May

மே 14

மே 14

….. எனக்காகப் பரிதாபப்பட்டு…. அதை வெளிப்படுத்த உங்களில் ஒருவனாகிலும் இல்லையா? (1.சாமு.22:8).

சுயத்தை மையமாகக்கொண்ட மனிதன் சாந்தமாயும், உணர்ச்சிமிக்கவனாயும், சுயநலவாதியாகவும் இருப்பான். சுய இரக்கமுள்ளவன் தன்னைப்பற்றியே பரிதாபப்பட்டுக் கொள்வான். வலிமையையும் இழந்துவிடுவான். கர்வம் வரும்போது மற்றவர்களை மதிக்காமல் தன்னைப்பற்றியே அதிகமாக சிந்திக்கிறான். ஆகவே கர்வமுள்ளவன் இகழ்ச்சியடைவான். கசப்பான ஆவி அவன் கறைவுகளை அறியமுடியாதபடி செய்துவிடுகிறது. தன்னையே பெரிதுபடுத்தும் அவன் சோம்பேறியாகி விடுகிறான். தன்னைக் காத்துக்கொள்ள விரும்புகிறவன் தன் மதிப்பை இழந்துவிடுகிறான். என்ன பரிதாபம்! இந்த நிலையில் நீ இருக்கிறாயா?

மற்றவர்கள் புகழப்படுகின்றனர். வாழ்த்துக்களைப் பெறுகின்றனர். உன்னைப் புறக்கணித்துவிட்டனரா? மறந்துவிடு. உன் வேலை உனக்குப் பெரிதாகத் தோன்றும்போது அதில் மற்றவர்களையும் ஈடுபடச் செய். அப்பொழுது நீ ஒரு பெரிய மனிதனாக முடியும். உன்னைக் காட்டிலும் மற்றவர்கள் நன்கு செய்வார்களாயின் அவர்களையே செய்யும்படி விட்டுவிடு. அவர்களிடம், தேவன் அசீர்வதிப்பாராக எனக் கூறு.

ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல் மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும், தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள் (பிலி.2:3,15,16).