March

மார்ச் 13

மார்ச் 13

அன்று சாயங்காலத்தில் என் மனைவி செத்துப்போனாள். எனக்குக் கட்டளையிட்டபடியே விடியற்காலத்தில் செய்தேன். (எசேக்.24:18)

தேவன் நமது உள்ளத்தில் ஊற்றியிருப்பதுதான் மனித அன்பு. கணவன், மனைவி இடையே உள்ள அன்பு பெற்றோர் பிள்ளைகளிடம் காட்டும் பாசம், நண்பர்களிடையே உள்ள நட்பு. இவை யாவும் வாழ்விற்குத் தேவைதான். ஆனால் வேதம் நாம் தேவனிடம் செலுத்தும் அன்பையே இவற்றிற்கெல்லாம் சிறந்தது எனக் கூறுகிறது. உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக…. உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக (மத்.22:27,39). இயேசு கிறிஸ்துவின் உண்மையான ஊழியன், தன் குடும்பத்தாரையும், நண்பர்களையும் நேசிப்பான் என்பது உறுதி. அவர்களிடம் அன்புகூரும் அவன் எல்லாருக்கும் மேலாகத் தன் இரட்சகரிடம் அன்புகூருவான்.

தேவனுடைய பிரியமான பிள்ளைகள் பலருக்கு இவ்விதமாக அன்புகூருவது நடைமுறையில் ஒரு பெரும் சவாலாக அமைந்துவிடுகிறது. இதே அனுபவம் எசேக்கியாவின் வாழ்விலும் ஏற்பட்டது. அவன் மனைவி அவன் கண்களுக்கு விருப்பமானவள் (எசேக்.24:16). அவள் திடீரென அவனைவிட்டு எடுத்தக்கொள்ளப்பட்டாள். அதுவும் முன்கூட்டி வியாதிப்பட்டதினால் அல்ல. தீடீரென சடுதியாக செத்துப்போனாள்.

எனக்குக் கட்டளையிட்டபடியே விடியற்காலத்தில் செய்தேன் எனக் கூறுகிறார். அவன் தேவனுக்குக் கீழ்ப்படிந்தான். அதற்காக அவன் மனைவியிடம் அன்பு செலுத்தவில்லையென்று கூறமுடியாது. இதை அவன் தேவனிடம் கொண்டிருந்த மேலான அன்புக்கு உதாரணமாகக் கூறலாம். இவ்விதத் தேவையுள்ள மக்கள் பலர் அங்கு இருந்தனர். அயலானுக்கு உதவவேண்டும் என்று அவனை அவன் மனைவியும் வற்புறுத்தியிருக்கலாம். அவன் தனக்குப் பிரியமான மனைவிக்கு உண்மையுள்ளவனாக தேவனிடம் அன்பு செலுத்தினான். அகவே, அவன் தனது தேவனிடமிருந்து பரிபூரண ஆறுதலைப் பெற்றான். தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையில் முன்னேறிச் சென்றான்.