May

மே 16

மே 16

நான் உம்முடைய சாட்சிகளைக் குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன் (சங்.119:46).

ஸ்டாக்கொல்ம் என்ற பட்டணத்தில் நான் இருந்தபோது ஒரு நாள் காலையில் எனக்கு இந்த வாக்குத்தத்தம் முதன் முதலாக தெளிவாகக் கொடுக்கப்பட்டது. மத்திய ஐரோப்பாவிற்கும், மக்கதொனியாவிற்கும் சுவிசேஷத்தை அறிவிக்க நாங்கள் இருவர் பயணப்பட்டோம். அவ்வேளையில் எத்தியோப்பியாவிற்கும் வரவேண்டுமென கேட்டு அடிஸ் அபாவிலிருந்து தந்தி கொடுத்திருந்தனர். அங்கே தேவனுடைய ஊழியத்திற்கு உதவி தேவைப்பட்டது. ஆனால் எங்களுக்கு வழி முழுவதுமாக அடைபட்டதாகத் தோன்றிற்று. ஏனெனில் விமானத்தில் செல்ல பதிவு செய்ய இயலவில்லை. விசாவும் பெறவில்லை. எவ்வித ஏற்பாடும் இல்லை.

ஒன்றும் இயலாத வேளையில் இராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசச் சொல்லிய இவ்வசனம் எனக்குக் கிடைத்தது. இந்தச் சூழ்நிலைக்கு ஏற்றதாகத்தான் தேவன் கூறுகிறாரா? ஆம், அவர் வாக்களிப்பின்படி அதிசயமான வகையில் வழியைத் திறந்துகொடுத்தாh. தேவனுடைய சித்தம் அதுவாக இருந்ததால் உலகின் எந்த மூலை யிலிருந்தும் அமெரிக்காவிற்குச் செல்வது எளிதாக வழி கிடைப்பதுபோல் அடிஸ் அபாபாவிற்கச் செல்லவும் வழிகிட்டிற்று.

எளிமையாக வாழும் ஏழை மக்களிடமாயினும் மாடமாளிகையில் வாழும் உலகத் தலைவர்களாயினும் யாரிடமாயினும் நாம் எளிமையும், உண்மையும் உள்ளவர்களா நமது இரட்சகருக்கென சாட்சி பகரவேண்டும். அவர் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவரை நாம் மகிமைப்படுத்தும்போது, நீர் ஒருபோதும் வெட்கமடைவதில்லை. தம்மை நம்பும் பிள்ளைகளின் வாழ்க்கையை அவர் தைரியம் நிறைந்ததாகச் செய்கிறார்!