January

ஐனவரி 10

“மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்” (ஏசா.51:7)

இவ்வுலகில் துன்மார்க்கனும், அக்கிரமக்காரனும், கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன். அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான். ஆனாலும் அவன் ஓழிந்துபோனான். பாருங்கள் அவன் இல்லை. அவனைத் தேடினேன் அவன் காணப்படவில்லை. (சங் 37:35-36) எனக் கூறியுள்ளான்.

தேவனை மறுதலித்து, தேவனுடைய பிள்ளைகளையும் வெறுத்து, தற்பெருமை பேசிய நாத்;திகர்களை நாம் காலங்கள் தோறும் கண்டு வருகிறோம். மொர்தெகாயையும் யூதர்களையும் அழித்துப்போட வகைதேடிய ஆமான், தான் உருவாக்கிய தூக்கு மரத்தில் தூக்கிலிடப்பட்டான் (எஸ்தர் 7:10). ஆதி கிறிஸ்தவர்களையும், அப்போஸ்தலரையும் துன்பப்படுத்திய ஏரோது புழுப்புழுத்து இறந்தான் (அப்.12:23). தேவனுடைய மக்களை அழித்துவிட வகை தேடிய ஹிட்லர் தன்னைத்தானே அழைத்துக்கொண்டு மடிந்தான்.

துன்மார்க்கரின் வெற்றி நிலையற்றது. சவுலுக்குப் தப்பி ஓடிய தாவீதின் அனுபவங்களைச் சற்று காண்போம்: ‘என் ஆத்துமா சிங்கங்களின் நடுவிலிருக்கிறது, தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குக்குள்ளே கிடக்கிறேன், அவர்கள் பற்கள் ஈட்டிகளும், அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது. என் கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள். என் ஆத்துமா தொய்ந்துபோயிற்று. எனக்கு முன்பாக குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள்” (சங் 57:4,6). குழியில் விழுந்த அவர்கள் இரக்கமற்ற கொடிய வாழ்வைத்தான் சந்திக்க முடியும்.

இவ்வுலக ஆமான், ஏரோது, ஹிட்லர் போன்ற பொல்லாதவர்களால் வெல்ல முடியாதவரான தேவன் உன்னதமானவர். அவர், ‘நான் உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர், சாகப்போகிற மனுஷனுக்கு……. பயப்படுகிறதென்ன?” (ஏசா.51:12) எனக் கேட்கிறார்.