July

யூலை 29

யூலை 29

இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் இரக்கம் பெறுவார்கள் (மத்.5:7).

இரக்கமுள்ளவர்கள் அடையும் ஆசீர்வாதங்களைப்பற்றி நாம் வேதாகமத்தில் அதிகமாகக் காண்கிறோம். யாக்கோபின் குமாரன் யோசேப்பைப்போன்ற நம்மில் சிலர் மட்டுமே, பிறருடைய பகையைச் சம்பாதித்துப் பழிவாங்கப்படுகிறோம். ரூபனைத்தவிர அவனைப் பகைத்த மற்ற சகோதரர் யாவரும் அவனைப் பழி வாங்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தனர். அவனோ யோசேப்பை விடுவிக்க முயன்றான். தகப்பனை ஏமாற்றும் அளவிற்கு மட்டுமே தங்கள் மனக்கசப்பை அவர்களால் வெளிப்படுத்த முடிந்தது.

அவனது சகோதரரின் திட்டம் பலிக்கவில்லை. தேவனோ வேறு விதமாகத் திட்டமிட்டிருந்தார். மனிதர்களையும், அவர்களை ஆளுகின்றவர்களையும் ஆளுகிறவர் அவர். யோசேப்பு மரிக்கவில்லை. தேவனுடைய வேளை வந்தது. அப்பொழுது அவன் எகிப்தின் பிரதமராகப் பார்வோனால் அமர்த்தப்பட்டான். அடையாளம் கண்டுகொள்ள இயலாத அவனது சகோதரர் தங்கள் குடும்பங்களுக்கு உணவு கேட்டு அவனிடம் வந்தனர். அவனது மன்னிக்கும் பண்பு மிகவும் மேலானது. ஏனெனில் அவன் நடந்ததை மறந்துவிட்டு, நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான். நீங்கள் சஞ்சலப்படவேண்டாம். அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம். ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்… நீங்களல்ல, தேவனே என்னை இவ்விடத்திற்கு அனுப்பினார் (ஆதி.45:4-8) என்றான்.

இரக்கமுள்ள யோசேப்பு மிக்க மகிழ்ச்சியுடையவனாகவும், ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருந்தான். தான் பெற்ற சந்தோஷத்தைத் தன் இனத்தாரோடும் பகிர்ந்துகொண்டான். தாழ்மையுடன் இருந்தால் மேன்மையடையலாம். மன்னித்து விடுவதினால் மதிப்போடும், மகிழ்ச்சியோடும் வாழலாம்.