January

ஐனவரி 21

தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார் (1.கொரி.10:13).

சோதனைகளும், குழப்பங்களும் வரும்போது இவை யாவும்நமக்குத்தான் வருகின்றன. வேறு யாருக்கும் வருவதில்லை என்றும் நாம் கருதிய வேளைகள் பலஉண்டு. இது சரியல்ல. தேவன் உண்மையுள்ளவர் என்பதை நாம்அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவும், நம்முடைய விசுவாசத்தையும், பொறுமையையும்சோதித்து அறிவதற்கென்றும் சோதனைகள் நமக்கு வருகின்றன.

குழப்பமும், இருமனமுள்ள நிலைமையும் யாவருக்கும்வருவது இயல்பு. இதில் விதிவிலக்கு இல்லை. சிலர் மற்றவர்களை விட மிகவும் மனம் தளர்ந்துபோய்விடுகின்றனர். குழப்பமும், வேதனையும், எதிர்பார்ப்பும் அதிகரிக்கும்போது, அவை நமக்குஅர்த்தமற்றவையாகவும், முடிவேயில்லாதவையாகவும் தோன்றும். நமக்கு இவைகள் ஏன் வருகின்றனஎனவும் கேள்வி கேட்பது இயல்பு.

மனிதனுடைய பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. பவுலைப்போன்று நாமும் நமது விடுதலைக்கென தேவனிடம் கருத்தாய் வேண்டிக்கொண்டும், விடுதலை கிட்டுவதாகத் தோன்றாமல் இருக்கலாம். ஆனால் தேவனுடைய கிருபை நமக்கு எக்காலத்திற்கும், எல்லாவற்றிருக்கும் போதுமானது. நம் பலவீனத்தில் அவர் பலம் பூரணமாய் விளங்கும் என்பதைப் புரிந்துகொண்ட பவுல் தான் கற்றுக்கொண்ட பெரிய சத்தியத்தை 2.கொரிந்தியர் 12:9ல் எக்காலத்திற்கும், எல்லா கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும்படியாகச் சொல்லி வைத்துள்ளார்.

நம்மால் எவ்வளவு பாரம் தாங்கிக்கொள்ள இயலும். நம் துன்பங்களின் உச்சநிலை எவ்வளவு என்பதனையும் தேவன் அறிவார். தேவன் உண்மையுள்ளவராய் இருக்கிறார். உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுவதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார் (1.கொரி.10:13) என்ற வேதவாக்கு நமக்கு தைரியமளிக்கிறது. சோதிக்கப்படுகிற வேளையில்தான் தேவன் உண்மையுள்ளவர் என உணரமுடியும். சோதனையைத் தருகிற அவர் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குகிறார் என்பதை மறக்கவேண்டாம். ஆகவேதான் இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங் கொள்ளுகிறவர்களாயிருக்கிறோம் (ரோ.8:37).