February

பெப்ரவரி 17

பெப்ரவரி 17

நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன். (லூக்.22:32)

பேதுரு தன்னை முற்றிலும் ஆண்டவருக்கெனஅர்ப்பணித்தவன். காவலிலும் சாவிலும்கூட அவரைப் பின்பற்றுவதற்காகத் தீர்மானித்திருந்தான்.எதிரியைக் குறித்து பயமற்றவன். ஆனால் அடிக்கடி நிலையின்றித் தவிக்கும்உள்ளத்தையுடையவன்.

கெத்சமனே தோட்டத்தில் பேதுருவையும், தன் மற்றசீடர்களையும் அழைத்து, ஆண்டவர் இயேசு வரப்போகிற ஆபத்தைக் குறித்து எச்சரிப்புக்கொடுத்தார். தேவனுக்கும் மனுக்குலத்திற்கும் பெரிய எதிராளியாகிய பிசாசு, இரட்சகரையும்அவரது சீடர்களையும் அழித்துப்போட வகை தேடுகிறான் என்பதை இயேசு கிறிஸ்து அறிந்திருந்தார்.ஆகவே நமது ஆண்டவர் மிகுந்த கரிசனையுள்ளவராக பேதுருவிடம், சீமோனே, சீமோனே இதோகோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவுகேட்டுக்கொண்டான் எனக் கூறினார். கதிரடிக்கும் கம்பைக் கொண்டு அடித்து கோதுமைக்கதிரிலிருந்து நல்ல மணியைப் பிரிப்பார்கள். ஆண்டவர் இயேசுவும், கோதுமை கதிரடிக்கும்கம்பினால் அடிக்கப்பட்டு சுளகினால் புடைக்கப்படுதல் போன்று பேதுருவும் விரைவில் பிசாசின்கொடிய சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் உட்படவேண்டும் எனக் கூறினார்.

நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்குஉனக்காக வேண்டிக்கொண்டேன் என்றார் ஆண்டவர். இயேசுவின் ஜெபப்பட்டியலில் இடம்பெற்றமனிதன் பேதுரு என்பதை அவனுக்கு உணர்த்தினார். பேதுரு விழுந்துபோனான். ஆனால் ஆண்டவரின்ஜெபத்தின் பலனால் அவன் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டான்.

நமக்கு மிகுந்த சோதனைகள் வருவதுண்டு. அப்பொழுதுநமக்காக ஜெபிக்கும் ஒரு பிரதான ஆசாரியன் (எபி.4:14) உண்டு என்பதை நினைவில்கொள்ளவேண்டும். நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்என்று கூறும் ஆண்டவர் நம்மோடு இருப்பதால் சோதனையில் விழுந்த நாம் கைவிடப்படுவதில்லை.நன்மைக்காக நொறுக்கப்படுகிறோம். அழிக்கப்படுவதற்காக அல்ல, அமிழ்த்தப்படுவோம்.ஆனால் அழிக்கப்படோம் என்பது எவ்வளவு நிச்சயம்.