March

மார்ச் 18

மார்ச் 18

அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப் போகாதிருந்து, பஞ்ச காலத்திலே திருப்தியடைவார்கள் (சங்.37:19).

எவ்வளவுதான் ஐhக்கிரதையாக இருந்தாலும் ஒவ்வொருவருடைய வாழ்விலும் சோதனைகள் வருவது இயல்பு. இருள் இருந்தால் கட்டாயம் ஒளியும் இருக்கும். வீழ்ச்சிக்குப்பின் ஓர் உயர்வு உண்டு. இந்த வாக்குத்தத்தத்தை அப்படியே வார்த்தையின்படியும் அர்த்தம் கொள்ளலாம். அதே வேளையில் உருவகமாகக் கூறப்பட்டதாகவும் கொள்ளலாம்.

தேவனுடைய பிள்ளைகள் பலர் பஞ்சகாலத்தில் திருப்தியடைந்திருக்கிறாகுள். 1930ம் ஆண்டு எற்பட்ட பஞ்சத்தால் குடும்பங்களில் போதுமான உணவு இல்லாமல் நம்மில் பலர் பட்டினியாகக் கிடந்ததுண்டு. அப்பொழுது சிறிய காரியங்களுக்காக தேவனை ஸ்தோத்தரிக்க ஆரம்பித்தோம். தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று, அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக (சங்.107:8.9) என்ற வசனங்களின் அர்த்தத்தை என் வாழ்வின் அனுபவத்தால் உணர்ந்தேன்.

ஆகவே பஞ்ச காலத்தைக் குறித்து நாம் பயப்படத் தேவையில்லை. நீதிமான்கள்பேரில் கர்த்தருடைய கண்கள் நோக்கமாயிருக்கிறது. அவர்களுடைய கூப்பிடுதலுக்கு அவரது செவிகள் திறந்திருக்கிறது. தம் மக்களுடைய நடைகளை செவ்வைப்படுத்துகிறவர் அவரே. அவர்களுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார். விழும்போது தள்ளுண்டு போகாதபடிக்கு அவர் தாங்குகிறார். அவர் நீதிமானைக் கைவிட்டதில்லை (வச.23-25).

ஆபத்துக்காலத்தில், அதிகமாகச் சோதிக்கப்படுகிற விசுவாசமுள்ள ஆத்துமா இருளுக்குப்பின் தேவன் இருப்பதை உணரும். அவர் தம்முடைய பிள்ளைகளைத் திருப்தியாக்குகிறார். அவர்கள் என்றுமே வெட்கப்படுத்தப்படுவதில்லை.