March

மார்ச் 28

மார்ச் 28

இப்படியிருக்க பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள் (1.யோ.2:28).

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போதுநமக்கு ஊக்கமளிக்கும் விதமாக கூறப்பட்ட வாக்குத்தத்தங்களில் இதுவும் ஒன்று. அவரது இரண்டாம்வருகையைப்பற்றி வேதத்தில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. அவர் வரும் வேளையில் தேவஎக்காளம் ஊதப்படும். அப்பொழுது எல்லாக் காலங்களிலும் உள்ள அவருக்குச் சொந்தமானயாவரும் கூட்டிச் சேர்க்கப்பட்டு அவரோடுகூட வாழுவோம். அப்பொழுது முதலாவது நாம்கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பு நின்று, அவருக்கு நம் வாழ்வில் செலுத்தியஅன்புக்கும், கீழ்ப்படிதலுக்குமுரிய கணக்கொப்புவிக்கவேண்டும். நம்முடைய கிரியைகள்சுயத்தை மையமாகக் கொண்டிருப்பின் அவை மரம், புல், வைக்கோல் ஆகியவற்றால்கட்டப்பட்டவைபோல், அக்கினியில் வெந்துபோகும். ஆனால், அவை சுயநலமின்றி அவருடையமகிமைக்கென்று கட்ட்பட்டிருப்பின் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கற்களால்கட்டப்பட்டவைபோல் அக்கினியால் பரிசோதிக்கப்பட்டு நிலைத்து நிற்கும்(1.கொரி.3:12-14).

இரட்சிப்பிற்கென அவரைச் சார்ந்திருந்த விசுவாசம்நமக்குண்டு. காணிக்கை, பலி இவற்றைக் காட்டிலும் சிறந்த கீழ்ப்படிதலை நாம் அவருக்குக்காட்டினோம். நம்மைப்பற்றிக் கவலைப்படாமலும், பாடுகளைப் பார்த்து பயப்படாமலும்,அவருடைய நாமத்திற்கென நாம் உண்மையான சாட்சிகளாய் நிலைத்து நிற்கிறோம். இப்படிப்பட்டநம்பிக்கையோடு நாம் அவருக்கு முன்பு நிற்போமாகில் எவ்வளவு நலமாயிருக்கும்!

அவர் திரும்ப நியாயம் தீர்க்க வருவதால் நாம்ஒவ்வொரு நாளும் நம்மைச் சுத்திகரித்துக்கொள்ளவேண்டும். அவர் வரும்போது மாசற்றவர்களாகநிற்க, ஒவ்வொரு விசுவாசியும் அவருக்கென எரிந்து பிரகாசிக்கவேண்டும். அவரில் நிலைத்துநிற்கவேண்டும். அவருக்கு முன்பாக வெட்கப்படாதவர்களாக தைரியத்தோடு நிற்போமாக !