May

மே 2

மே 2

….. பயப்படாதிருங்கள். நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள் (யாத்.14:13).

நம்முடைய வாழ்விலும் பலமுறை கொடிய எஜமானாகியபார்வோனுக்கும், சிவந்த சமுத்திரத்திற்கும் நடுவே நிற்பதாகக் கூறியுள்ளோம். இப்படிப்பட்டஇக்கட்டில் சிக்கித் தவிப்பது வேதனைக்குரியது.

இஸ்ரவேலர் அவர்களது பழைய கொடிய எஜமானாகியபார்வோனுக்கும், சிவந்த சமுத்திரத்திற்கும் நடுவே மாட்டிக்கொண்டனர். இரண்டு பக்கமும்தப்பிக்க வழியின்றி தவித்தனர். நம்மைப்போன்ற மனிதர்களாகிய அவர்கள் தேவனை நோக்கிக்கூப்பிடுவதை மறந்து மோசேயை நோக்கிக் கூக்குரலிட்டனர். இப்படிப்பட்ட சம்பவங்கள் நம் ஸ்தாபனங்களில் நிகழுவது சகஜம். பெரிய இடுக்கண் வரும்போது தலைவர்களைக் குறை கூறுவதையும்,திட்டுவதையும் விட்டு சர்வ வல்ல தேவனை நோக்கிக் கூப்பிட்டு அவரது ஆலோசனையையும்தேறுதலையும் பெற்றுக்கொண்துண்டா?

தேவனுக்குள்ளாக இருந்து தலைமைப் பொறுப்பைஏற்றுக்கொள்ளும்போது இக்கட்டுகள் நேரிட்டாலும், இருள் சூழ்ந்து கொண்டாலும், நீங்கள்நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள் என்றுஉறுதியுடன் கூறமுடியும். அதிகாரத்தில் இருப்போர் அமைதியாயிருக்கவேண்டும். எதிரியிடம்சரணடையக்கூடாது. குழப்பக் கடலில் குதித்துவிடக் கூடாது. சகப்புடனும், தேவனிடம் அவிசுவாசம்கொண்டு அவர் நமக்குக் கொடுத்த தலைமைப் பொறுப்பைத் தள்ளிவிட வேண்டுமென முயற்சிக்கவும்கூடாது.

அமைதியுடன் நின்றுகொண்டு கவனி…. தேவகட்டளைக்குக் காத்திரு. பொறுமையுடன் இரு. அவரது பிரசன்னத்தைக் குறித்து முறுமுறுக்காதே.தம்மை நம்பும் பிள்ளைகளுக்கு எதிர்பாராத விதமாகப் பதிலளித்து, எண்ணிப் பார்க்கமுடியாதவற்றை நடப்பித்துக் காண்பிப்பார்.