March

மார்ச் 21

மார்ச் 21

…….. அது என் வாய்க்குத் தேனைப்போல் தித்திப்பாயிருந்தது (எசேக்.3:1).

தேவசித்தம் நமக்குத் தேனைப்போன்று இனிமையாக இருக்கும்.ஆனால் எசேக்கியேல் தேவனுடைய வெளிப்பாட்டிற்கு விரோதமாக இருந்தான். அவன் வெளிநாட்டில்ஒரு கைதியாக இருந்தான். அதுவும் தன் சொந்த நாட்டைவிட்டு அதிக தூரத்தில் இருந்தான்.தன்னுடைய நிலைமையைக் கண்டு அவன் வெறுப்புற்றான். தன் சொந்த நாட்டை விட்டும், தனக்கும்அன்பான மக்களை விட்டும் பிரிந்திருப்பது சிலருக்கு வெறுப்பை ஏற்படுத்தி தேவனுடைய இனியசித்தத்திற்கு விரோதமாய் இருதயத்தைக் கடினப்படுத்தும்.

மேலும் தேவன் எசேக்கியேல் கடின முகமும்,முரட்டாட்ட இருதயமுள்ள மக்களிடம் தன்னைப்பற்றிக் கூறும்படி அழைத்தார். அவர்கள் கேட்டாலும்,கேளாவிட்டாலும் அவர்களோடே பேசி, கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்றுஅவர்களுக்கு சொல் என்றார் (எசேக்p. 3:11). வெற்றியோ, தோல்வியோ ஏதுவாயினும் இரண்டையும்ஒரு தீர்க்கதரிசி சமமாகவே கருதவேண்டும்.

கிறிஸ்தவ வாழ்வில் கடமையைச் செய்ய இயலாதபடிசோதனைகள் வரலாம். அல்லது கட்டுப்பாட்டிற்குள் இருக்கவும் நேரிடலாம். அப்பொழுது நாம்நம் இருதயத்தைக் கடினப்படுத்தி அவற்றை ஏற்றுக்கொள்ள மறுக்கலாம். நம்மைச் சீர்படுத்ததேவன் பயன்படுத்தும் விதிகளைக் குறித்தும், கருவிகளைக் குறித்தும் குறை கூறலாம். இம்மைக்கும்,நித்தியத்திற்குமுரிய இழப்புகளைக் குறித்து முறுமுறுக்கலாம். இந்நிலையில் நாமும், நமதுஆண்டவர் இயேசு கிறிஸ்து அன்று கெத்சமனேயில் கூறியதுபோன்று இருதயத்தின் ஆழத்திலிருந்து,என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது எனக் கூறுவோமா? உடைந்த உள்ளத்திற்குக் கட்டுப்பாட்டோடு இருப்பதும், கடமை தவறாமல் செயல்படுவதும் கடினம்.ஆனால் மனிதனுக்குக் கசப்பாகத் தோன்றுகிற யாவற்றையும் தேனைப் போன்று இனிமையாக்குகிறவர்தேவன் ஒருவரே!