March

மார்ச் 6

மார்ச் 6

துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரார் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிரு….. (சங்.1:1-2)

தேவனுக்குள் ஆழ்ந்து வேரூன்றி நிற்கும் இருதயத்தில் தோன்றும் ஆவியின் கனிகளைப்பற்றி நாம் கலாத்தியர் 5:22ல் காண்கிறோம். அது பருவ காலத்தில் தோன்றும் கனி. அதாவது நமக்கு எப்பொழுது தேவையோ அப்பொழுது கிடைக்கும் கனிகள். விரோதம் அதிகரிக்கும்போது அன்பும், இருதயத்தைத் துன்பத்தின் நிழல் மறைக்கும்போது சந்தோஷமும், குழப்பமும் நிறைந்த வேளையில் சமாதானமும், பொறுமை பலவீனப்படும் நேரத்தில் நீடிய பொறுமையும், காரணமின்றி பரிகாசம் செய்யப்படும்போது தயவும், நம்மைப் பிறர் பகைக்கும் வேளையில் நற்குணமும், தனியாக நிற்கும்போது விசுவசாசமும், பொய்யாய்க் குற்றம் சாட்டப்படும் வேளையில் சாந்தமும், நம் விருப்பம்போல் எதையும் செய்யக்கூடிய நேரத்தில் இச்சையடக்கமும் தோன்றவேண்டும்.

அசிசி பட்டணத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் என்ற பரிசுத்தவான் ஜெபித்த ஜெபம் நமக்கு சிறந்த மாதிரிகளாகும். அவர் தேவனே! எங்கள் கிறிஸ்துவே! எங்களை உம்முடைய சமாதானத்தின் கருவிகளாகப் பயன்படுத்தும். பகைக்கப்படுகையில் அன்பைக் காட்டவும், துன்பப்படுகையில் மன்னிப்பைக் கொடுக்கவும், பிரிக்கப்படுகையில் ஒற்றுமை ஏற்படுத்தவும், சந்தேகத்தில் விசுவாசத்தை உருவாக்கவும், நம்பிக்கையற்ற வேளையில் நம்பிக்கையூட்டவும், இருளில் ஒளியாகவும், துக்கத்தில் சந்தோஷத்தைக் கொடுக்கவும்தக்கதாக எங்களைப் பயன்படுத்தும். ஆண்டவரே! ஆறுதலைத் தேடி நாங்கள் அலையாமல் பிறருக்கு ஆறுதல் அளிக்கவும், அறிந்துகொள்ளாதவர்களால் அல்ல, அறிவிக்கிறவர்களாகவும், அன்பைப் பெறுகிறவர்களாக அல்ல, அன்பைப் பொழிகிறவர்களாகவும், வாங்குகிறவர்களாக அல்ல, கொடுக்கிறவர்களாகவும், மன்னிக்கப்படுகிறவர்களாக அல்ல, மன்னிக்கிறவர்களாகவும், நித்திய ஜீவனுக்கென மறுபடியும் பிறக்கத்தக்கதாக சுயத்திற்கென சாகிறவர்களாகவும் இருக்க எங்களுக்கு உதவியருளும் என்று ஜெபிப் பாராம். இந்தக் கனிதான் பழுத்தது. இனி இனிமையாக இருக்கும். ஆவியில் நிறைந்திருங்கள் என்று தேவன் கட்டளையிடுகிறார். உண்மையுள்ளவர்களாக இருப்பதும், கனி கொடுக்கிறவர்களாக இருப்பது நமக்கு அவசியம்.