May

மே 9

மே 9

…. அவன் தூஷிக்கட்டும்…. ஒருவேளை கர்த்தர் என் சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் நிந்தித்த நிந்தனைக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார் (2.சாமு.16:11-12).

தாவீதுக்கு விரோதமாக யாவரும் எழும்பினர். சீமேயீ என்பவன் கோபத்துடன் இழிவாகப் பேசினான். உடைந்த உள்ளத்துடன் இருந்த மன்னன் தாவீது பொறுமையுடன், அவன் என்னைத் தூஷிக்கட்டும் விட்டுவிடுங்கள் எனக் கூறினான்.

இழிவான தூஷணத்திற்கும், எதிர்ப்புக்கும் ஒப்புக்கொடுத்தவர்களில் தாவீதும் ஒருவன். மோசே தன் காலத்தில் இதே போன்று துன்பங்களைச் சகித்துக்கொண்டான். அவனை இஸ்ரவேல் ஜனங்கள் நித்தித்தாலும் மறந்து மன்னித்திருக்கலாம். ஆயினும் அவனது சொந்த சகோதரியும், சகோதரனும் அவனது மனைவியினிமித்தம் நிந்தித்துப் பேசினர். அதைச் சகித்த அவன் மனுஷர்களில் சாந்தகுணமுள்ளவன் என்று பெயரெடுத்தான்.

இப்படிப்பட்ட அனுபவத்திற்குள் சென்று வந்தவர் பவுல். ஆகவேதான் அவர், நாங்கள் எப்பத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை. கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை. தன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை. கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை. (2.கொரி.4:8-9) என எழுதியுள்ளார். ஆகவே, ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள். எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது. நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால் நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள் (ரோ.12:17-19).