January

ஐனவரி 28

நீங்கள் எனக்குக் கடினமுகம் காண்பிக்கிறதினால் உங்களுக்கு வெட்கமில்லை (யோபு 19:3).

யோபு தன் நண்பர்களிடம் இப்படியாக ஒரு கேள்வி கேட்டிருக்கக்கூடும். அவனது நண்பர்கள் அவனைப் பத்து தரம் நிந்தித்தனர். இதற்காக அவர்கள் வெட்கப்படவேண்டாமா?

பலவீனமுள்ளவனைக் கொடுமைப்படுத்துகிற பலவான் வெட்கப்பட வேண்டாமோ? யோபுவுக்கு ஆறுதல் கூற வந்தவர்கள் இதற்காக வெட்கப்படவில்லை. வியாதியுள்ள நண்பனைக் காட்டிலும் தாங்கள் அறிவில் உயர்ந்தவர்கள் என்கிற நினைப்பு அவர்களுக்கு உண்டு. துன்பத்தினால் வாடும் அவனுக்கு ஆறுதல் கூறுவதற்குப் பதிலாக அவர்கள் கேலிபண்ண அழைக்கிறார்கள். சுகமும் பலமும் நிறைந்த அவர்கள் பிணியாளிகளிடம் கேள்வி கேட்டு வேதனைப்படுத்துகின்றனர். அவர்கள் தேவனுடைய கருணையில் இருந்தனர். யோபுவோ அந்நிலையில் இல்லை என்பது தெளிவு.

பிறரைக் கேலிபண்ணக்கூடாது என வேதம் கூறுகிறது. வேதனைப்படுவோருக்கு உதவி செய்யவேண்மும். பாவத்தில், இப்படிப்பட்ட பரிதாப நிலையில் இருந்த பெண்ணைக் கல்லால் அடித்துக் கொல்வதுதான் நியாயம். இதை மோசேயும் கூறியுள்ளார் என வலிறுத்தினர் பரிசேயர் பலர். ஆனால் இயேசுவோ, நீ போ. இனி பாவம் செய்யாதே என்றார்.

நம்மைவிட மிகவும் மோசமான நிலையில் இருப்போருடைய மனவேதனையை அதிகப்படுத்துவது வெட்கப்பட வேண்டிய காரியமே. நாம் பிறரை இழிவாகக் கூறினால் நாமும் பிறரால் இகழப்படுவோம். நம்முடைய மீட்பர் உயிரோடிருக்கிறார். அவர் நம்மைக் குறித்து வெட்கப்படுவதில்லை.