June

யூன் 6

யூன் 6

இவன் தச்சன் அல்லவா? (மாற்.6:3)

இயேசு கிறிஸ்து தச்சன் என்பது நாசரேத்தூரார் யாவருக்கும் தெரியும். தங்கள் ஊரைச் சேர்ந்த அவரைப்பற்றி அவர்கள் புகழ்ந்து கூறிய சொற்களல்ல இவை. அவரை இழிவுபடுத்தும்படிக்கு கூறப்பட்டுள்ள இழிவான சொற்களாகும்.

தாவீதின் சந்ததியில் வந்த நமது இரட்சகருக்கு, மற்றவர்களால் தான் இழிவுபடுத்தப்படுவது நன்கு தெரியும். அவர் மென்மையான உள்ளமும் உதவி செய்யும் கரங்களும் கொண்டவர். தன் சொந்த ஊரான நாசரேத்துக்கு வந்தார். அங்கு அவர் ஞானமுள்ள வார்த்தைகளைக் கூறினார். குணமாகும்படி கையை நீட்டினார். அவரது முயற்சிகள் யாவும் பலனற்றுப் போயின. அவரைக் குறித்து அவர்கள் இடறலடைந்தனர். வெறுப்பு முழுவதையும் வாய்ச் சொற்களால் கொட்டினர். அவற்றுள் இவன் தச்சன் அல்லவா? என்று கேட்டதும் ஒன்று. அவர்களுக்கு அவர் தச்சன்தான். கிறிஸ்து அல்ல. அவர்களுக்கு அவர் யோசேப்பின் குமாரனேயன்றி ஆண்டவரல்ல. அவருக்குச் சொந்தமானவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்தனர் என்பதையறிந்த அவரது உள்ளம் என்ன பாடுபட்டிருக்கும். அவரது வேதனையை அறிந்தோர் யார்?

நமது அண்டவரைப்போல நாமும்சாந்தத்தோடும், அன்போடும், இனிமையோடும் பதிலளிக்கும் தன்மையை கற்றுக்கொள்ளவேண்டும்.இல்லையெனில் இந்த இழிவான சொற்கள் அதிக வேதனையைக் கொடுத்து நம்மைக் கெடுத்துவிடும்.ஆண்டவர் இயேசு அங்கு ஒரு சிலரை மட்டும் குணமாக்கினாரேயன்றி வேறொரு அற்புதமும்செய்யவில்லை. அவர்களது அவிசுவாசத்தைக் குறித்து ஆச்சயரிப்பட்ட அவர் கிராமங்களுக்குப்போனார் (வச.46) எனக் காண்கிறோம். கிராமங்களில் சுற்றித் திரிந்ததால்தான் பலருக்குஉதவி செய்யவும், குணமாக்கவும் முடியும். அவர்கள்தான் சத்தியத்திற்குச்செவிகொடுப்பார்கள்.

இவ்விதமாகத்தான் இழிவைச்சகிக்கவேண்டும். கடினமாக பதில் கூறுவதோ, சுய நீதியைத் தேடுவதோ, தீமைக்குத் தீமைசெய்வதோ கூடாது. நன்மை செய். சுத்தமாயிரு. இரக்கத்துடனிரு. இப்படிச் செய்தால்தான்நாம் அந்தப் பெரிய தச்சனிடம் தொழிலைக் கற்றுக்கொள்ள முடியும்.