ச்சிக்கும்போது, நமக்கு பலமும் வெற்றியின் இனிமையையும் தேவன் கொடுப்பார்.