March

மார்ச் 23

மார்ச் 23

அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை (ரோ.101:11)

இரட்சிப்பின் வழி ரோமர் 10ம் அதிகாரத்தில் மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும். இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.

மீட்பின் தத்துவங்களைப் புரிந்து கொண்டோமோ இல்லையோ ஆனால் அதைப்பற்றி இருதயத்தில் விசுவாசிக்கிறோம். விசுவாசத்தினால் நாம் பாவமன்னிப்பைப் பெற்றுக்கொள்கிறோம். கிறிஸ்துவுக்குள் புதிய வாழ்வை அடைகிறோம். கடந்த காலம் முழுவதும் கழுவப்பட்டுவிட்டது. நிகழ்காலம் அவரது பிரசன்னத்தால் நிறைந்து ஆசீர்வாதமாயிருக்கிறது. எதிர்காலம் பரலோகத்தின் நிச்சயத்தினால் ஒளிமயமாகத் தோன்றுகிறது.

இரட்சகரில் விசவாசம் வைக்கும் ஒவ்வொருவரும் அவர் நமக்கு என்ன செய்துள்ளார் என்பதைப் பிறருக்கு எடுத்துரைக்க வேண்டும். இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். மக்களுக்கு நடுவே நாம் சாட்சிகூறும்போதுதான் நாம் இரட்சிக்கப்பட்டவர்களாவே கருதப்படுகிறோம். இந்தச் சாட்சியினால் நாம் பலப்படுவோம். ஆகவே மறுபடியும் பிறந்த கிறிஸ்தவன் தான் புதிதாகக் கண்டுகொண்ட விசுவாசத்தைப்பற்றியும், இரட்சிப்பின் அனுபவத்தைக் குறித்தும் ஒரு சில வார்த்தைகள் சொல்லவேண்டும். இதனால் அவர்களும், நாமும்கூட ஆனந்தக் கண்ணீர் சிந்தி மகிழுவோம். இதன்மூலம் இரட்சகரை விசுவாசிக்கிற எவனும் ஏன் வெட்கமடைவதில்லை என்பதை நாம் அறிந்துகொள்கிறோம்.