January

ஐனவரி 26

உமது உண்மை பெரிதாயிருக்கிறது (புல.3:28).

வேதாகமத்திலேயே மிகுந்த துக்கம் நிறைந்தபகுதியென எரேமியாவின் புலம்பலைக் கூறலாம். அதிலும்கூட சர்வ வல்லவர் அருளிய இனிமையான,வலியுறுத்தி;கூறும் வெளிப்பாடுகள் பல காணப்படுகின்றன. ஓர் ஆத்துமாவைத் தேவனில்நிலைநிறுத்துவதற்குத் துன்பத்தைப்போன்ற சிறந்த சாதனம் ஏதுமில்லை. மனிதனுடையநம்பிக்கை அழிந்து போயினும் (வச.18), அவனுடைய வீழ்ச்சிகளும் தவறுகளும் நினைவுகூரப்படும்வேளைகளில் நாம் நிர்மூல மாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே. அவருடைய இரக்கங்களுக்குமுடிவில்லை (வச.22) என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.

சூரிய ஒளி மறையும்வரையில் வானில்நட்சத்திரங்களை நம்மால் காணமுடிவதில்லை. அதேபோன்று மனிதன் தன் சுயபலத்தினையும்,நம்பிக்கையையும் இழக்கும் வரையில் தேவனுடைய இரக்கங்களை அனுபவிக்க இயலாது. அப்பொழுதுஉமது உண்மை பெரிதாயிருக்கிறது. அவைகள் காலைதோறும் புதியவைகள் (வச.23) எனக் கூறுவோம்.கர்த்தர் என் பங்கு (வச.24) என்று உறுதியாகக் கூறமுடியும். ஏனெனில், தமக்குக்காத்திருக்கிறவர்களுக்கும், தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர் (வச.25).அவர் கிருபை பெரிதாக இருப்பதினால், கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடுகாத்திருக்கிறது நல்லது (வச.26).

தம்மிடத்தில் விசுவாசமுள்ளவர்களுக்கு தேவன்உண்மையுள்ளவராக இருக்கிறார். எரேமியா தீர்க்கதரிசியால் கூறப்பட்ட இத்தகைய உண்மைமகளைத்தன் அனுபவத்தின் வாயிலாக வெளிப்படுத்திய பவுலும், என் கிருபை உனக்குப் போதும்(2.கொரி.12:9) என்று கனிவோடு கூறிய மேலானவர் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்பதைத்தெரிந்துகொண்டார். அவருடைய வாக்கு உண்மையுள்ளது. பெரியது. எந்த ஒரு தீய சக்தியாலும் அதைஅழிக்க முடியாது. தேவனைப்போன்று அவரது உண்மைகளும் பெரியது. சிறந்தது என்பதில் ஐயமில்லை.