January

ஐனவரி 16

அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும். அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப் போவார்களாக. உமது அடியானோ மகிழக்கடவன் (சங்.109:28).

தன் கொடிய, தந்திரமுள்ள விரோதிகள் தன்னைச்சூழ்ந்து நெருங்குகையில், தாவீது ஆவியில் நிறைந்தவனாக தன்னைச் சபிப்பவர்கள்சபிக்கட்டும், நிந்திக்கிறவர்கள் நிந்திக்கட்டும் என்று விட்டுவிடுகிறான். இயேசுகிறிஸ்து தன் பாடுகளிலும், வேதனைகளிலும், மரணத்திலும் வெளிப்படுத்தின அந்த மனப்பக்குவத்தையே தாவீது தீர்க்தரிசனமாக வெளிப்படுத்துகிறான். யூதாஸ் காட்டிக்கொடுத்தபோதும், பாடுகள்பட்டபோதும் இருந்த நமது இரட்சகரின் மனநிலையினையே இந்தச் சங்கீதம் படம் பிடித்துக் காட்டுகிறது. இது பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளதீர்க்கதரிசனம். இயேசுவும் இந்நிலையில் அவர்கள் சபித்தாலும் நீர் ஆசீர்வாதியும் என்றே கூறியிருப்பார்.

ஆண்டவரும் இரட்சகருமாகிய அவரின் ஊழியர்களாகியநாமும் அவரைப்போல படுவேதனைக்குள் சென்றுவரவேண்டும். இயேசு பெருமான் என்னிமித்தம்உங்களை நித்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில்பொய்யாச் சொல்வார்களானால்…. சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள் (மத்.5:11-12) எனக் கூறியுள்ளார்.தன்னுடைய அனுபவத்தில் இதைக் கண்ட பேதுரு, நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம்நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள். ஏனென்றால், தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ளஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார் (1.பேது.4:14) எனக் கூறியுள்ளார்.

இயேசு கிறிஸ்து எருசலேமுக்குச் செல்லும்போது,கல்வாரிச் சிலுவைக்குப் போகும்போதும், மக்கள் கொடுமைப்படுத்தி நிந்தனைசெய்யும்போதும் தன் தெய்வீகத் திட்டத்திலிருந்து பிறழாமல் அமைதியாகவே சென்றார். அவர்அடிச்சுவட்டில் செல்லும் நாமும்கூட பிறர் நிந்தைகளை ஏற்றுக் கொள்ளவேண்டும். நாம் நமதுஆண்டவரைப்பற்றி வெட்கப்படாமல் இருந்தால்த்தான் நமக்கு விரோதமாக எழும்புவோர்வெட்கப்பட்டுச் செல்வார்.