May

மே 4

மே 4

எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப் பட்டதோ, அவன் பாக்கியவான் (சங்.32:1).

பாவத்தை உணர்ந்து மஸ்தாபப்பட்டுவது கடினம். ஆயினும்இது ஆத்துமாவிற்கு பயனுள்ளது. முதலில் கசப்பாகத் தோன்றிடினும் பின் அது இனிமையாக இருக்கும்.குற்றத்தைக் குத்திக்காட்டி வேதனைப்படுத்தும் மனச்சாட்சியை அறியாத இருதயத்தினால்,மன்னிக்கப்பட்ட, குணமாக்கப்பட்ட, இருதயம் அடையும் மகிழ்ச்சியை அறிய இயலாது. இப்படிப்பட்டகுற்றத்தை உணரும் மனச்சாட்சி இல்லையெனில், நாம் கண்களை மூடிக்கொண்டு அழிவுக்கு கொண்டுசெல்லும் விசாலமான வழியில் நடந்துகொண்டிருக்கிறோம் என்பது தெளிவு.

தாவீது தன் குற்றத்தை மறைக்கவில்லை. அதைஅறிக்கையிட்டான்! அதை அவன் மூன்று சொற்களால் வெளியிடுகிறார். இவை, ஒவ்வொன்றைக்காட்டிலும் அழுத்தமான பொருளுடையவை. இப்படியாக அவன் தன் இருதயத்தின் அடிப்படைத் தேவையைவெளியிடுகிறான். மீறுதல், பாவம், அக்கிரமம் இம்மூன்றும் வாழ்வின் சாபங்கள். இதற்குஎவ்வித மன்னிப்பும் கிடையாது.

பாவத்தை உணரும் அனுபவம் இருதயத்தை ஊடுருவிப்பாயும்தன்மையுள்ளது. நாம் நம்முடய பாவங்களை வெளிக்காட்டாமல் அமைதியாக இருக்கலாம். மூடிமறைக்க முயலலாம் அல்லது தள்ளிப்போடலாம். பாவத்தை மறந்துவிடுவதால் மன்னிப்பைத்தேடவேண்டியதில்லை என்று பொருளல்ல. ஆவியானவரைத் துக்கப்படுத்தாதபடியால் விடுதலைபெற்றுவிட்டோம் என்று கருதுகிறோமா?

அறக்கிகையிடு, மன்னிப்பைப் பெற்றுக்கொள்.