January

ஐனவரி 29

அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்தான் (எபி.11:27).

எதிர்ப்புகள் பல வந்தபோதிலும் பக்தியுள்ளஆவியைக் காத்துக்கொள்வதுதான் பொறுமைக்குரிய வழி. சாத்தானின் எதிர்ப்பு, மக்களின்குற்றச்சாட்டு, மனப்போராட்டம் இவற்றின் நடுவே தேவனுடைய மீட்பின் கரத்தை உணரலாம். இதுவேபொறுமையாகும்.

தன் சகோதரர்கள் தன்னை அடையாளம்கண்டுகொள்ளவதற்கென மோசே பொறுமையுடன் நாற்பது ஆண்டுகளை வனாந்தரத்தில் கழிக்கவேண்டியதாயிற்று. அவன் தேவனுடைய வாக்கைச் சார்ந்திருந்தான். அவர் அவனை எகிப்திற்குத்திரும்பும்படி கட்டளையிட்டார். அப்பொழுது, நான் உன்னோடே இருப்பேன் (யாத்.3:12)என்கிற வாக்கு அவனுக்குத் துணிவைக் கொடுத்தது. அவரது பிரசன்னம் அவனோடு இருந்ததினால்தான் பார்வோன், நான் இஸ்ர வேலரைப் போகவிடக் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்குஅவர் யார்? (யாத்.5:2) எனக் கேட்டபோதும் பொறுமையைக் கைக்கொண்டிருந்தான். பிறர்நம்மை இழிவாகப் பேசும்போது அது நம் உள்ளத்தை வேதனைப்படுத்தலாம். ஆனால் அதேநேரத்தில் இயேசுவை நாம் நினைத்துக்கொண்டால் அவருடன் அந்த நிந்தையைச் சகிப்பதுஎவ்வளவு பெரிய சிலாக்கியம்.

வனாந்தரத்தில் முறுமுறுத்த இஸ்ரவேலரை மோசேபொறுமையுடன் நடப்பித்தான். வாக்குமாறா தேவன் தான் சொன்னதை நிறைவேற்றுவார் என்றுஅவனுக்குத் தெரியும். எதிர்ப்பும், முறுமுறுப்பும் அதிகரித்தபோதிலும், தேவபிரசன்னம் அவனைத்தாங்கிற்று. காரணமில்லாத முறுமுறுப்பும் நம்மடைய முன்னேற்றத்தைத் தடை செய்யலாம். பிறர்நம்முடைய முயற்சியைப்பற்றி குறைவாகவும், இழிவாகவும் பேசும்போது நாம் அதைப் பொறுமையோடுஏற்றுக்கொள்ள வேண்டும். நம்மைப் பார்க்கிற தேவன் இதற்குரிய வெகுமதியைக் கொடுப்பார்.

குறை கூறும்போது மோசே பொறுமையுடனிருந்தான். இவ்வுலகம்இழித்துரைத்ததைப் பொறுத்துக்கொள்ளலாம். தன் சொந்த மக்களே தன்னைப் பற்றி இழிவாகப்பேசினால்…. எவ்வளவு வேதனை. மிரீயாமும் ஆரோனும் மோசேக்கு விரோதமாகப் பேசினது (எண்.12:1).அவனுக்கு எவ்வளவு வேதனையை அளித்திருக்கக்கூடும். தேவன் அவர்களைச் சந்திக்கட்டும் என்றுமோசே பொறுமையுடன் இருந்தான். அவனை நடத்துகிறவர் அவரல்லவா!

இழிவுகள், நிந்தைகள், முறுமுறுப்புகள்,குற்றச்சாட்டு, பரியாசம் இவற்றைப் பொறுத்துக்கொள். தேவனை நோக்கிப்பார். இதுவேநீடித்த வாழ்வின் இரகசியம்.