March

மார்ச் 12

மார்ச் 12

…. காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்…. (யோ.20:20)

யோவான் சுவிசேஷத்தில் நம்முடைய விசுவாசத்திற்குச் சவாலாக அமையும் பகுதிகள் பல உண்டு. விசுவாசித்து நடக்கும்போது விடுதலையையும், தேவ தயவையும் பெறுவோம். தரிசித்து நடப்போமாகில், பரிதபிக்கப்பட்டத்தக்கவர்களாயும், தவறாக கருதப்படுகிறவாகளாயும் இருப்போம்.

கானாவூர் கலியாணத்தின்போது இயேசுவின் தாய் வேலைக்காரரை நோக்கி, அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள் (யோ.2:5). இது ஒரு பெரிய கட்டளை. இதற்குத் தொடர்பான அறிகுறிகள் ஏதும் தோன்றாமல் இருப்பினும் அவருடைய சித்தத்திற்கு முழுமையாக ஒப்புவித்து, கீழ்ப்படிய ஆயத்தமாக இருக்கிறீர்களா? எதைச் சொன்னாலும் அப்படியே செய்ய ஆயத்தமா?

யோசுவாவின் படை வீரர்கள் முழுமனதோடும், நீர் எங்களுக்குக் கட்டளையிடுகிறதையெல்லாம் செய்வோம். நீர் எங்களை அனுப்பும் இடமெங்கும் போவோம் (யோசு.1:16) என்றனர். அவர்கள் யுத்தக்களங்களையும், வரும் ஆபத்துக்களையும், எதிர்ப்புகளையும், பாதுகாவலையும் அறிந்திருந்தனர். ஆனால் விசுவாசத்திற்கு இவைகளை அறியவேண்டியது அவசியம் இல்லை. நமக்கு என்ன நேரிடும் என்று கூறப்படவில்லை. அவர் கட்டளையிடும் எதையும் ஏற்கத் தயாராக இருக்கவேண்டும். முழுமனதோடும், விசுவாசத்தோடும் நம்மை அவருக்கென ஒப்புவித்து கீழ்ப்படியவேண்டும். அவரது வழிகள் யாவும் நமக்கு இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட மறைக்கப்பட்ட வழிகளில் நடந்து இந்தப் புனித யாத்திரையை முடிக்க பலர் தயங்குகின்றனர். ஏனெனில், அவர்களுக்குச் சர்வ வல்லவரின்மீது நம்பிக்கையில்லை, அவரே நமது முழு நம்பிக்கைக்குரியவர் என்று அவரைச் சார்ந்திருப்பது அவர்களுக்குக் கடினமாகத் தெரிகிறது. அவர் நம்மைக் கைவிடுவதில்லை என்றும், விட்டு விலகுவது இல்லை என்றும் வாக்களித்துள்ளார். இருப்பினும் அவர்கள் அவரை நம்புவதில்லை. அவர் தம்மை நம்புகிறவர்களை ஒருபோதும் வெட்கப்படுத்துவதில்லை.