January

ஐனவரி 27

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன் (ஏசா.41:10).

மனித வாழ்வில் அதிகமான கேடுகளையும், நாசத்தையும்ஏற்படுத்துவது பயம் அல்லது அச்சம் எனலாம். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் இவ்வகையானபயம் அல்லது அச்சம் ஏற்படுவது உண்டு. இவை நம் உடல் நிலை, மனநிலை இவற்றைச் சார்ந்தும்ஏற்படலாம். பொருளாதார, சமுதாய நிலமைகளை ஒட்டியும் ஏற்படலாம். பொருளாதார, சமுதாயநிலமைகளை ஒட்டியும் ஏற்படலாம். கடந்த காலத்தில் நடந்ததைப்பற்றியும், வருங்காலத்தில்நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளைக் குறித்தும் நாம் சிந்திக்கும்போது நமக்கு பயம்தோன்றலாம். தனிமையில் ஏற்பட்ட கவலைகளும், விசாரங்களும் பயத்தை ஏற்படுத்துகின்றன. இவ்வாறாகநமக்குத் தோன்றக்கூடிய இந்த அச்சம் அல்லது பயம் பல வழிகளில், பல நிலைமைகளில்தோன்றக்கூடும். எந்தக் காரியத்தையும் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் நமக்குத்தொந்தரவு கொடுக்கும் யாவற்றையும் களைந்தெறிய முடியும்.

பயப்படாதே என்ற வார்த்தையானது நம் ஆறுதலுக்கெனஅடிக்கடி வேதத்தில் கூறப்பட்டுள்ளது. நடுக்கம், பயம் கலக்கம், திகில்போன்றவற்றிலிருந்து நாம் விடுதலையடைந்தவர்களாக இருக்கவேண்டும் என்பதையே வேதம்வலிறுயுத்திக் கூறுகிறது. இதற்காக நாம் தேவன் அருளிய வாக்குத்தத்தங்களைப் படித்துவிசுவாசிக்க வேண்டும். பயத்திலிருந்தும், அபாயத்திலிருந்தும் விடுதலைபெற சர்வவல்லமையுள்ள தேவனை விசுவாசித்து, அவரிலும், அவரது வார்த்தையிலும் சார்ந்திருக்கவேண்டும்.

சங்கீதக்காரனும், நான் கர்த்தரைத் தேடினேன்.அவர் எனக்கச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்(சங்.34:4) என்று இதையே வலியுறுத்தியுள்ளார். எல்லாப் பயங்களிலிருந்தும் விடுதலை!எவ்வளவு பெரிய விடுதலை! இது எத்துணை உற்சாகமளிக்கக்கூடிய காரியம்! அதிகமானஆறுதலளிக்கக்கூடிய காரியமல்லா, இது!

நம்முடைய தனிப்பட்ட முயற்சியால் பயத்திலிருந்துவிடுதலையடைந்துவிட முடியாது. சந்தர்ப்பம் வந்தாலும் இதைக் களைந்தெறிய முடியாது. தேவனால்,அவரது கனிவான வாக்கால் மட்டுமே இதிலிருந்து நமக்கு விடுதலை கிட்டும்.