January

ஐனவரி 18

நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி (2.தீமோ.2:2).

ஆர்வமுள்ள மாணவர்களுக்குப் போதித்து, அவர்கள்கற்றுக்கொண்டபின்பு, அவர்களைக்கொண்டு பிறருக்கும் கற்றுக்கொடுக்கத் தூண்டுவதுதான்ஆசிரியரின் தலைசிறந்த பண்பு. அதில்தான் அவர் மகிழ்ச்சியடைகிறார். கற்றது கைமண்ணளவு,கல்லாதது உலகளவு என்பது பழமொழி. அறிவுபசி தணியக்கூடாதது. கற்றுக்கொடுக்கும் பணியும்முடிவுற்றது. இதனால் பயன்பெறுவோர் பலர் உண்டு.

நமது பெரிய போதகர் பணியே அலாதியானது. அவர் இணையற்றஅறிவுள்ளவர். மிகுந்த அதிகாரத்துடன் போதித்தார். தெய்வீக சத்தியங்களைப் பூக்கள்,வயல்வெளி, கடல், வானம் முதலியற்றின்மூலம் வெளிப்படுத்தினார். எல்லாவற்றிற்கும் மேலாகவேதவாக்கியங்களை மையமாக வைத்துப் போதித்தார். அவர் திரளான மக்களுக்கு மலைப்பகுதியிலும்,கடற்கரையிலும் போதித்தார். ஆயினும் தம்முடைய பன்னிரெண்டு சீஷர்களுக்கென அவர் தனிப்படபோதித்தார். ஏனெனில், பரலோகராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி அவர்களுக்குஅருளப்பட்டது (மத்.3:11). ஆகவே அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு வீட்டில் அவர்களுக்குவிளக்கினார் (மத்.13:36). அப்படிப்பட்ட சீஷர்களிடத்தில்தான் இயேசு, புறப்பட்டுப்போங்கள்… சகல ஜாதிகளுக்கும் பிரசங்கியுங்கள் (மத்.28:19-20) எனக் கட்டளையிட்டார்.நான் உங்களுடனேகூட சதாகாலங்களிலும் இருக்கிறேன் என்றும் வாக்களித்து அனுப்பிவைத்தார்.

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் நாம்விசுவாசமுள்ளவர்களாக இருக்கிறோம். இது நிச்சயமாயின் நாமும்கூட மற்றவர்களுக்குப்போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் அதை ஒப்புவிக்கவேண்டும். இவ்விதமாக இந்தஇரட்சிப்பின் நற்செய்தி உலகின் கடைசிவரை பரம்பும். உண்மையுள்ள மனுஷர்தங்களைப்போலுள்ள மற்ற உண்மையுள்ள மனுஷரிடம் இப்பொறுப்பினை ஒப்புக்கொடுப்பார்கள்,விசுவாசத்திலும் வளருவார்கள் என்பது திண்ணம்.