March

மார்ச் 4

மார்ச் 4

… நீ பயப்படாமலும், கலங்காமலும் இரு…. இதோ ஆயியின் ராஜா வையும்…. உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன் (யோசு.8:1)

ஒரு தடவை தோல்வியடைந்துவிட்டால் எல்லாம்முடிந்துவிட்டது என எண்ணுவது தவறு. பாவங்கள் மன்னிக்கப்படும். வீழ்ச்சிகள் மறையும்.தோல்விகள் மகிழ்ச்சியாக மாறும். நீதிமொழிகள் 28:13ல் தன் பாவங்களை மறைக்கிறவன்வாழ்வடையமாட்டான். அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் எனக்கூறப்பட்டுள்ளது.

புதிய ஏற்பாட்டில் 1.யோவான் 1:9ல் நம்முடையபாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும்நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் எனக் கூறப்பட்டுள்ளதைஒப்பிட்டு நோக்கவும்.

ஆகானுடைய கீழ்ப்படியமையினால் ஆயி பட்டணத்தில்தோல்வி ஏற்பட்டது. பாவம் செய்ததினால் இஸ்ரவேல் படைகள் அந்தச் சிறிய ஆயிபட்டணத்தாரால் தோற்கடிக்கப்பட்டனர். அப்பொழுது அந்தப் பாவம் அறிக்கையிடப்பட்டது.வெற்றியடையும் வேளையும் வந்து சேர்ந்தது. நம் வாழ்விற்கு இது பொருந்தும்.சிங்கத்தைப்போல் தைரியமாக நிற்கவேண்டிய நாம் பாவம் செய்ததினால் நடுங்கிக்கொண்டு,பயந்து, வெட்கப்படுகிறவர்களாக இருக்கிறோம். பாவம் மன்னிக்கப்பட்டு, வீழ்ச்சிகள்மறக்கப்படும்போது முன்னேறிச் சென்று, புதிய வெற்றியையும் விடுதலையையும் உள்ளத்தில்உணருவோம். யோசுவாவுக்கு வெற்றி கிடைக்கும் என்பதைத் தேவன், இதோ ஆயியின் ராஜாவையும்,அவன் ஜனத்தையும், அவன் பட்டணத்தையம், அவன் நாட்டையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்என்று முன்கூட்டியே வாக்களித்துவிட்டார். அதுபோல நமக்கும் வெற்றியை முன்கூட்டியே தேவன்வாக்களிப்பார் என்பது உறுதி.

மன்னிப்பைப் பெற்ற விசுவாசியே, என்பயப்படுகிறாய்? உன் மன உணர்வுகளைச் சார்ந்து நில்லாதே. விசுவாசத்துடன் வாக்குத்தைத்பற்றிக்கொள். தோற்றத்தையோ, சூழ்நிலையையோ, முடியாமையையோ வைத்து எடைபோடுவதுவிசுவாசமல்ல. தேவன் உண்மையுள்ளவர் நம் பாவங்களைக் கழுவி அநியாயங்களை நீக்கி, நம்எதிரிகளிடம் வெற்றி கொள்ளச் செய்கிறதற்கு அவர் வல்லவராயிருக்கிறார். ஆகவே நீ பயந்துகொண்டிருக்கிறாய்?