June

யூன் 19

யூன் 19

….. பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் (லூக்.8:60).

யவீரு பயந்தபடியே நடந்துவிட்டது. அவனது மகள் இறந்து விட்டாள். கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் அவன்தன் ஆழ்ந்த துக்கத்திலிருந்து விடுதலை பெற்று மகிழ்ச்சியடைந்தான். ஏனெனில் ஆண்டவர் இயேசு அவன் வீட்டிற்குப் புறப்பட்டு வந்து கொண்ருந்தார். மரண அவஸ்தையிலிருக்கும் பன்னிரண்டு வயது சிறுமியை அவரால் குணமாக்க முடியும். இயேசுவின் பின்னாக வந்து அவரது வஸ்திரத்தைத் தொட்டு குணமான பெண்ணினால் எதிர்பாராத வகையில் அவர் வீட்டிற்கு வருவது தாமதமாகி அவனது மகிழ்ச்சி மறைந்துவிட்டது. ஆண்டவர் இயேசு அவனது பெரிய கதையை நின்று பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தார். இந்தவிதமாக தாமதம் ஏற்பட்ட நேரத்தில் யவீருவின் மகள் இறந்துவிட்டாள். காலம் கடந்துவிட்டதே! அப்படியா?

அதிக வேதனைப்படும் ஆத்துமாக்களைப் பார்த்து இரட்சகர் இயேசு, யவீருவிடம் கூறியது போன்று, பயப்படாதே. விசுவாசமுள்ளவானியரு என்றுதான் இன்றும் கூறிக்கொண்டேயிருக்கிறார். எப்படி விசுவாசிப்பது? முதலில் இயேசு யவீருவின் வீட்டிற்குப் புறப்பட்டபோது அவனிடம் இருந்த அதே விசுவாசத்தோடு இருக்கவேண்டும். இப்பொழுதும்கூட தேவனால் இதைச்செய்ய முடியும் என்று விசுவாசி. வெளிச்சத்தில் தேவன் கூறியவற்றைக் குறித்து இருள் சூழும் வேளையில் சந்தேகிக்காதே!

நம் விசுவாசத்தைச் சோதிப்பதற்கென தாமதம் நேரிடலாம். ஆயினும் பரத்திலிருந்து உதவி வருவதற்கு அதிக தாமதம் ஏற்படாது. இயேசுவின் வருகை யவீருவுக்கு தாமதமாகத் தோன்றலாம். ஆனால் அது அப்படியல்ல. அவனது, மகள் உயிரோடு எழுப்பப்பட்டாள்!

அலைகள் கொந்தளித்தாலும், அமைதி ஏற்பட்டாலும் பயப்படாதே. இரட்சகர் வாக்களித்த யாவற்றையும் நிறைவேற்றுவார்!