June

யூன் 22

யூன் 22

அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீடர்களின் படவில் ஏறி அக்கரைக்கும் பெத்சாயிதாவுக்கு எதிராக, தமக்கு முன்னே போகும்படி, அவர்களைத் துரிதப்படுத்தினார். (மாற்.6:45).

தான் தெரிந்தெடுக்கும் வழியில், தன் சீடர்கள் செல்ல வேண்டும் என்று துரிதப்படுத்தினார். கலிலேயாக் கடலின் மறு கரைக்குப் படவிலேறிச் செல்லும்படி இயேசு ஏன் தன் சீடர்களைக் கட்டாயப்படுத்தினார்? இதற்குப் பல காரணங்கள் உண்டு.

சீடர்கள் இப்பொழுதுதான் ஐயாயிரம் பேரைப் போஷிக்க உதவினர். எவ்வித சந்தேகமுமின்றி, அந்தப் பெரிய அற்புதத்தைக் கண்டு ஆச்சயரிப்பட்டனர். பசியுள்ள ஒவ்வொருவரும் திருப்தியடையும் வரையில் சீடர்கள் தொடர்ந்து தங்கள் கைகளினால் பரிமாறினார்கள். இப்படிப்பட்ட அறிமுகமான தாங்கள் பயன்படுத்தப்பட்ட இடத்தைவிட்டு சீக்கிரம் செல்ல அவர்கள் விருப்பவில்லை. இன்னொரு இடத்திற்கு தேவன் உன்னைப் போகும்படி கட்டாயப்படுத்தும் வேளையில் விருப்பமின்றி நீ போகாமல் இருப்பதற்கு காரணம் இதுதானோ?

ஒருவேளை ஆண்டவர் கரையிலே தங்கிவிடப் போகிறார் என்பதை அறிந்த சீடர்கள் மறுகரைக்குப் போக விருப்பமின்றி இருந்திருக்கலாம். அவர்கள் அவரைத் தங்களோடு படகில், அழைத்துச் செல்ல விரும்பினர். இருள், சூழ்ந்து, ஆபத்து நெருங்கும் வேளையில் நாமும்கூட தேவன் நம்மைத் தனிப்பட்ட இடத்திற்குச் செல்லக் கட்டளையிடும்போது பலவிதமான காரணங்களைக் கூறிவருகிறோம்.

இயேசு கிறிஸ்து மலையின்மேல் சென்று, ஜெபிக்கப்போகிறார். சீடர்கள் தண்டு வலிக்கிறதினால் கஷ்டப்படுவதை அவர் அறிவார் என அவர்கள் அறிந்துகொள்ளவில்லை. அலைகள் கொந்தளித்து, கப்பல் ஆடி மூழ்கும் சூழ்நிலையில், கிருiபாசனத்தண்டையில் நமக்காக ஒருபிரதான ஆசாரியர் வேண்டிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்துப் பார்த்ததுண்டா?

தயங்காதே! தேவனுடைய ஆலோசனைக்குக் கீழ்ப்படி! அவர் நம்மை ஆசீர்வாதத்தின் மலைச்சிகரத்திற்கு அழைத்துச் சென்றாலும், வல்லமையான ஊழியம் செய்யும் இடத்திற்கு கொண்டு சென்றாலும் செல்ல ஆயத்தமாயிருப்பதுபோல், சுழன்றடிக்கும் புயலைப்போன்று கஷ்டப்படுத்தும் சூழ்நிலையிலும் செல்லவதற்கு ஆயத்தமாயிருக்க வேண்டும். ஏற்ற வேளையில் நமது ஆண்டவர் நம்மருகே வந்து, திடன் கொள்ளுங்கள், நான்தான் பயப்படாதிருங்கள் என்று கூறுவார்.