February

பெப்ரவரி 26

பெப்ரவரி 26

நான் இந்தத் தேனில் கொஞ்சம் ருசி பார்த்ததினாலே, என் கண்கள் தெளிந்ததைப் பாருங்கள் (1.சாமு.14:29)

யோனத்தானுக்கு கொஞ்சம் தேன் தேவைப்பட்டது.ஏனெனில், அவன் அந்த நாளில் சோர்ந்து, களைத்துப்போய், விடாய்த்தவனாய் இருந்தான்.தன் ஆயுதம் சுமக்கிற வேலைக்காரனோடு தனித்துச் சென்று செயற்கரிய செயலைச் செய்து,மலையின்மீது ஏறிச் சென்று பெலிஸ்தியருடன் போரிடத் துணிந்தான். அவன், கர்த்தர்நமக்காக ஒரு காரியம் செய்வார். அநேகம் பேரைக் கொண்டாகிலும் கொஞ்சம் பேரைக்கொண்டாகிலும் இரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை என்றான் (1.சாமு.14:6).

யுத்தம் முடிந்து வெற்றி கிட்டும்வரையில் படைவீரர்களில் ஒருவனாகிலும் சாப்பிடக்கூடாது என்று தகப்பன் கட்டளையிட்டதை யோனத்தான் தன்புத்தியீனத்தால் அறியாமல் இருந்தான். சவுலின் வீரர்கள் எதிரிகளைத் தொடர்ந்துசென்றதால் மிகவும் களைத்துப்போயிருந்தனர். அவர்களுக்கு கொஞ்சம் தேன் அதிகஉற்சாகமளித்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

எந்தச் சூழ்நிலையில் மனிதனைக் காட்டிலும்மேலாக தேவனுக்குக் கீழ்ப்படியவேண்டும்? பரிசுத்தாவியால் ஏவப்பட்ட பேதுரு, நீங்கள் மனுஷருடையகட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர் நிமித்தம் கீழ்ப்படியுங்கள் (1.பேது.2:13) எனக் கூறியுள்ளார்.அதே பேதுரு ஆலோசனைச் சங்கத்தில் (மக்கள் மேலான அதிகாரம் பெற்ற சனகெரீம்) மனுஷருக்குக்கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது(அப்.5:29) எனக் கூறினார்.

அதிகாரங்கள் யாவும் தேவனால் கொடுக்கப்பட்டவை.அவர்கள் வரம்புமீறி அதிகாரம் செலுத்தினால், சனகெரீம் சங்கம் அப்போஸ்தலரை இயேசுவின்நாமத்தைப் பிரசங்கிக்கக்கூடாதென்று கட்டளையிட்டதுபோல், சவுல் தன் மகனும் வீரர்களும்எதையும் சாப்பிடக்கூடாதெனக் கட்டளையிட்டதைப்போல் இருந்தால் நாம் அதற்குக்கீழ்ப்படிய வேண்டிய அவசியமே இல்லை. சில நேரங்களில் எதைச் செய்வது என்ற பிரச்சனைஎழலாம். ஆனால் தேவனுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிதலே தேனைப் போன்று இனிமையானது.