January

ஐனவரி 20

பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை. நாணாதே, நீ இலட்சையடைவதில்லை. (ஏசா.54:4)

கவலைகள் பெருகி நம்மை வெட்கப்படுத்தும்போதுநமக்கு அது கசப்பாகத் தோன்றும். தவறுதலாக எதையாவது செய்துவிட்டு வெட்கப்படும்போது,நமக்கு வேதனையாகத்தான் இருக்கும். உண்மையுள்ள தேவன் நம்மை விட்டு விலகிவிட்டார் என்றுபயப்படுவதுதான் அதிகமாக வெட்கப்படவேண்டிய செயல். கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்,நான் ஒருக்காலும் வெட்கமடையாதபடி செய்யும் (சங்.31:1) என்று நாமும்சங்கீதக்காரனைப்போல கதறவேண்டியதுதான்.

தேவன் மனதுருகுகிறவர். அவர் தள்ளுண்டவர்களையும்,தனிமையில் வாடுவோரையும், அன்புக்கு ஏங்குவோரையும், கவலையில் ஆழ்ந்துள்ளோரையும்மக்களால் மறக்கப்பட்டோரையும், தகப்பனற்றவர்களையும், விதவைகளையும் குறித்து அக்கறைகொள்கிறார். இவர்களுக்கு கடந்த காலம் கசப்பானது, நிகழ்காலமோ துன்பமானது.எதிர்காலத்தைப்பற்றி நம்பிக்கையும் இல்லை. இப்படிப்பட்ட மக்களுக்கு அவர் நல்லவாக்குறுதிகள் பல அளித்துள்ளார்.

கடந்தகாலம் என்பது மறக்கவேண்டிய ஒன்று.பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை. நாணாதே, நீ இலட்சையடைவதில்லை. உன் வாலிபத்தின்வெட்கத்தை நீ மறந்து, உன் விதவையிருப்பின் நிந்தையை இனி நினையாதிருப்பாய்(ஏசா.54:4).

நிகழ்காலம் என்பது அவரது பாதுகாப்பிலுள்ளது.உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போம். உனக்கு விரோதமாய்நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய் (வச.17).

எதிர்காலம் என்பது ஒளிமயமானது. ஆசீர்வாதமுள்ளது.ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன்… உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால்போதிக்கப்பட்டிருப்பார்கள். உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரியதாயிருக்கும் (வச.8,13).

வாக்கு மாறாத தேவன் இதைச் செய்வார் என்று நாம்அவரையே சார்ந்து நிற்போம். நம் மீட்பரில் நம் இருதயம் சார்ந்திருக்கும்போது,பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை என்று திரும்பத் திரும்ப கூறுகிறார்.