July

யூலை 24

யூலை 24

என் தேவனே, நான் என் முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கிக் கலங்குகிறேன் (எஸ்.9:6).

பாவம் நம்மை வெட்கப்படுத்தும். நம்முடைய ஆவிக்கு விரோதமாக வரும் மரியாதைக் குறைவைக் கண்டு நாம் சோர்ந்துவிடுகிறோம். நாம் கீழ்ப்படியாமற்போய்விட்டதால் மனம் வருந்திக் குழப்பமடைகிறோம். நம்முடைய மனசாட்சியின் குற்ற உணர்வால் நெருக்கப்படுகிறோம். ஆகவே நாமும் எஸ்றாவைப் போன்று தேவனை நோக்கிப் பார்க்கும் வேளையில் வெட்கத்தால் முகம் சிவந்து நிற்போம்.

எஸ்றாவுக்கும், சிறையிலிருப்பிலிருந்து திரும்பிய ஜனங்கள் யாவருக்கும் தேவன் நல்லவராகவே இருந்தார். அவர்கள் பாபிலோனின் சிறையிலிருப்பிலிருந்து, அநேக ஆண்டுகள் கழித்து விடுதலை பெற்று, தங்கள் முன்னோரின் தேசத்திற்குத் திரும்பினார்கள். எப்படியாயினும், அவர்கள் தேவனுடைய சமாதானத்தின் நினைவுகளுக்கும், அவரது அநேக இரக்கங்களுக்கும் நன்றியுள்ளவர்களாயிருக்க வேண்டும். ஆனால் அவர்களோ இருதயக் கடினத்தினாலேதான் நிலைத்து நின்றனர். இந்த இரண்டுங்கெட்டான் நிலையிலிருந்து விடுதலையடைய வேண்டுமாயின் அவர்கள் உள்ளம் உடைந்து, பாவத்திற்காக வேதனைப்பட்டு, தங்கள் பொல்லாத குற்றங்களை அறிக்கையிட்டு, தேவன் அவற்றை மன்னிக்கும்படி ஜெபிக்கவேண்டும்.

மனவேதனை நீங்கி, மன்னிப்பின் நிச்சயம் கிட்டும்போது, முதலாவது வேதனோடும், பின்பு நம் அயலாரோடும் ஐக்கியம் கொள்ளுவோம். எஸ்றா மனந்திரும்பி தனக்காகவும் தன் ஜனங்களுக்காகவும் ஜெபித்ததினால் அவனோடிருந்த மற்றவர்கள், நாங்களும் உம்மோடுகூட இருப்போம். நீர் திடன்கொண்டு இதைச் செய்யும் என்றனர் (10:4). பாவம் நம்மை வெட்கப்படுத்தும். ஆனால் உள்ளான மனந்திரும்புதலும், விசுவாசமும் நம்மை விடுதலையாக்கும்.