March

மார்ச் 20

மார்ச் 20

என்னிமித்தம் உங்களை நிந்தித்து துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். சந்தோஷப்பட்டு, களிகூருங்கள் (மத்.5:11-12).

தெசலோனிக்கேயின் விசுவாசிகள் சந்தோஷத்தைப்பற்றிஅதிகமாக அறிந்திருந்தனர். இதனால் பவுல், நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்தஆவியின் சந்தோஷத்தோடே திருவசனத்தை எற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்தரையும்பின்பற்றுகிறவர்களானீர்கள் (1.தெச.1:6) எனக் கூறியுள்ளார். பிலிப்பு பட்டணத்துச்சிறைச்சாலையில் நடு இரவில் சந்தோஷத்தைப்பற்றி பவுல் பிலிப்பு பட்டணத்து சபைக்குப்பிற்காலத்தில் எழுதிய கடிதத்தில், நீங்கள் மருளாதிருக்கிறது அவர்கள்கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும்அத்தாட்சியாகயிருக்கிறது. இதுவும் தேவனுடைய செயலே ஏனெனில், கிறிஸ்துவினிடத்தில்விசுவாசிக்கிதற்கு மாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்குஅருளப்பட்டிருக்கிறது. நீங்கள் என்னிடத்திலே கண்டதும் எனக்கு உண்டென்று இப்பொழுதுகேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கு உண்டு (பிலி.1:28-30) என்று கூறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு இக்கட்டிலும், வேதனையிலும் பவுலுக்குத்தேவையான வல்லமைக்கு மேலாகவே தேவன் கொடுத்தார். எல்லாவிதமான நிந்தனைக்கும், தீமையானமொழிகளுக்கும் மிகுதியான சந்தோஷமும் பலனும் கிட்டும் என்பது உறுதி. அதிகாரிகளுக்கும்,நியாயாதிபதிகளுக்கும் முன்பாக நிறுத்தப்பட்டாலும், மீள முடியாத ஆபத்தின் நடுவிலேசிக்கினாலும், மிகக் கொடிய பகைவராலோ, கள்ள நண்பர்களாலோ சூழப்பட்டாலும், பவுல்கர்த்ராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமையைத் தொடர்ந்து அனுபவித்துவந்தார். நீங்களும் அதை அனுபவித்து வருகிறீர்களா?