January

ஐனவரி 24

அவனுக்குப் பயப்படவேண்டாம். அவனையும் அவன் ஜனங்கள் எல்லாரையும் அவன் தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன் (எண்.21:34).

உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும்,பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறது எனக் கூறுகிறது வேதம். அதிகமானஉபத்திரவத்தினால்தான் பொறுமையை நாம் பெறமுடிகிறது. பொறுமை அதிகரிக்க பரீட்சை இனிமையாகிறது.அப்பொழுதுதான் தேவன் கடந்த காலத்தில் நமக்குச் செய்த உதவிகளைக் காட்டிலும் இன்னும்மிக அதிகமான உதவுவார் என்ற நிச்சயமும், நம்பிக்கையும் ஏற்படும்.

எமோரியரின் அரசனாகிய சீகோன், பாசானின்அரசனாகிய ஓகையும் பற்றி நாம் வேதத்தில் படிக்கிறோம். அவர்களின் படைகளைக் கண்டாலேகுலைநடுங்கும். அவர்கள் உக்கிரமாகப் போரிட்டனர். இஸ்ரவேலர் அவர்களை வென்று, வாகை சூடினர்.இது மறக்க முடியாத அனுபவம் (சங்.136:17,24).

இஸ்ரவேலர் யோர்தானைக் கடந்து செல்லும் முன்பு,அந்நாட்டின் எல்லைப் புகுதியில் இந்தக் கொடிய எதிரிகளைச் சந்திக்க நேரிட்டது.தேவனுடைய மக்களின் இன்யை நிலையும் இதுவே! சோதனைகள் அதிக வேதனையைக் கொடுக்கின்றன.இந்தப் புனிதப் பயணத்தை முடிக்கும் முன்பு நம்பிக்கை இழந்தவர்களாக, வேதனைப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

நம் இரட்சிப்பின் தேவன் நம்மைப் பார்த்து,பயப்படவேண்டாம். அவனையும் அவன் ஜனங்கள் எல்லாரையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்என்றார். ஒப்புவிப்பேன் என்றா கூறினார்? நாம் முன்னேறிச் செல்லும்போது, சீகோனைப்போன்று இன்று கடினமாகத் தோன்றுபவை நாளைய வெற்றியின் சின்னங்கள். இன்று ஓகைப்போன்ற எதிரிகளின் எதிர்ப்பு இரட்சகரின் புதிய வல்லமையையும், பிரசன்னத்தையும்வெளிப்படுத்தும் அரிய வாயப்புகள் என்பதையும் மறவாதே!

உலகத்திலிருக்கிறவனிலும், நம் உள்ளத்தில் இருப்பவர்மிகப் பெரியவர்! அவரது பிரசன்னம் நம்மோடு அனுதினமும் இருக்கும் என்று வாக்களித்துள்ளார்.ஆகவே சீகோனைப்போன்று யாராகிலும் அல்லது ஏதாகிலும் எதிர்ப்பட்டாலும் சோர்ந்துபோகவேண்டாம்.