July

யூலை 25

யூலை 25

நீர் பயப்பட வேண்டாம். என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டுபிடிக்கமாட்டாது (1.சாமு.23:17).

வேதாகமத்தில் காணப்படும் அன்பான மனிதருள் யோனத்தானும் ஒருவன். அவன் வீரமும் தீரமும் மிக்கவன். இரக்கமும் பக்தியும் உள்ளவன். உண்மையும், நட்பும், ஒழுக்கமும் உள்ளவன். அவன் தகுதியற்ற தன் தந்தையிடம் விசுவாசத்தையும், தன்னிகரற்ற தாவீதிடம் மரியாதை செலுத்தினான்.

சில வேளைகளில் வீட்டிலுள்ள பெரியோர் இரக்கமற்றவர்களாகவும் மன்னிக்காதவர்களாகவும் இருப்பர். அவர்கள் பழைய குற்றங்களை (அது உண்மையாயினும் சரி, கற்பனையிலும் சரி) மனதில் வைத்து வளர்த்துக்கொண்டே வருவர். சில வேளைகளில் அவற்றை மிகைப்படுத்தியும் கூறுவர். தங்கள் பகைவர்களைப் பற்றிய வெறுப்பினைத் தம் பிள்ளைகளுக்கு ஊட்டுவர். இதனால் அன்புடன் வாழவேண்டிய இளம் உள்ளங்கள் கெடுக்கப்படுகின்றன. நாமும்கூட சோர்ந்து, மனமொடிந்துபோன தாவீதுக்கு, யோனத்தானைப் போன்று உதவவேண்டும். நாம் அவர்களைத் தேடிச் சென்று, அவர்களுக்குத் தெம்பூட்டி, பயப்பட வேண்டாம் எனத் கூறி தைரியமளிக்க வேண்டும்.

தாவீதைப்போன்று நாம் பயத்தை புறம்பே தள்ளி, நம்மைக் கொன்றுபோட விரும்புகிறவர்களோடும், விரோதிக்கிறவர்களோடும் தைரியமாக நட்புக்கொள்ள வேண்டும். நமக்குத் தீங்கிழைக்கப்படலாம். நம்மை பயமுறுத்தலாம். இதைக் குறித்து நம் இருதயத்தில் பயமின்றி இருப்போமாகில், அந்த அநீதியும், தீமையும் நம்மைவிட்டு ஓடிப்போகும். பயப்பட வேண்டாம் என்கிற வார்த்தை எவ்வளவு இனிமையானது. எத்தனை வலிமையுடையது. உன் விரோதிகள் உன்னைக் காணமாட்டார்கள். தீங்கு செய்ய விரும்புவோர் உன்னை நெருங்க முடியாது. தேவ சித்தம் மட்டுமே உன் வாழ்வில் நிறைவேறும்.