February

பெப்ரவரி 25

பெப்ரவரி 25

தேவனோ அவனை நோக்கி மதிகேடனே… என்றார் (லூக்.12:20)

ஆவிக்குரிய உண்மைகளைக் கூறும் வேதம் இவ்வுலகஐசுவரியத்தைக் குறித்தும் எச்சரித்துக் கூறியுள்ளது. சங்கீதம் 62:10ல் ஐசுவரியம்விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதேயுங்கள் எனக் காண்கிறோம். நமது இரட்சகரும்இதைப்பற்றிப் போதித்து, பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம். இங்கே பூச்சியும், துருவும் அவைகளைக் கெடுக்கும்,… பரலோகத்திலேஉங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்… உங்கள் பொக்கிஷம்எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும் (மத்.6:19.21) எனக் கூறியுள்ளார்.

இங்கே ஆண்டவர் ஆவிக்குரிய வாழ்வைக் கெடுக்கும்பொருளாசையின் ஆபத்தைக் குறித்து எச்சரித்துள்ளாh. பவுல் அப்போஸ்தலனும், போதுமென்றமனதுடனேகூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்… பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது.சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தை விட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக்குத்திக்கொண்டிருக்கிறார்கள் (1.தீமோ.6:6-,10) எனக் கூறி எச்சரிக்கிறார்.

பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.எனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திராளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என இயேசு(லூக்.12:15) கூறியுள்ளார். இதை விளக்கிக் கூறுவதற்காகவே அவர் புத்தியற்றபணக்காரனைப்பற்றி உவமையைக் கூறியுள்ளார். அவனது நிலம் நன்றாக விளைந்தது. தானியங்களைச்சேர்த்துவைப்பதற்கு இடமின்றித் தவித்தான். அவன் தன் ஆத்துமாவைப் பார்த்து, ஆத்துமாவே,உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருட்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. நீ இளைப்பாறி,புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு (லூக்.12:19) எனக் கூறினான். ஆனால் தேவனோ அவனைநோக்கி, மதிகேடனே! என்று அழைத்தார்.

இவ்வுலகப் பொருளைச் சம்பாதித்த அந்த மனஷன்மதிகேடனல்ல. அவன் தேவனைப்பற்றியோ, தன் சொந்த ஆத்துமாவைப்பற்றியோநித்தியத்தைப்பற்றியோ சற்றும் சிந்திக்கவில்லை. அதனால்த்தான் மதிகேடன்எனப்பட்டான். ஒருவன் இவ்வுலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தினாலும் தன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால்அவனுக்கு லாபம் என்ன?