January

ஐனவரி 4

அதற்குக் கர்த்தர் நீ போ…என்றார் (அப்.9:15)

மனிதனுடைய அறிவுக்கும், தெரிந்தெடுத்தலுக்கும் முரணான காரியங்களை நாம் செய்யும்படிக்கு தேவன் அடிக்கடி கட்டளையிடுகிறார். தேவன் வழிநடத்தும்போது நாமும் அனனியாவைப்போலக் கேள்வி கேட்பது இயல்புதான். ஏனெனில் கிறிஸ்தவர்களை நிர்மூலமாக்க ஆதிகாரம் பெற்று, அந்தப் பட்டணத்திற்குள் நுழைந்துள்ள அதே ஆளிடம் போகும்படி அவனுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டது. அனனியாவுக்குத் தர்சு பட்டணத்தான் சவுலபை;பற்றி பல சந்தேகங்கள் தோன்றுவதற்கு காரணங்கள் பல உண்டு. ஆனால் அவனைப்பற்றி நம்புவதற்குரிய காரணங்கள் ஏதும் இல்லை.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைச் சவுல் அவ்வூருக்கு வரும் வழியில் சந்தித்ததையும், தன்னைப்போல அவனும் ஒரு விசுவாசியாக மாறிவிட்டதையும் அனனியா அறியவில்லை. மார்க்க வெறிபிடித்த, கொடுமையான இவனிடமிருந்து, பாதுகாப்பும், அடைக்கலமும், மீட்பும் தேவை என்று தமஸ்கு பட்டணத்துக் கிறிஸ்தவர்கள் ஜெபித்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. அவன் கிறிஸ்துவுக்குள் மனமாற்றமடைந்து வரவேண்டும் என்று அவர்கள் ஜெபம் செய்திருப்பார்களோ என்று சிந்திக்கிறேன். முடிவாக, எப்படியோ தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக மிகவும் பரிபூரணமாக கிறிஸ்தவர்களை நினைப்பதற்கும் அதிகமாக செய்து முடித்தார். பவுல் கிறிஸ்தவன் ஆகிவிட்டான். ஆண்டவராகிய இயேசுவின் தாழ்மையுள்ள உழியக்காரனாக மாறிவிட்டான். ஆகவே அவனுக்குத் தேவனுடைய உதவி ஓர் உடன் விசுவாசியின் மூலமாகவே கிடைக்கவேண்டியிருந்தது.

நமக்கக் கடினமானது, ஆபத்தானது, முடியாதது எனக் கருதும் காரியங்களைத் தேவன் செய்யும்படி கட்டளையிடும்போது நாமும் தேவனை எதிர்த்து வாதிடுவது இயல்பு. நம்முடைய கஷ்டங்களைக் குறித்து நாம் அவரிடம் முறையிடுவோம். நமக்கு நியாயமாகத் தோன்றும் பயங்களையும் அவரிடம் அறிக்கையிடுவோம். நமக்குப் புரியாத வழிகளில், தெளிவான ஆபத்திற்குள் தேவன் நம்மை நடத்துவதன் நோக்கத்தையும் நன்கு அறிவார். அவரது ஆலோசனைகளை நாம் முழுமையான விசுவாசத்தோடும் கீழ்ப்படிதலுடனும், உண்மையுடனும் பின்பற்றி நடக்கவேண்டும்.

தேவன், நீ போ எனக் கூறுகிறார். நாம் விசுவாசத்தோடும் உண்மையோடும் கீழ்ப்படிவோம். அவர் கட்டளையிட்டதின் நோக்கத்தை அதன் பலன் விளக்கும்.